கட்டுரைகள்
Published:Updated:

நெருங்குகிறது குளிர்காலம்… சருமத்தை பாதுகாப்பதற்கான முழு சர்வைவல் கிட்!

சருமத்தை பாதுகாப்பதற்கான முழு சர்வைவல் கிட்!
பிரீமியம் ஸ்டோரி
News
சருமத்தை பாதுகாப்பதற்கான முழு சர்வைவல் கிட்!

குளியலுக்குப் பின் சருமம் ஈரமாக இருக்கும்போது, மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தி உடலை ஈரப்பதமாக்குவது, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும்.

குளிர்காலத்தில் சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார், புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தோல்நல மருத்துவத்துறைப் பேராசிரியர் மருத்துவர்க. உதயசங்கர்.

குளிர்காலத்தில் வீசும் குளிர்ந்த மற்றும் உலர் காற்று சருமத்தை சீர்குலைப்பதுடன், பலருக்கு சரும வறட்சி மற்றும் சரும அரிப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வறட்சியால் சருமத்தில் விரிசலும் எரிச்சலும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, குளிர்காலத்தில் சருமத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சருமத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெய்களை அகற்றிவிடும் கடுமையான சோப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

க. உதயசங்கர்
க. உதயசங்கர்

1. ஈரமாக்கு... ஈரமாக்கு... ஈரமாக்கு!

குளியலுக்குப் பின் சருமம் ஈரமாக இருக்கும்போது, மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தி உடலை ஈரப்பதமாக்குவது, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். ஏனென்றால், மாய்ஸ்ச்சரைசர் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உள்ளேயே வைத்திருக்க உதவும். எனவே குளித்தவுடன் முகம் மற்றும் உடலுக்கு நல்ல மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக உறங்கச் செல்லும் முன் பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு முறை பூசிக்கொள்ளலாம்.

முகத்துக்கு மாய்ஸ்ச்சரைசர்

குளிர்ந்த மற்றும் வறண்ட காலங்களில் சருமத்தைப் பாதுகாக்க இலகுவான லோஷன்கள் போதுமானதாக இருக்காது. அதனால், சிறப்பான ஈரப்பதம் கொடுக்கக்கூடிய ஜோஜோபா (Jojoba Oil) எண்ணெய் மற்றும் ஹைலூரோனிக் (Hyaluronic acid) ஆசிட், லாக்டிக் ஆசிட் மூலப்பொருள்கள் இருக்கும் மாய்ஸ்ச்சரைசர்கள் நல்லது.

நெருங்குகிறது குளிர்காலம்… சருமத்தை பாதுகாப்பதற்கான முழு சர்வைவல் கிட்!

மாய்ஸ்ச்சரைசர் பரிந்துரைகள்

விலையுயர்ந்த சருமப் பராமரிப்புப் பொருள் கள்தான் நன்றாகப் பயன் தரும் என்பதில்லை. பயன் தரக்கூடிய நல்ல மாய்ஸ்ச்சரைசர்கள் குறைவான விலையிலும் கிடைக்கும்.

கிளிசரின், லானோலின், மினரல் ஆயில், பெட்ரோலேட்டம் மற்றும் ஷியா வெண்ணெய் போன்ற மூலப்பொருள்கள் அடங்கிய க்ரீம்களும் நல்ல பயனைத் தரும்.

2. சன்ஸ்கிரீனை மறந்துவிடாதீர்கள்!

குளிர்காலத்தில் சூரியன் அதிக வெப்பத்தை உமிழாது என்பதால், நம் சருமம் சேதமடையும் அபாயம் இல்லை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. வெளியே புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, முகம், கழுத்து, காதுகள் மற்றும் கைகள் போன்ற ஆடைகளால் மூடப்படாத சருமப்பகுதிகளில் குறைந்தபட்சம் 30 SPF கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். குளிர்காலத்தில் லோஷன்கள், ஸ்ப்ரேக்களைவிட க்ரீம்கள் அதிக ஈரப்ப தத்தைக் கொடுக்கும். கையுறைகள் மற்றும் புற ஊதா பாதுகாப்புடன் கூடிய சன்கிளாஸ்கள் போன்றவற்றையும் அணிந்து கொள்ளலாம்.

3. நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்;

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை உடலுக்குள்ளிருந்து ஈரப்பதத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க, ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நெருங்குகிறது குளிர்காலம்… சருமத்தை பாதுகாப்பதற்கான முழு சர்வைவல் கிட்!

4. க்ளென்சர் (Cleanser)

முகத்துக்கான ஃபேஸ் க்ளென்சரில் (Face Cleanser), ‘மென்மையானது’ மற்றும் ‘ஈரப்பதம்’ என்று குறிப்பிட்டிருக்கும் தயாரிப்புகளைத் தேடி வாங்கவும். அதேசமயம் ஆல்கஹால் கொண்ட தயாரிப்புகள் சருமத்தை உலர்வாக்கிவிடும் என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்கவும். உடலுக்கான க்ளென்சரில் (Body Cleanser), திரவம், ஜெல், மூஸ் ஃபார்முலேஷன்களில் பொதுவாக அதிக க்ரீம் தன்மை கொண்ட மற்றும் நறுமணம் இல்லாத க்ளென்சர்கள் சிறந்தவை. அரிக்கும் தோலழற்சி (Eczema) உள்ள நோயாளிகளுக்கு, பெட்ரோலேட்டம், ஷியா வெண்ணெய் மற்றும் சிலிகான்கள் கொண்ட தயாரிப்புகள் நல்லது.

5. புத்துணர்ச்சியூட்டும் பொருள்கள் (Rejuvenating products)

குளிர்காலத்தில் கிளைகோலிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் அல்லது ரெட்டினோல் போன்ற முதுமை எதிர்ப்பு மூலப்பொருள் களைக் கொண்ட தயாரிப்புகளைக் குறைந்த அளவில் அடிக்கடி பயன்படுத்தலாம். ஏனெனில் இவை சருமத்தை உலர்வடையச் செய்யும் தன்மையும், எரிச்சல் ஏற்படுத்தும் தன்மையும் கொண்டவை.

குளிர்காலத்தில் பாதுகாப்போம் சருமத்தை!