Published:Updated:

காலத்துக்கேற்ற மாற்றங்கள் கட்டாயம்! - கோவிட்டுக்குப் பிறகு பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ்

 டிஜிட்டல் தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
டிஜிட்டல் தொழில்நுட்பம்

கோவிட்டுக்கு முன்னும் பின்னும் பிசினஸை எப்படிச் செய்கிறோம் என்று பார்க்க வேண்டும்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலரின் பிசினஸ்களும் கடுமையாக பாதிப் படைந்துள்ளன. பாதிப்படைந்த தங்களது பிசினஸை மீண்டு வெற்றி அடையச் செய்வது எப்படி என்பதற்கான வழிகளைப் பலரும் தேடி வருகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக நாணயம் விகடன் “கோவிட்டுக்குப் பிறகு, பிசினஸ் சக்ஸஸ் எப்படிக் கொண்டு வரலாம்?” என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் டெர்பி ஜீன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய் கபூர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது...

திட்டமிடல் அவசியம்

``பிசினஸ் செய்ய வேண்டுமெனில், கூர்மையான அறிவு, பேரார்வம் (passion), எந்தச் சூழ்நிலையிலும் நேர்மையான எண்ணங்களுடன் இருப்பது, கடின உழைப்பு, உறுதி ஆகியவை நிச்சயம் தேவை. ஊரடங்கு நிலைமைகளைக் கவனித்து நெருக்கடியான சூழலில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான திட்டங்களை வைத்திருந்தோம்.

விஜய் கபூர்
விஜய் கபூர்

பர்ஃபாமன்ஸைப் பொறுத்து சம்பளம்!

உலகப் போர்கள், சுனாமி, பணமதிப்பிழப்பு என எல்லாவற்றை விடவும் இந்த கொரோனா மிகப்பெரியது. தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், அனைவரும் வீட்டிலிருந்து வேலையை ஆரம்பித்தோம். முதலில் பணம் தொடர்பான விஷயங் களில் கவனம் செலுத்தினோம். இருக்கும் பணத்தை எவ்வாறு நிர்வாகம் செய்வது, தேவையில்லாத செலவுகளை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து ஆலோசித்தோம்.

பிசினஸைப் பொறுத்தவரை, நாம் லாபகரமாக இருப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில், ஒரு பிசினஸை நம்பி ஆயிரக் கணக்கான குடும்பங்கள் உள்ளன. வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தில் 70% மட்டுமே வழங்கப்படும். மீதி 30% அவர்களின் பர்ஃபாமன் ஸைப் பொறுத்து வழங்க முடிவு செய்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிஜிட்டல் தொழில்நுட்பம்

கோவிட்டுக்கு முன்னால் எப்படி பிசினஸ் செய்தோம், கோவிட்டுக்குப் பின்னர் எப்படி பிசினஸ் செய்கிறோம் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். கம்பெனியை டிஜிட்டலாக எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை கோவிட் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. டிஜிட்டலாகத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களின் வழியாக வாடிக்கையாளர்களைச் சென்றடை வதற்கான வழிகளைச் செய்தோம்.

மேலும், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைத்து கொரோனா கிருமிகள் தாக்காமல் இருக்க ‘கோவிட் ப்ளாக்’ என்ற புதிய நடைமுறையை அறிமுகம் செய்தோம். எங்கள் தயாரிப்புகளின் விலையைக் குறைத்து, தரத்தை அதிகரித்தோம். இ-காமர்ஸ், புராடக்ட் மார்கெட் ஃபிட், காஸ்ட் ரிடக்‌ஷன், அட்வர்டைஸிங், குவாலிட்டி எனப் பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி காலத்துக்கு ஏற்றவாறு மாற வேண்டும்” என்றவர், தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

சில சுவாரஸ்யமான கேள்விகள்

பண்டிகைக் காலங்களில் ஜவுளி விற்பனை எப்படியிருக்கும்?

‘‘கடந்த வருடங்களை ஒப்பிடுகையில் ஜவுளி விற்பனை 60% குறைவாகவே இருக்கும். எனினும், கஸ்டமர்கள் ஷாப்பிங் செய்வார்கள். அந்த ஷாப்பிங்கை யாரிடம் செய்யப் போகிறார்கள் என்பதே கேள்வி. கஸ்டமர்களின் தேவைகளைப் புரிந்து அதற்கு ஏற்றவாறு யுக்திகளை வடிவமைக்க வேண்டும். சமூக வலைதளங்கள் வழியாக விளம்பரங்களை பல்வேறு வகையில் அதிகமாகச் செய்தால், வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னுடைய அப்பா திருப்பூரில் சிறு தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா தொடர்பான பல பிரச்னைகள் உருவாகியுள்ளது. பலரும் தொழிலை கைவிடக் கூறுகின்றனர். இது சரியா?

‘‘தொழிலைக் கைவிடுவது மிகவும் எளிதானது. ஆனால், அதை மீண்டும் தொடங்குவது அவ்வளவு சுலபமல்ல. செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சில நாள்கள் வேறு வழியில் ஏதாவது ஆர்டர்களைப் பெற முடியுமா என முயற்சி செய்ய வேண்டும். நாங்கள் முதலில் டிஸ்கவுன்ட் சேலில் இருக்கும் அனைத்து புராடக்டுகளையும் விற்பனை செய்தோம். பின்னர், பண்டிகைக் காலம் நெருங்கி வருகிறது என்பதையும் மனதில் வைத்து புதிதாக ஸ்டாக்குகளைக் கொண்டு வந்தோம். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கஸ்டமர்களிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசினோம். ஃபிக்ஸட் சேலரி என்பதில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம். கடை வாடகைகளைக் குறைப்பதற்கான முயற்சிகளைச் செய்தோம். இதேபோல, பல்வேறு முயற்சிகளை எடுத்து கடினமாக உழைத்தால், தொழிலை மீண்டும் லாபகரமான நோக்கில் எடுத்து செல்லலாம்.’’

காலத்துக்கேற்ற மாற்றங்கள் கட்டாயம்! - கோவிட்டுக்குப் பிறகு பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ்

எனக்கு 60 வயதாகிறது. ஹெச்.ஆர் துறையில் பல வருட அனுபவம் உள்ளது. குறைந்த அளவில் முதலீடு செய்து தொடங்கும்படி ஏதேனும் ஒரு பிசினஸைக் கூற முடியுமா?

‘‘அப்பா, அம்மாவின் வேலை தன்னுடைய பையன் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறானோ அதற்கு உதவி செய்வது. அவன் என்னவாக ஆக வேண்டும் என முடிவு செய்வது அல்ல. அதேமாதிரி, நீங்கள் எந்த பிசினஸ் செய்தால் நன்றாக இருக்கும் என என்னால் சொல்ல முடியாது. உங்களுடைய ஆர்வம் எதில் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. உங்களுக்கு எதில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அந்தத் துறையில் நீங்கள் முதலீடு செய்து பிசினஸைத் தொடங்கலாம்.’’

பெரும்பாலும் அடுத்த ஆண்டுவரை அனைவரும் வீட்டில் இருந்துதான் பணிபுரியப் போகிறோம். இதனால், தினமும் கேஷுவல் உடைகளைதான் அணிகிறோம். இந்தநிலையில், டெக்ஸ்டைல் துறை எப்படி இருக்கப்போகிறது?

‘‘மிகவும் சரி. கொரோனாவுக்கு முன்பு 1% வொர்க் ஃப்ரம் ஹோம் இருந்தது. கொரோனாவுக்குப் பின் 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆனால், மீதமுள்ள 85% வொர்க் ஃப்ரம் ஹோம் இல்லை. நகரங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பிற இடங்களில் வீட்டிலிருந்து வேலை என்பது பெரிதாக இல்லை. அந்த இடங்களில் வசிக்கும் மக்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், உடைகளை அணிந்துதான் ஆக வேண்டும். அதற்கு ஏற்றவாறு உடை வடிவமைப்புகளை புதிதாக அறிமுகப்படுத்தினால் நிச்சயம் டெக்ஸ்டைல் துறை சிறப்பாகவே இருக்கும்.

சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பரங்களில் என்னென்ன யுக்திகளைக் கையாளலாம்?

‘‘சமூக வலைதளங்கள் அச்சு மீடியாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தற்போது, சமூக வலைதளங்கள் தவிர்த்து மீதமுள்ள தளங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கான செலவுகளை எடுத்து அதை சமூக வலை தளங்களில் வெளியிட்டோம். நாங்கள் 38 பேரை தேர்வு செய்து அவர்கள் வழியாக வீடியோ உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தினமும் ஐந்து கன்டென்டுகளைப் பெற்று அதைச் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தோம். இதனால் நாங்கள் லாபத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறோம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காண: https://bit.ly/2SdWAuZ