Published:Updated:

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

தேவை கவனம்
பிரீமியம் ஸ்டோரி
தேவை கவனம்

தேவை கவனம்

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

தேவை கவனம்

Published:Updated:
தேவை கவனம்
பிரீமியம் ஸ்டோரி
தேவை கவனம்
வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

`ஆணுக்குப் பெண் இளைப்பில்லை' என்று ஓட ஆரம்பித்து, இன்று `பெண்ணுக்குப் பெண்ணே போட்டி' என்கிற இடம்வரை வந்துவிட்டோம். போட்டி, போட்டியாகவே இருக்க, மற்றபடி எல்லா விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். அதைச் சாத்தியப்படுத்தும் வழிகளைக் காட்டுகிறார்கள் சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் வித்யா முரளியும் உளவியல் ஆலோசகர் சிந்து மேனகாவும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

காலத்துக்கேற்ற உதவி!

மாதவிடாய் நாள்களிலும், குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாதபோதும் பெண்களால் நேரத்துக்கு அலுவலகம் வர முடியாமல் போகலாம். பெர்மிஷன் தேவைப்படலாம். தலைமைப் பொறுப்பில் பெண் இருக்கும்பட்சத்தில், இதை அனுமதிப்பதோடு, அந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை இன்னொரு நேரத்துக்கு மாற்றிக்கொடுத்து உதவலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

டிரெடிஷனல் சீனியர் வெர்சஸ் டெக்கி ஜூனியர்

நாளுக்குநாள் டெக்னாலஜி வளர்ந்துகொண்டே இருக்கிறது. டிரெடிஷனல் முறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிற சீனியர் பெண்களுக்கு, டெக்னாலஜியில் கில்லியாக அலுவலகத்துக்குள் நுழைகிற ஜூனியர் பெண்கள் மேல் எரிச்சல் வரலாம். தன் வேலைக்குப் பிரச்னை வந்துவிடுமோ என்ற பயத்தைத் தள்ளி வைத்துவிட்டு, தங்களுடைய அனுபவத்தை சீனியர் பெண்களும், டெக்னாலஜி அறிவை ஜூனியர் பெண்களும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளலாம்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

ஆண்களை ஃபாலோ செய்யலாம்!

ஒரு டீமில் இரண்டு பெண்கள் ஒற்றுமையாக வேலைபார்க்க முடியாது என்ற கருத்து இந்தக் காலத்திலும் இருக்கிறது. உண்மையில் அலுவலகத்தில் ஆண்களுக்கு இடையிலும் வேலை தொடர்பான பிரச்னைகள் வரும். அவற்றை அவர்கள் அஃபிஷியலாக ஹேண்டில் செய்வார்கள். வேலையில் பிரச்னை தீர்ந்ததும், ஒன்றாக டீ குடிக்கச் செல்வார்கள். பெண்களும் தங்களுடைய அஃபிஷியல் ரிலேஷன்ஷிப்பில் எந்த உரசலும் இல்லாமல் இருக்க, இதை ஃபாலோ செய்யலாம்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

மென்ட்டாராக மாறுங்கள்!

அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்கிற பெண்களுக்கு, மற்ற பெண்கள் மென்ட்டாராகச் செயல்படலாம். அதாவது, அலுவலகத்தின் ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன்ஸ் பற்றி சொல்லித்தரலாம். வேலையிடத்தில் நீங்கள் சந்தித்த அதே பிரச்னையை உங்கள் சக பெண் ஊழியர் சந்திக்கிறபோது, உங்கள் அனுபவத்தையும் மீண்ட விதத்தையும் சொல்லி உதவலாம்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

மனதாரப் பாராட்டுங்கள்!

ஹவுஸ்கீப்பிங்கில் இருந்து மேனேஜர்வரை நீங்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், பெண் என்ற அடிப்படையில் சின்ன புன்னகையில் ஆரம்பித்து நல்ல நட்புவரை பகிர்ந்துகொள்ளலாம். ‘இன்னிக்கு உங்க டிரஸ் அழகா இருக்கு’ எனப் பாராட்டலாம். டார்கெட்டை முடித்ததற்கு வாட்ஸ்அப் குரூப்பில் பூங்கொத்து அனுப்பலாம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டை வெளிப்படுத்தலாம்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

விசாகாவுக்கு வழிகாட்டலாம்!

பாலியல் பிரச்னைகளை அணுக இன்றைக்கு எல்லா அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி இருந்தாலும், `எதற்குப் பிரச்னை’ என்று பல பெண்களும் தனக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகளை வெளியில் சொல்ல விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்களின் பயத்தைப் போக்கும் வகையில் விசாகா கமிட்டியை அணுக உதவி செய்யலாம்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

கேலியில் இல்லை ஜாலி!

வேலையிடத்தில் பெண்களைக் கிண்டல் செய்பவர்களும், அவர்களது அறிவைப் பார்க்காமல் உருவத்தைக் கேலி செய்பவர்களும் இப்போதும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுடைய சக பெண் ஊழியர் இருந்தால், கேலி பேசுபவர் இன்னொரு பெண்ணாக இருந்தாலும் தட்டிக் கேளுங்கள்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

அஃபிஷியல் ஆதரவு!

உங்கள் டீமில் வேலைபார்க்கிற ஒரு பெண் புரொமோஷனில் உங்களுக்கு மேலதிகாரியாக உயரும்பட்சத்தில், அவரை உங்களுக்கு பர்சனலாக பிடிக்கவில்லையென்றாலும் அஃபிஷியலாக ஆதரியுங்கள்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

ஆன்சைட்டுக்கு அனுமதி!

ஆன்சைட்டுக்கு பெண்ணை அனுப்புவதில் பெண் அதிகாரிகளுக்கே தயக்கம் இருக்கிறது. திருமணம், கருத்தரிப்பு, மகப்பேறு என்று விடுமுறை எடுப்பார்கள் என்ற எண்ணம்தான் காரணம். மேலே சொன்ன காரணங்களைச் சொல்லி சம்பந்தப்பட்ட பெண்ணே ஆன்சைட்டை மறுத்தால் சரி. ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக ஆன்சைட்டுக்குச் செல்ல விரும்புகிற பெண்களை, யாரேனும் தடுத்தால் சக பெண் ஊழியராக அதைக் கேள்வி கேட்கிற முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும்.

வேலையிடத்தில் வேண்டாமே வெறுப்பு!

அக்கப்போர் வேண்டாமே!

உடன் வேலைபார்க்கும் பெண்களின் நடத்தையை நீங்களும் விமர்சிக்க வேண்டாம், மற்றவர்கள் விமர்சிப்பதையும் அனுமதிக்க வேண்டாம். விமர்சனத்துக்குள்ளாகும் நபராக நீங்கள் இருந்தால் எப்படி ஃபீல் செய்வீர்கள் என யோசித்தாலே, இது சாத்தியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism