Published:Updated:

ஒரு லட்சம் ரூபாயில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிங்கப்பூர், துபாய் டூர்!

 - மோடியின் பினாமி கம்பெனி என்று ஏமாற்றிய நிறுவனம்!
பிரீமியம் ஸ்டோரி
- மோடியின் பினாமி கம்பெனி என்று ஏமாற்றிய நிறுவனம்!

- மோடியின் பினாமி கம்பெனி என்று ஏமாற்றிய நிறுவனம்!

ஒரு லட்சம் ரூபாயில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிங்கப்பூர், துபாய் டூர்!

- மோடியின் பினாமி கம்பெனி என்று ஏமாற்றிய நிறுவனம்!

Published:Updated:
 - மோடியின் பினாமி கம்பெனி என்று ஏமாற்றிய நிறுவனம்!
பிரீமியம் ஸ்டோரி
- மோடியின் பினாமி கம்பெனி என்று ஏமாற்றிய நிறுவனம்!

ஏமாற்று வித்தகர்களிடம், தாங்கள் விதவிதமாக ஏமாந்த கதையை விவரிப்பவர்களைப் பார்க்கும்போது பரிதாபம் வரவில்லை. ‘விட்டில் பூச்சியைப்போல கவர்ச்சி விளக்கைத் தேடிப்போய் ஏன் விழுகிறார்கள்?’ என்கிற ஆதங்கம்தான் மிஞ்சுகிறது. இப்படித்தான் ‘டூர் பேக்கேஜ்’ என்ற பெயரில் ஸ்டார் ஹோட்டல், வெளிநாடு டூர் என்றெல்லாம் புருடாவிட்டு பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் பறித்திருப்பதாகத் தனியார் நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது!

இப்படி ஏமாந்தவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த தினேஷ்குமார். அவர் நம்மிடம், ‘‘நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில வேலை பார்க்குறேன். என் மனைவி ஐடி கம்பெனியில வேலை பார்க்குறாங்க. கொரோனாவால ரெண்டு வருஷமா வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்ததால போன நியூ இயருக்கு டூர் போகலாம்னு பிளான் பண்ணினோம். அப்பதான், ‘கர்மா ரிசார்ட்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி’ங்கிற கம்பெனியில இருந்து எனக்கு கால் வந்தது. துரைப்பாக்கத்தில் இருக்குற ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குக் கூப்பிட்டாங்க. அங்கே டூர் பேக்கேஜ் பத்தி ஒருத்தர் விளக்கினார். அவங்க பேசுனதை நம்பி, ஒரு லட்ச ரூபாய்ல அஞ்சு வருஷ பேக்கேஜ் எடுக்க ஓகே சொன்னோம். ஒரு வருஷத்துக்கு ஆறு நைட், ஏழு பகல் என்ஜாய் பண்ணலாம்னு சொன்னாங்க... போனஸா ஒரு வருஷம் தர்றதாவும் சொன்னாங்க. ரெண்டு நாள் கழிச்சு பணம் கட்டுறோம்னு சொன்னதுக்கு, ‘இந்த ஆஃபர் திரும்பக் கிடைக்காது. மிஸ் பண்ணிடாதீங்க’னு சொன்னதால ஒரு லட்சம் ரூபாயைக் கட்டிட்டு வந்துட்டோம். அப்புறம் அவங்களுக்கு போன் பண்ணினா, எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ஹேப்பி நியூ இயரைக் கொண்டாட நினைச்ச எங்களுக்கு சோகமான நியூ இயராகிடுச்சு’’ என்றார் வருத்தத்துடன்.

ஒரு லட்சம் ரூபாயில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிங்கப்பூர், துபாய் டூர்!

இதே நிறுவனத்திடம் பணத்தை இழந்த தஞ்சாவூரைச் சேர்ந்த காட்வின் என்பவர் நம்மிடம், ‘‘சமீபத்துல கவர்மென்ட் வேலையில இருந்து அப்பா ரிட்டயர்டு ஆனார். அதனால அப்பா, அம்மாவோட வெளிநாடு டூர் போக ஆசைப்பட்டேன். அந்த நேரத்துலதான், அந்த கம்பெனியில இருந்து தஞ்சாவூர்ல ஒரு ஹோட்டலுக்குக் கூப்பிட்டாங்க. நாங்க குடும்பத்தோட அங்கே போனதும் எங்களை யோசிக்கவே விடாம, பேசிக்கிட்டே இருந்தாங்க. ஒரு லட்ச ரூபாய்ல ஸ்பெயின், நெதர்லாந்து, சிங்கப்பூர், துபாய்க்கெல்லாம் போகலாம்; நட்சத்திர ஹோட்டல்ல தங்கலாம்னு சொன்னாங்க. ‘ஒரு லட்சத்துல இதெல்லாம் எப்படிங்க சாத்தியம்?’னு கேட்டதுக்கு, ரகசியமா எங்க காதுல, ‘வெளியே சொல்லாதீங்க... இது மோடியோட பினாமி கம்பெனி. அதனாலதான், இவ்வளவு வசதிகளை எங்களால செஞ்சு கொடுக்க முடியுது’னு சொன்னாங்க. மோடி பேரைச் சொன்னதால ரொம்ப நம்பிக்கை வந்துடுச்சு. அதனால, ஸ்பாட்லயே ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயைக் கட்டிட்டு வந்தோம். அப்புறம் அவங்க எங்க போனையே எடுக்கலை...” என்று அவர் ஏமாந்த கதையை விவரித்தார்.

தேவன் ஏகாம்பரம்
தேவன் ஏகாம்பரம்

இதற்கிடையே திரைப்பட பின்னணிப் பாடகர் தேவன் ஏகாம்பரம், தன் பெயரைப் பயன்படுத்தி அந்த நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நம்மிடம் அவர், ‘‘கர்மா ரிசார்ட்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டிங்கிறது ஒரு குஜராத் கம்பெனி. போன வருஷம்தான் சென்னையில் பிராஞ்ச் ஆரம்பிச்சாங்க. குஜராத்துல இந்த கம்பெனி மேல பல மோசடி வழக்குகள் இருக்கு. கிரெடிட் கார்டு வெச்சுருக்கறவங்க, புதுசா கார் வாங்குறவங்களோட செல்போன் நம்பர்களைக் கண்டுபிடிச்சு போன் பண்றாங்க. எனக்கும் அப்படி போன் பண்ணப்ப, நான் வேண்டாம்னு மறுத்துட்டேன். அப்பவும் அடிக்கடி போன் பண்ணவங்க, 80 ஆயிரம் ரூபாய் பேக்கேஜ் பத்திச் சொல்லவும், 45 ஆயிரம்தான் கட்ட முடியும்னு சொல்லி, மெம்பர்ஷிப் சேர்ந்தேன். ஆனா, பணம் கட்டின பிறகு எந்த பதிலும் இல்லை. அவங்க ஆபீஸுக்குப் போய், சத்தம் போட்டதுக்குப் பிறகு, கொடைக்கானலுக்கு புக் பண்ணிக் குடுத்தாங்க. ‘கோடை ரிசார்ட்ஸ்’னு சொன்னாங்க... அங்கே போனா, சாதாரண ஒரு அபார்ட்மென்ட் மாதிரியான ஒரு இடத்துல ரூம் புக் பண்ணியிருந்தாங்க. குடும்பத்தோட போன எனக்குப் பெரிய அதிர்ச்சி. தலையெழுத்தேனு தங்கிட்டு வந்தோம். அதாவது பரவாயில்லை.. நான் அவங்களோட கஸ்டமர்னு என்னோட பெயரைச் சொல்லி பலரை ஏமாத்தியிருக்காங்க. பிரச்னை வந்த பிறகு, ‘கர்மா’ங்கிற கம்பெனி பேரை ‘வலோரா’னு மாத்திட்டு, ஏமாத்துற வேலையைத் தொடர்றாங்க’’ என்றார் ஆவேசமாக!

ஒரு லட்சம் ரூபாயில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிங்கப்பூர், துபாய் டூர்!


மேற்கண்ட புகார்கள் குறித்து வலோரா ரிசார்ட்ஸ் அண்ட் ஹாஸ்பிடாலிட்டியின் சேல்ஸ் மேனேஜரான அண்ணாதுரையிடம் பேசினோம். ‘‘இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. ஒவ்வொருவரும் என்ன பேக்கேஜ் எடுக்கிறார்களோ, அதற்குரிய வசதிகளைச் செய்து தருகிறோம். தற்போது எங்கள்மீது புகார் கொடுத்தவர்களில் சிலருக்கு பேக்கேஜ் கொடுத்திருக்கிறோம். சிலருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கிறோம். நிர்வாகக் காரணங்களுக்காகத்தான் கம்பெனியின் பெயரை மாற்றினோம். தேவன் ஏகாம்பரம் செலுத்திய பணத்துக்குரிய சேவையை வழங்கிவிட்டோம். ஆனால், தனிப்பட்ட விளம்பரத்துக்காக எங்கள்மீது புகார் கொடுத்திருக்கிறார். எங்கள் மீதான புகார்களை சட்டப்படி எதிர்கொள்வோம்’’ என்றார்.

நோ கமென்ட்ஸ்!