Published:Updated:

சர்ச்சை தீர்ப்பளித்த நீதிபதிக்கு ஆணுறைகளை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்த பெண்... ஏன்?

நீதிமன்றம்
நீதிமன்றம்

மத்திய அரசு நீதிபதி புஷ்பாவுக்கு மேலும் ஓராண்டு பணிநீட்டிப்பு வழங்கியுள்ள நிலையில், திரிவேதியின் இந்தச் செயல் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம், போக்சோ வழக்கு ஒன்றில் பெரும் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கனெடிவாலாவுக்கு, குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆணுறைகளை அனுப்பி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நீதிபதி புஷ்பா
நீதிபதி புஷ்பா
`ஆடையில்லாமல் தொட்டால்தான் பாலியல் தாக்குதலா?!' - என்ன சொன்னது மும்பை உயர்நீதிமன்றம்?

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் புஷ்பா கனெடிவாலா. ``ஆடைக்கு மேல் தீண்டுவது பாலியல் அத்துமீறல் அல்ல, தோலும் தோலும் தொட்டுக்கொள்ளும்படி செய்யும் அத்துமீறலே பாலியல் தாக்குதல்" என்று கூறி, சிறுமியிடம் அத்துமீறியவனை போக்சோ வழக்கில் இருந்து இவர் விடுவித்தது பெரும் சர்ச்சையானது.

நீதிபதி புஷ்பா கனெடிவாலா ஜனவரி 19-ம் தேதி அளித்த தீர்ப்பில், ``12 வயது சிறுமியின் ஆடையின் மேலாக அவள் உடம்பைத் தொடுவது, போக்சோ சட்டத்தில் பாலியல் குற்றாமாகாது. உடலோடு உடல் தொடர்பில் இல்லை" எனத் தீர்ப்பளித்ததுடன் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார்.

இதேபோன்று மற்றொரு சிறார் பாலியல் வதை வழக்கிலும், ``சிறுமியின் கைகளைப் பற்றிக்கொண்டபடி பேன்ட் ஜிப்பை அவிழ்ப்பது பாலியல் தாக்குதல் ஆகாது" எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்தார். இந்த இரு வழக்குகளிலும் நீதிபதி புஷ்பா அளித்த தீர்ப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

தீர்ப்பு
தீர்ப்பு
இன்னும் எத்தனை `புஷ்பா'க்களின் தீர்ப்புகள் நம் கவனத்திற்கு வராமல் போயிருக்குமோ?! #VoiceOfAval

நீதிபதி புஷ்பா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதனால், தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய இரு தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி புஷ்பா கானெடிவாலாவிற்கு, அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 150 ஆணுறைகளை அனுப்பி அவர் அளித்த தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சமூக செயற்பாட்டாளரான தேவ்ஸ்ரி திரிவேதி, நீதிபதி புஷ்பா கானெடிவாலாவின் சேம்பர், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சின் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 12 வெவ்வேறு இடங்களுக்கு ஆணுறைகளை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``அநீதியை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீதிபதி புஷ்பாவின் தீர்ப்பால் ஓர் அப்பாவி சிறுமிக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே அவர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்" என்றிருக்கிறார்.

மத்திய அரசு நீதிபதி புஷ்பாவுக்கு மேலும் ஓராண்டு பணிநீட்டிப்பு வழங்கியுள்ள நிலையில், திரிவேதியின் இந்தச் செயல் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம், திரிவேதியின் செயலுக்கு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

- ஆனந்தி ஜெயராமன்

அடுத்த கட்டுரைக்கு