Published:Updated:

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

ரயில்வே பணியிடங்களுக்கான RRB NTPC தேர்வு முடிவுகள் ஜனவரி 15-ம் தேதி வெளியாகின.

ஹேஷ்டேக்

ரயில்வே பணியிடங்களுக்கான RRB NTPC தேர்வு முடிவுகள் ஜனவரி 15-ம் தேதி வெளியாகின.

Published:Updated:
ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?

#YogiWillbeBack

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சாதனைகளை அடுக்கி, பா.ஜ.க-வினர் இந்த ஹேஷ்டேக்கை இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்ட் செய்தனர். #YogiReturns,

#UpyogiHaiYogi உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் கடந்த வாரம் டிரெண்டாகின.

#ViratKohli

விராட் கோலி, இந்திய டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, இந்த ஹேஷ்டேக் இந்தியா டிரெண்டிங்கில் இரண்டு நாள்கள் இடம்பிடித்தது. கோலி பதவி விலகியதற்கு கங்குலியும், ஜெய் ஷாவும்தான் காரணம் என அவருடைய ரசிகர்கள் இருவரையும் திட்டித் தீர்த்ததால், #Ganguly #Jayshah #BCCI ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகின.

#RRBNTPC_Scam

ரயில்வே பணியிடங்களுக்கான RRB NTPC தேர்வு முடிவுகள் ஜனவரி 15-ம் தேதி வெளியாகின. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், முடிவுகளைத் திருத்தி வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்து, இந்திய அளவில் முதலிடத்தில் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.

ஹேஷ்டேக்

#SayNoToSanskrit

கர்நாடகாவில் சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, கன்னடர்கள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர்.

#KamalKhan

உத்தரப்பிரதேசத்தின் மூத்த பத்திரிகையாளரும், NDTV-ன் மூத்த செய்தி ஆசிரியருமான கமல் கான், ஜனவரி 14-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் 24 மணி நேரத்துக்கு மேலாக டிரெண்டானது.

#HC_Said_Lolipop_Kejriwal

`டெல்லியிலுள்ள வீடுகளில் 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று?’ என்று ஆம் ஆத்மி அரசிடம் கேள்வி எழுப்பிய டெல்லி நீதிமன்றம், `இவையெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்களை நோக்கி நீங்கள் வீசிய லாலிபாப்கள்’ என்று கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.

#ChennaiRains

சில நாள்களுக்குப் பின்னர், மீண்டும் சென்னையில் மழை பெய்ததையடுத்து, ஜனவரி 17-ம் தேதி அதிகாலை முதல் தமிழ்நாடு அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டானது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism