Published:Updated:

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

ஜனவரி 30-ம் தேதி அன்று, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

ஹேஷ்டேக்

ஜனவரி 30-ம் தேதி அன்று, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

Published:Updated:
ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?

#NeoCov

தென்னாப்பிரிக்காவில், கொரோனாவிலிருந்து மாறுபட்ட `நியோகோவ்’ என்ற பயங்கர வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக, சீன விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த ஹேஷ்டேக் உலக டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது!

#AusOpen #RafaelNadal

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில், டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தனது 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற காரணத்தால், இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் உலக அளவில் டிரெண்டாகின!

#Canada

கனடாவில், `ட்ரக் ஓட்டுநர்கள் ஒரு மாகாணத்திலிருந்து, மற்றொரு மாகாணத்துக்குச் செல்ல கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்’ என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இதை எதிர்த்து ட்ரக் ஓட்டுநர்கள் கனடாவில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்கினர். கனடா பிரதமர் தனது குடும்பத்தோடு ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், இந்த ஹேஷ்டேக் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் டிரெண்டானது!

#ஆயிரம்_கைகள்_கூடட்டும்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விண்ணப்பத்தை ட்விட்டரில் பகிர்ந்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்த ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியிருந்தார். அதனால் சில மணி நேரம் இந்த ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் இடம்பிடித்தது!

#Pegasus

2017-ம் ஆண்டு, இஸ்ரேலிடமிருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியதாக `நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டதையடுத்து, மீண்டும் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது இந்த ஹேஷ்டேக்!

#SaveFarmers_RejectModi

ஐந்து மாநிலத் தேர்தலையொட்டி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஹேஷ்டேக்கை விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பயன்படுத்தினர். இதனால் இந்திய டிரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக் இடம்பிடித்தது!

#Arrest_MLASankar

திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர், சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி, உதவிப் பொறியாளரைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, இந்த ஹேஷ்டேக் தமிழ்நாடு அளவில் டிரெண்டானது!

#MahatmaGandhi

ஜனவரி 30-ம் தேதி அன்று, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இந்திய அளவில், பல மணி நேரம் இந்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism