Published:Updated:

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

மார்ச் 28-ம் தேதி அன்று, கோவாவின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார் பா.ஜ.க-வின் பிரமோத் சாவந்த்.

ஹேஷ்டேக்

மார்ச் 28-ம் தேதி அன்று, கோவாவின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார் பா.ஜ.க-வின் பிரமோத் சாவந்த்.

Published:Updated:
ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?

#UAEPartnersWithTN

அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றிகரமாகப் பல கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டிருப்பதாகக் கூறி, தி.மு.க ஆதரவாளர்கள் இந்த ஹேஷ்டேக்கை தமிழக அளவில் டிரெண்ட் செய்தனர்.

#WILLSMITH #WillAndChris #slap

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித், `அலோபீசியா’ நோயால் முடியை இழந்துவருவது குறித்து நக்கலடித்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை, ஆஸ்கர் விருதுகள் மேடையில் வைத்து கன்னத்தில் அறைந்தார் வில் ஸ்மித். இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சிறந்த நடிகர் விருதையும் வென்றார் வில் ஸ்மித். இதனால் மேற்கண்ட மூன்று ஹேஷ்டேக்குகளும் உலக அளவில் டிரெண்டாகின.

#GOACM

மார்ச் 28-ம் தேதி அன்று, கோவாவின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார் பா.ஜ.க-வின் பிரமோத் சாவந்த். இதையடுத்து இந்த ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் இடம்பிடித்தது!

#KashmirLivesMatter

மார்ச் 26 அன்று, காஷ்மீரிலுள்ள Chadbugh கிராமத்தில் சிறப்புக் காவல்துறை அதிகாரியான இஷ்ஃபாக் அகமத்தையும், அவரின் தம்பி உமர் ஜானையும் வீடு புகுந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மார்ச் 28-ம் தேதி அன்று நடந்த இவர்களது இறுதிச்சடங்கில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர் நெட்டிசன்கள்.

#BengalAssembly

மார்ச் 28 அன்று மேற்கு வங்க சட்டசபையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து பா.ஜ.க-வினர் கேள்வியெழுப்ப, ஆளும் தரப்பான திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கும், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட ஐந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்ய, இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம்பெற்றது!

#BeastAndKGF

``போட்டி போடுவதற்கு இது தேர்தல் இல்லை; சினிமா. எனவே, பீஸ்ட் Vs கே.ஜி.எஃப் எனச் சொல்லாதீர்கள். பீஸ்ட் & கே.ஜி.எஃப் எனச் சொல்லுங்கள்!’’ என்று பேசியிருந்தார் கன்னட நடிகர் யஷ். இதையடுத்து இந்த ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்களும் யஷ் ரசிகர்களும் டிரெண்ட் செய்தனர்.

#IPL2022

கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய காரணத்தால், இந்திய அளவில் டிரெண்டான பல ஹேஷ்டேக்குகளும் ஐபிஎல் சம்பந்தப்பட்டவையாகவே இருந்தன.