Published:Updated:

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

உக்ரைனின் கார்கிவ் நகரில், தீவிரத் தாக்குதலை நடத்திவந்தது ரஷ்ய ராணுவம்.

ஹேஷ்டேக்

உக்ரைனின் கார்கிவ் நகரில், தீவிரத் தாக்குதலை நடத்திவந்தது ரஷ்ய ராணுவம்.

Published:Updated:
ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?

#Neet

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, ``உக்ரைனில், போர்த் தாக்குதலில் உயிரிழந்த கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீனின் மரணம், நீட் தேர்வின் நோக்கம் குறித்துக் கேள்வி எழுப்பவைக்கிறது. நீட் தேர்வு இந்தியாவின் அவமானம்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், ``உள்நாட்டில் மருத்துவம் கற்கத் தடையாக இருக்கிறது #NEET தேர்வு’’ என்றார். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டானது.

#Sasikala

அ.தி.மு.க-வில் மீண்டும் சசிகலாவைச் சேர்க்க வேண்டும் என, தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதோடு, இது குறித்துக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸிடமும் வலியுறுத்தினர். இதையடுத்து, சசிகலா பெயர்கொண்ட ஹேஷ்டேக் தமிழ்நாடு அளவில் டிரெண்டானது.

#S-400

``மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்தாலும், இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணைகளை வழங்குவதில் எந்தத் தடங்கலும் இருக்காது’’ என்று அறிவித்தது ரஷ்யா. இதையடுத்து, `ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கும் இந்தியாமீது பொருளாதாரத் தடை விதிக்கலாமா, வேண்டாமா?’ என அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசித்துவருவதாகச் செய்திகள் வெளியானதும், இந்த ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் இடம்பிடித்தது!

#StopWar

ஒரு வாரத்துக்கு மேலாக நடந்துவரும் உக்ரைன் - ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, உலகம் முழுக்கவே இந்த ஹேஷ்டேக் தொடர்ச்சியாக டிரெண்ட் செய்யப்பட்டுவருகிறது!

#Kharkiv

உக்ரைனின் கார்கிவ் நகரில், தீவிரத் தாக்குதலை நடத்திவந்தது ரஷ்ய ராணுவம். அங்கு பல நூறு இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பதாகச் செய்திகள் வெளியானதும், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் பல மணி நேரம் டிரெண்டானது.

#PonniyinSelvan

மார்ச் 2-ம் தேதி அன்று, ` `பொன்னியின் செல்வன்’ - முதல் பாகம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும்’ என்ற அறிவிப்போடு, படத்தின் போஸ்டர்களும் வெளியாகின. இதனால், இந்திய டிரெண்டிங்கில் இரண்டாமிடம் பிடித்தது இந்த ஹேஷ்டேக்!

#Varanasi

மார்ச் 2 அன்று, உத்தரப்பிரதேசத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்ள மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசிக்குச் சென்றிருந்தார் மம்தா. அப்போது அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி `ஜெய்ராம்’ கோஷங்களை எழுப்பினர் பா.ஜ.க-வினர். மம்தாவின் கார் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாக, இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.