Published:Updated:

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

`உத்தரகாண்ட்டில் மீண்டும் புஷ்கர் தாமி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிதான் அமையும்.

ஹேஷ்டேக்

`உத்தரகாண்ட்டில் மீண்டும் புஷ்கர் தாமி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிதான் அமையும்.

Published:Updated:
ஹேஷ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஷ்டேக்

ட்விட்டரில் கடந்த வாரத்தில் டிரெண்டான முக்கியமான ஹேஷ்டேக்குகள் என்னென்ன... ஏன்?

#RahulBajaj

இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரும், பஜாஜ் குழுமத் தலைவருமான ராகுல் பஜாஜ், பிப்ரவரி 12-ம் தேதி அன்று உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி வெளியானதும், இந்திய டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது இந்த ஹேஷ்டேக்!

#Raina

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி `மிஸ்டர் ஐபிஎல்’ எனப் பெயர்பெற்ற சுரேஷ் ரெய்னாவை, கடந்த வாரத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இதனால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது. அதோடு #MRIPL #ChinnaThala உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் இந்திய டிரெண்டிங்கில் இடம்பிடித்தன!

#Monthly1100_Free8Cylinders

`காங்கிரஸ் ஆட்சியமைத்தால், பஞ்சாப்பிலுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு எட்டு சிலிண்டர்களும், வறுமையிலுள்ள பெண்களுக்கு மாதம் 1,100 ரூபாயும் வழங்கப்படும்’ என வாக்குறுதி அளித்திருக்கிறது காங்கிரஸ். இதன் காரணமாக இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது!

#PhirSeModiDhamiSarkar

`உத்தரகாண்ட்டில் மீண்டும் புஷ்கர் தாமி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிதான் அமையும். மோடியும் தாமியும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வார்கள்’ என்ற கருத்தை வலியுறுத்தி, இந்த ஹேஷ்டேக்கை இந்திய அளவில் பா.ஜ.க-வினர் டிரெண்ட் செய்தனர்!

#PulwamaAttack

பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில், ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் வெடித்துச் சிதறியதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நினைவுகூர்ந்து, உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய டிரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது!

#Boycott_ChennaiSuperKings

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தீக்‌ஷனா என்ற இலங்கை வீரரை வாங்கியிருந்தது. `தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள வீரர் ஒருவரை சென்னை அணி எப்படி வாங்கலாம்?’ என்று கேள்வியெழுப்பி, இந்த ஹேஷ்டேக்கை தமிழ்நாடு அளவில் முதலிடத்தில் டிரெண்ட் செய்தார்கள் ஈழ ஆதரவாளர்கள்!

#ChineseApps

பிப்ரவரி 14 அன்று, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகச் சொல்லி 54 சீனச் செயலிகளை இந்தியாவில் தடைசெய்தது மத்திய அரசு. இதையடுத்து இந்த ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் இடம்பெற்றது!

#ArabicKuthu #HalamathiHabibo

நடிகர் விஜய்யின் `பீஸ்ட்’ படத்திலிருந்து முதல் பாடலான `அரபிக் குத்து’ பாடல் காதலர் தினத்தன்று வெளியானது. இதையடுத்து #ArabicKuthu என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவிலும், அந்தப் பாடலின் முதல் வரியைக்கொண்ட #HalamathiHabibo ஹேஷ்டேக் தமிழ்நாடு அளவிலும் டிரெண்டாகின!