வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய ஏழு படிவங்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் வருமான வரித்துறை அவற்றில் சில குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தி வெளியிடுவது வழக்கம். இந்த நிதியாண்டிலும் சில முக்கிய மாற்றங்களைச் செய்திருக்கிறது வருமான வரித்துறை.

முதற்கட்ட படிவங்களான `சஹஜ்’ எனும் ஐ.டி.ஆர் 1-ம், `சுகம்’ எனும் ஐ.டி.ஆர் 4-ம் வெளியிடப்பட்டுள்ளன. மற்ற படிவங்களும் விரைவில் வெளியிடப்படவுள்ளன. புதிய மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், இதுவரை யார் யார் எந்தெந்த வரிப் படிவங்களைப் பயன்படுத்தினோம் என்பதைப் பார்ப்போம்.

படிவங்களும் பயன்பாடுகளும்

ஐ.டி.ஆர் 1 - இருப்பதிலேயே மிகவும் எளிமையான படிவம் இதுதான். மொத்த வருமானம் ரூ.50 லட்சம் மற்றும் வேளாண் வருமானம் ரூ.5 ஆயிரம் வரையுள்ள தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள், சம்பளம் மூலம் வருமானம் பெறுபவர் மற்றும் ஒரே ஒரு சொந்த வீடு உடையவர், பிற இனங்கள் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கு ஐ.டி.ஆர் 1.

ஐ.டி.ஆர் 2 - சம்பளம் மூலம் வருமானம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வீடு உடையவர், பிற இனங்கள் மூலம் வருமானம் பெறுபவர், மொத்த வருமானம் ரூ.50 லட்சத்துக்கும் மேல் மற்றும் வேளாண் வருமானம் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் பெறக்கூடியவர் உள்ளிட்டோரும், ஏதேனும் நிறுவனத்தில் இயக்குநர்களாக இருக்கும் தனி நபர்கள் மற்றும் பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களும் இந்தப் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்

ஐ.டி.ஆர் 3 கூட்டாண்மை நபர்கள், வணிகம் ஒன்றில் தனிநபர்களாக மற்றும் இந்து கூட்டுக் குடும்பமாகக் கூட்டாளிகளாக உள்ளவர்கள் அல்லது தொழில்முனைவோராக உள்ளவர்கள், தொழில்முறை வருவாய் உள்ளவர்கள் ஐ.டி.ஆர் 3-ன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

ஐ.டி.ஆர் 4 (சுகம்) – சஹஜ் தாக்கல் செய்யத் தகுதியுடையவர்கள் மற்றும் தொழிலில் உத்தேச வருமானம் அறிவிக்கும் நபர்கள் ஐ.டி.ஆர் 4-ன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

ஐ.டி.ஆர் 5 - கூட்டாண்மை நிறுவனங்கள், சங்கங்கள் போன்றவை இதன் கீழ் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

ஐ.டி.ஆர் 6 - வரிச் சட்டப்பிரிவு 11-ன்கீழ் வரி விலக்கு கோராத நிறுவனங்கள் வரித் தாக்கல் செய்யக்கூடிய படிவம் ஐ.டி.ஆர் 6.

ஐ. டி.ஆர் 7 - 139(4A) or 139(4B) or 139(4C) or 139(4D) or 139(4E) or 139(4F) உள்ளிட்ட பிரிவுகளில் வரித் தாக்கல் செய்யும் அவசியம் இல்லாத நபர்கள் / நிறுவனங்கள் / அறக்கட்டளைகள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் ஏற்கெனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவராக இருந்தால், கூடுதலாக சில தகவல்களை அப்டேட் வேண்டும்

புதிய மாற்றங்கள்

நிதியாண்டு 2019-20-ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது வருமானம், முதலீடு குறித்து மட்டுமல்லாமல் புதிய படிவங்களில் பாஸ்போர்ட், வெளிநாட்டுப் பயணம், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றைக் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருக்கிறது. இதைப் பொறுத்து உங்கள் வரிப்படிவம் மாறுபடும்.

ரூபாய் 50 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ளவர்கள், மாதச் சம்பளக்காரர்கள், ஒரேயொரு வீடு வைத்திருப்பவர்கள், வட்டி மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், குடும்பமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் படிவம் ஐ.டி.ஆர் 1-ஐ பயன்படுத்தலாம். தொழில் மூலமாகவோ அல்லது தனித்திறமைகள் மூலமாகவோ வரும் வருமானம் 50 லட்ச ரூபாய் வரை இருந்தால் ஐ.டி.ஆர்-4 படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒருவேளை மற்ற குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து ஒரு வீட்டைச் சொந்தமாக வைத்திருக்கும்பட்சத்தில் (Joint Ownership Property) நீங்கள் ஐ.டி.ஆர் 1, ஐ.டி.ஆர் 4 ஆகிய இரண்டு படிவங்களைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. அவர்கள் ஐ.டி.ஆர் 2 அல்லது ஐ.டி.ஆர் 3-ஐ பயன்படுத்த வேண்டும். மேலும் வங்கிகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருப்பவர்கள் அல்லது வெளிநாட்டு பயணங்களுக்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தவர்கள் அல்லது அந்த நிதியாண்டில் மின் கட்டணத்துக்காக 1 லட்சம் ரூபாய் செலவிட்டவர்களுக்கு இனி ஐ.டி.ஆர்-1 கிடையாது.

ஐ.டி.ஆர் 1 மற்றும் ஐ.டி.ஆர் 4 படிவங்களைப் பூர்த்தி செய்பவர்கள் தங்களது பாஸ்போர்ட் எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.

பிற மாற்றங்கள்

2019-20 மதிப்பீட்டு ஆண்டுவரை, ஒரு தனிநபர் வரி செலுத்துவோர் பிரிவு 153ஏ அல்லது பிரிவு 153-சி-யின் கீழ் வருமான வரித்துறை வழங்கிய அறிவிப்புக்கு பதிலளிக்கும்விதமாக ஐ.டி.ஆர்-1-ல் மீண்டும் வருமானத்தைத் (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இதற்கு மாறாக வரிதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டால், அவர் ஐ.டி.ஆர்-2-ஐ பயன்படுத்தி தாக்கல் செய்ய வேண்டும்.

இதுவரை பிரிவு 57(iv)-ன் கீழ் 50% விலக்கு அளிக்கப்பட்ட தொகை போக மீதமுள்ள வருமானத்தைப் பிற இனங்களிலிருந்து பெறப்பட்ட வருமானமாக அறிவித்து வந்தோம். புதிய ஐ.டி.ஆர் படிவங்களில் மொத்தமாகப் பெறப்பட்ட வருமானம் மற்றும் விலக்குத் தொகையைத் தனித்தனியாக அறிவிக்க வேண்டும்.

நீங்கள் ஏற்கெனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவராக இருந்தால், கூடுதலாக சில தகவல்களை அப்டேட் வேண்டும் அல்லது நீங்கள் புதிய வரிதாரராக இருந்தால் கட்டாயம் உங்களுக்கான சரியான படிவத்தைத் தேர்ந்தெடுப்பதும், அதில் தகவல்களை முறையாக அளிக்க வேண்டியதும் அவசியம்.

அபராதம்

வருமான வரி செலுத்துவோர், குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் காலதாமதத்துக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பதையும் மனதில்கொள்வது அவசியம்.