ஊரடங்கு நடைமுறையில் இருந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் டாப் 20 நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை ரூ.26,400 கோடி குறைந்திருக்கிறது.
அதேநேரத்தில், இந்தக் காலகட்டத்தில் ஹெச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ., ஐ.டி.எஃப்.சி., டாடா, ஆக்ஸிஸ், மிரே அஸெட், கனரா ராபிகோ ஆகிய ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை அதிகரித்துள்ளது. இந்த ஏழு நிறுவனங்கள் தவிர, மீதி 13 நிறுவனங்களின் நிர்வகிக்கும் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.16,009 கோடி அதிகரித்து மே மாத இறுதியில் ரூ.3.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை இதே காலகட்டத்தில் ரூ.11,510 கோடி அதிகரித்து ரூ.3.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.1,232 கோடி அதிகரித்து ரூ.1,32,885 கோடியாக இருக்கிறது. ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. கடன் ஃபண்ட் பிரச்னை காரணமாக ஃப்ராங்க்ளின் டெம்பிள்டனிலிருந்து மிக அதிகமாக ரூ.23,950 கோடி நிர்வகிக்கும் தொகை குறைந்திருக்கிறது. மே மாத இறுதியில் இந்த நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.99,558 கோடியிலிருந்து ரூ.75,608 கோடியாகக் குறைந்துள்ளது!