மருத்துவத்துறையில் 43 ஆண்டுகளாக இயங்கிவருபவர், 66 வயது அபயகுமார். இவரின் முன்னோர்கள் ராஜஸ்தானிலிருந்து வந்திருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். தி.நகரில் உள்ள நானோலைஃப் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். உடல்நலம் பராமரிக்க அவர் பின்பற்றிவரும் விஷயங்களை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்...

ஆரோக்கியத்தின் தொடக்கம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், மற்ற வேலைகளைச் சரியாகச் செய்ய முடியும். விளையாட்டு, குதிரையேற்றம், படகுப்பயிற்சி, பாரா கிளைடிங் என எல்லாமே கற்றுக்கொண்டேன். முக்கியமாக, குதிரையேற்றம் செய்ய உடல்பலத்துடன் மனபலமும் அவசியம். கிரிக்கெட், கால்பந்து, ஈட்டியெறிதல் என எல்லா விளையாட்டுகளிலும் பங்கேற்பேன். அதிகாலை 4:30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது என் வழக்கம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமனைவியுடன் வாக்கிங், யோகா...
குடும்பத்தில் எல்லோரும் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். வாக்கிங் போகும்போது பெரும்பாலான நேரங்களில் என் மனைவியையும் அழைத்துச் செல்வேன். எனக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள்... எல்லோரும் வெவ்வேறு நிறுவனங்களை நிர்வகித்துவருகிறார்கள். குடும்பமே பிஸியாக இருக்கிறது என்றாலும், நேரம் கிடைக்கிறபோதெல்லாம் அனைவரும் கூடிப்பேசி மகிழ்வோம்.

பிசினஸ் வெற்றி சூத்திரம்
பார்மாதுறை, ஸ்டெம்செல்துறை, அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட் ஸ்டூடியோஸ், ஐ.டி., நானோ டெக்னாலஜி, ஆயுர்வேதா என வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற முடிவதற்கு முதல் காரணம் நேர மேலாண்மைதான். ஏதாவது ஒரு வேலைக்குச் செல்கிறோம் என்றால், முன்தயாரிப்போடு செல்ல வேண்டும். எங்கே செல்கிறோம், எதற்குச் செல்கிறோம், என்ன செய்யப்போகிறோம் என்பதையெல்லாம் புரிந்துகொண்டு, தெளிவு ஏற்பட்ட பிறகு அந்த வேலையைச் செய்தால் எளிதாகச் செய்து முடித்துவிடலாம். திட்டமிடல் இல்லாமல் எந்த மீட்டிங்கையும் நான் ஏற்பாடு செய்யவே மாட்டேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காலையில் எழுந்து உடற்பயிற்சி, யோகா செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடிகிறது.
அலுவலக நேரத்தில் `நோ செல்போன்’
காலையில் பூஜையைக்கூட மொபைல் போனோடுதான் செய்ய வேண்டியிருக்கிறது. இ-மெயில், வாட்ஸ்அப் மெசேஜ் என எல்லாமே நம்மை இழுத்துக்கொண்டேயிருக்கும். ஆனால், நான் காலை 9 மணியிலிருந்து 5 மணி வரை மொபைல்போனை தொடவே மாட்டேன். அதை ஸ்விட்ச்ஆஃப் செய்துவிட்டுத்தான் மீட்டிங்கையே தொடங்குவேன்.

அன்று நடந்தது அன்றே...
இரவு வீட்டில் தூங்குவதற்கு முன்னர் தனியாக அமர்ந்து, காலையிலிருந்து என்னென்ன நடந்தது, என்னென்ன தப்பு செய்தோம் என்பதைச் சிந்திப்பேன். அன்று நடந்ததை அன்றே திரும்பிப் பார்க்கிற அந்தச் சில நொடிகள் தான் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ள தாக ஆக்கும். அதுமட்டு மன்றி, அடுத்த நாளுக் கான திட்டமிடலும் அவசியம்.
உணவே மருந்து!
ஆறு வருடங்களுக்கு முன்னர் அதிகம் ஸ்ட்ரெஸ் ஏற்பட்டது. சர்க்கரைநோயும் அதிகமானது. என் குருநாதரிடம் போய்க் கேட்டேன். உணவின் மூலம் உடம்பைக் கட்டுப்படுத்த கற்றுத் தருவதாகச் சொன்னார். தினமும் காலையில் எழுந்து உடற்பயிற்சி, யோகா செய்வதன் மூலமும், இசை கேட்பதன் மூலமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடிந்தது. காலை உணவாக ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள், ஆம்லா, சுரைக்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடச் சொன்னார். காரம், இனிப்பைக் குறைக்கச் சொன்ன அவர், `உப்பிலும்கூட கல் உப்புதான் சிறந்தது’ என்றார். இன்றுவரை அவர் சொன்னபடி நடந்து வருகிறேன்.
ஒருநாள், என் மனைவிக்கு திடீரென முதுகுவலி வந்தது. கல்யாணராமன் என்ற டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். யோகா, உடற்பயிற்சி மூலம் எப்படி ஆரோக்கியமாக இருப்பது என அவர் கற்றுக்கொடுத்தார். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து அவற்றை யெல்லாம் செய்து கொண்டே இருந்ததால், என் மனைவி குணமாகி விட்டார்.’’
காத்திருக்க விட மாட்டேன்!
புத்தகங்கள் அதிகம் படிப்பேன். எல்லாக் குப்பைகளையும் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். எனக்கு எது பொருந்தும் எனச் சரியாக கணித்து, தேவைப் பட்டதை எடுத்துக்கொள் வேன். இதனால் நான் எப்போதும் ஃப்ரீயாக இருக்க முடிகிறது.’’