கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு, அமெரிக்காவில் பணியாற்றியபோதும், பிறகு சென்னைக்கு வந்து மேட்ரிமோனி டாட் காமைத் தொடங்கி நடத்தும் இன்றுவரையும் உடல்நலத்துக்கு எப்போதுமே முன்னுரிமை தந்திருக்கிறேன்.

ஒழுங்குபடுத்தும் விரதம்

‘‘என்னைப் பொறுத்தவரை பிடித்த உணவைவிட, ஆரோக்கியமான உணவுக்கே முன்னுரிமை தருவேன். மூன்று வேளையும் அளவாகச் சாப்பிடுவேன். வாரத்தில் ஒரு நாள் (செவ்வாய்க்கிழமை மட்டும்) விரதமிருப்பேன். சில நேரங்களில் அதைக் கடைப்பிடிக்க முடியாமல் போகும். அதற்காக வருத்தப்படாமல், அடுத்த வாரம் விரதத்தைத் தொடர்வேன். மனதையும் உடலையும் ஒழுங்குபடுத்தும் ஓர் உணவு ஒழுங்குமுறையாகவே விரதத்தைப் பார்க்கிறேன்.

பத்து மணி நேரம் வேலை

காலை 5:30 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி, யோகாசனத்தில் ஈடுபடுவேன். 8:30 மணிக்கெல்லாம் ஆபீஸுக்குப் புறப்பட்டு விடுவேன். காலை 9:30 மணியிலிருந்து இரவு 7:30 மணி வரை ஆபீஸ் வேலை. மாலையில் வீடு திரும்பியதும் வீட்டிலிருப்பவர்களோடு கொஞ்ச நேரம் பேச்சு, உணவு, புத்தகம், நிம்மதியான தூக்கம். குறைந்தது எட்டு மணி நேரம் நன்கு தூங்கினால், சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

புத்துணர்ச்சி தரும் படிப்பு

15 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. தொழில் சார்ந்த புத்தகங் களை வாசிப்பதுதான் அதிகம். கடந்த வருடம், ஹார்வர்டு அட்வான்ஸ்டு மேனேஜ்மேன்ட் பயிற்சியில் கலந்து கொண் டேன். கற்றல் எப்போதும் மனதைப் புத்துணர்ச்சி யுடன் வைத்திருக்கும்.

தொழில், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எல்லாவற்றிலும் நிறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். சிலர் தொழில் வெற்றிக்காகத் தனிப்பட்ட வாழ்க்கையுடன் சமரசம் செய்துகொள்கிறார்கள். அது சரியல்ல. தொழிலில் பெரிய வெற்றி பெற்றாலும், குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அந்த வெற்றிக்கு அர்த்தமில்லை. குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதென்றால், அனைவருடனும் உட்கார்ந்து டி.வி பார்ப்பதல்ல. டி.வி ரிமோட், மொபைலையெல்லாம் கொஞ்சம் தூர வைத்துவிட்டு, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வது, பகிர்ந்துகொள்வது. நான் வார நாள்களில் டி.வி பார்க்க மாட்டேன்; வார இறுதியில் மட்டும் பார்ப்பேன்.

‘மீ டைம்’ - தியாகம் செய்யக் கூடாது!

நமக்கே நமக்காக நாம் செலவழிக்கும் நேரத்தைத்தான் ‘மீ டைம்’ என்கிறோம். அப்படி நான் எனக்கே எனக்காகச் செலவழிக்கும் நேரம்தான் உடற்பயிற்சிக்கான நேரம். என் ஆரோக்கியத்துக்காக குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். சில நேரங்களில் அந்த ‘மீ டைம்’ எனக்குக் கிடைக்காத அளவுக்கு ஏதேனும் சூழல் அமைந்துவிடும். அந்த நேரத்தில், ‘சரி, நாளைக்குப் பாத்துக்கலாம்’ என்று என் ‘மீ டைமை’ நான் தியாகம் செய்ய மாட்டேன். ‘ஒரு மணி நேரம் செய்ய முடியவில்லையா... அரை மணி நேரம் செய்வோம்’ என்று என் ‘மீ டைமை’ப் பயன்படுத்திக் கொள்வேன்.

குடும்பம் என்ற வேர் திடமாக இருந்தால்தான், தொழிலில் பெரிய உயரத்தைத் தொட்டு ஜெயிக்க முடியும்!

நட்பு வட்டம்

தொழில் சார்ந்த நண்பர்கள் சிலரோடு சேர்ந்து ‘பவுன்சிங் போர்டு’ (Bouncing Board) என்ற பெயரில் ஒரு சந்திப்பை நிகழ்த்துகிறேன். மாதந்தோறும் சந்திப்போம். தொழில் தொடர்பான எல்லா விஷயங்களையும் கலந்துரையாடுவோம். தொழிலோடு நின்று விடாமல், நல்ல குடும்ப நண்பர்களாகவும் நாங்கள் பழகுகிறோம். இப்படி வெவ்வேறு வகையில் என் நட்பு வட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது என் வெற்றிக்கான ரகசியங்களில் ஒன்று.

நிம்மதிக்கான வழி!

என் மனைவி குஜராத் வாழ் தமிழ்ப் பெண். எங்கள் மகன் லண்டனில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டும், மகள் ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். என் மனைவியுடன் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு திரும்பினால் போதும், குடும்பத்தில் ஏற்படும் எந்தவிதமான சிக்கலையும் நான் எளிதாகக் கடந்துவிடுவேன். மேலும், நம்மோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் துணைக்கும் இருக்கும். அதை நாம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

நாம் என்ன தொழிலைச் செய்தாலும், குடும்பம்தான் நமக்கு வேர். அந்த வேர் திடமாகவும் ஆரோக்கிய மாகவும் இருந்தால்தான், தொழிலில் பெரிய உயரத்தைத் தொட்டு ஜெயிக்க முடியும். எப்படிப்பட்ட சவால்களையும் சமாளித்து முன்னேற முடியும்!’