Published:Updated:

த(க)ண்ணீரில் மிதக்கும் பெங்களூரு... சிக்கலில் பொம்மை அரசு!

பெருவெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
பெருவெள்ளம்

பண வசதி படைத்தவர்கள் தனியார் அடுக்குமாடி விடுதிகளில் தங்கியிருக்க, அவர்களிடம் விடுதி நிர்வாகத்தினர் கொள்ளைக் கட்டணம் வசூலித்துவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

த(க)ண்ணீரில் மிதக்கும் பெங்களூரு... சிக்கலில் பொம்மை அரசு!

பண வசதி படைத்தவர்கள் தனியார் அடுக்குமாடி விடுதிகளில் தங்கியிருக்க, அவர்களிடம் விடுதி நிர்வாகத்தினர் கொள்ளைக் கட்டணம் வசூலித்துவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

Published:Updated:
பெருவெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
பெருவெள்ளம்

2015 சென்னை வெள்ளத்தைப்போலவே, இன்று பெங்களூரு மாநகரைச் சூறையாடியிருக்கிறது பெருவெள்ளம். கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத மழை ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, செப்டம்பர் 5-ம் தேதி இரவில் 131.6 மி.மீ அளவுக்குப் பேய்மழை பெய்திருக்கிறது.

இதனால், எலெக்ட்ரானிக் சிட்டி, வொயிட்ஃபீல்ட், பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, சர்ஜாப்பூர் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான வீடுகள், வீட்டு உபயோகப் பொருள்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் நீரில் மூழ்கி நாசமாகியிருக்கின்றன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

த(க)ண்ணீரில் மிதக்கும் பெங்களூரு... சிக்கலில் பொம்மை அரசு!

பண வசதி படைத்தவர்கள் தனியார் அடுக்குமாடி விடுதிகளில் தங்கியிருக்க, அவர்களிடம் விடுதி நிர்வாகத்தினர் கொள்ளைக் கட்டணம் வசூலித்துவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது. அதேசமயம், ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் தஞ்சமடைவதற்குப் போதிய இடவசதியின்றி தவித்துவருகின்றனர். மேலும், `இரண்டு மாத காலமாக தொடர்மழை பெய்துவரும் நிலையில், எவ்வித முன்னெச் சரிக்கை நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அரசு சார்பில் முறையான தங்கும் விடுதிகள் அமைக்கப்படவில்லை. மாநகர் முழுக்க வெள்ளநீர் சூழ்ந்திருந்தாலும் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் தவித்துவருகிறோம்’ என பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

த(க)ண்ணீரில் மிதக்கும் பெங்களூரு... சிக்கலில் பொம்மை அரசு!

அதேபோல ஐ.டி உள்ளிட்ட முக்கியத் தொழில்துறைகளும் முற்றிலுமாக முடங்கியிருக்கின்றன. நீரில் பாதி மூழ்கிய பேருந்துகள், ஜே.சி.பி., டிராக்டர்கள் மூலம் ஆபத்தான முறையில் ஊழியர்கள் அலுவலகத்துக்குச் செல்கின்றனர். இதில், அகிலா என்ற ஊழியர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஐ.டி ஊழியர்கள் அலுவலகம் வர முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால், வேலை பாதித்து தற்போதுவரை சுமார் 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக இந்தப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணாவிட்டால் நிறுவனங்களை வேறு இடங்களுக்கு மாற்றிவிடுவோம் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஐ.டி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அடுத்ததாக கர்நாடகா செல்லவிருப்பதால், இந்தப் பிரச்னையும் பேசுபொருளாகும்... பொம்மை அரசுக்கு சிக்கல் வரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

த(க)ண்ணீரில் மிதக்கும் பெங்களூரு... சிக்கலில் பொம்மை அரசு!

இந்த வெள்ள பாதிப்புக்கு வரலாறு காணாத கனமழை, மாநில பா.ஜ.க அரசின் மெத்தனப்போக்கு உள்ளிட்ட காரணங்கள் ஒருபுறம் இருப்பினும், அதிகப்படியான நீர்நிலை ஆக்கிரமிப்பே முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய ஜல்சக்தி துறை ஆவணப்படி, கர்நாடகத்தில் மொத்தம் 948 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், பெங்களூரில் மிக அதிகப்படியான நீர்நிலைகளை ஆக்கிரமித்து நிறுவனங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்பில் 5-வது இடத்தில் இருக்கும் கர்நாடகத்திலேயே இந்த நிலை என்றால், 2-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்!