Published:Updated:

உத்தரகாண்ட்டில் கொட்டித்தீர்த்த கனமழை; 46 பேர் உயிரிழப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு
மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு

உத்தரகாண்ட்டில் பெய்த கனமழைக்கு 46 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேரை காணவில்லை எனத் தகவல்கள் வௌியாகி இருக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்திருப்பதாக மாநில அரசு அறிவித்திருக்கிறது. குமகோன் பகுதிதான் மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். மீட்புப்பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை விரைவுப்படை, மாநில போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்ட நைனிட்டால்
மழையால் பாதிக்கப்பட்ட நைனிட்டால்

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட குமகோன் பகுதியில் புதன்கிழமை மாநில முதல்வர் புஸ்கர் சிங் பார்வையிட்டார். மழையால் விவசயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர். மழைக்கு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். மிகமோசமாக பாதிக்கப்பட்ட குமகோன் பகுதியில் இருக்கும் நைனிட்டால் நகரத்தில் மட்டும் மழைக்கு 18 பேர் உயிரிழந்தனர். கட்கோடேம் மற்றும் நைனிட்டால், உத்தம் சிங் நகர் பகுதியில் சாலைகள், மேம்பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை சரி செய்ய பல நாள்கள் ஆகும் என்று முதல்வருடன் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட மாநில டிஜிபி அசோக்குமார் தெரிவித்தார்.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதால் இந்த அளவுக்கு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழைக்கு இதுவரை 46 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.11 பேரைக் காணவில்லை என்றும் அரசு அறிவித்திருக்கிறது. நைனிட்டாலில் இருந்த ஒரே ரயில் தண்டவாளமும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதால் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

`குமரியில் தொடரும் பெரு மழை’ - ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மலை நகரமான நைனிட்டால் வெள்ளத்தால் தீவாக மாறி மாநிலத்தின் இதர பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு சாப்பாடு கொடுத்து உதவும்படி சப் டிவிஷ்னல் நீதிபதி பிரதீக் ஜெயின் கேட்டுக்கொண்டார். ஏரளமான சுற்றுலா பயணிகள் நைனிட்டாலில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டுள்ளனர் தண்ணீர் புகுந்ததால் பெரும்பாலான உணவு விடுதிகள் அடைக்கப்பட்டிருக்கிறது. குமகோன் மண்டலம் முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு