Published:Updated:

மூன்று மாவட்டங்களை அதிரவைத்த வெடிச் சத்தம் - ராணுவ விமானம் காரணமா?

ரஃபேல் போர் விமானம்

விமானம் போன்ற ஒன்று தாழ்வாகப் பறந்து சென்றதற்குப் பிறகு நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். வீடுகளிலுள்ள பொருள்கள், பாத்திரங்கள் அதிர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

மூன்று மாவட்டங்களை அதிரவைத்த வெடிச் சத்தம் - ராணுவ விமானம் காரணமா?

விமானம் போன்ற ஒன்று தாழ்வாகப் பறந்து சென்றதற்குப் பிறகு நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். வீடுகளிலுள்ள பொருள்கள், பாத்திரங்கள் அதிர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

Published:Updated:
ரஃபேல் போர் விமானம்

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று  மாவட்டங்களில் இன்று காலை 8:15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைப் போன்ற பயங்கர வெடிச் சத்தம் கேட்க, மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கும்  மேலாக இந்தச் சத்தம் உணரப்பட்டிருக்கிறது. விமானம் போன்ற ஒன்று தாழ்வாகப் பறந்து சென்றதற்குப் பிறகு நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். வீடுகளிலுள்ள பொருள்கள், பாத்திரங்கள் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றி காரைக்கால் வானிலை ஆய்வாளர் பிரபாகர் தெரிவிக்கும்போது, ``சோனிக்பூம் நிகழ்வு காரணமாகக்கூட இந்தச் சத்தமும் அதிர்வும் ஏற்பட்டிருக்கலாம். சோனிக்பூம் என்பது வானிலிருந்து கேட்கும் இடி போன்ற சத்தம். தரையில் இருப்பவர்களின் மேல் ஒரு விமானம் ஒலியின் வேகத்தைவிட வேகமாகப் பறக்கும்போது இந்தச் சத்தத்தை உணரலாம். ஒலியின் வேகத்தைவிட வேகமாகச் செல்வதுதான் சூப்பர் சோனிக்.

சோனிக்பூம் என்பது, ஒரு பொருள் ஒலியின் வேகத்தைவிட வேகமாகக் காற்றுவழியாகப் பயணிக்கும்போது உருவாக்கப்பட்ட அதிர்ச்சி அலைகளுடன் தொடர்புடைய ஒலி" என்றார்.

ஆனால், சோனிக்பூமெல்லாம் இல்லை என்று மறுத்துள்ளார் மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா. மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தில் ஆய்வு செய்த அவர், ``இந்திய ராணுவப் பயிற்சி விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது இந்தச் சத்தம் ஏற்படும். இன்று மயிலாடுதுறை வழியே சென்ற ராணுவப் பயிற்சி விமானத்திலிருந்து சத்தம் வந்திருக்கிறது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.