Published:Updated:

வாகை சூடியவாரிசு சோரன்!

 ஹேமந்த் சோரன்
பிரீமியம் ஸ்டோரி
ஹேமந்த் சோரன்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தார் ஷிபு சோரன்.

வாகை சூடியவாரிசு சோரன்!

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தார் ஷிபு சோரன்.

Published:Updated:
 ஹேமந்த் சோரன்
பிரீமியம் ஸ்டோரி
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் ஹேமந்த் சோரன்.

44 வயதான ஹேமந்த், ஜார்க்கண்டின் மூத்த தலைவர் ஷிபு சோரனின் மகன். ஒன்றுபட்ட பீகார் மாநிலத்திலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தனியாக உருவாவதற்கான போராட்டங்களில் முன்னின்றவர் ஷிபு சோரன். அவருக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். ஹேமந்த், ஷிபு சோரனின் இரண்டாவது மகன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனது இளமைக்காலத்தை ஒன்றுபட்ட பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் கழித்தார் ஹேமந்த். ஜார்க்கண்ட் மாநிலம் 2000-ம் ஆண்டில் பிரிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் ஹேமந்த் சோரன். தேர்தலில் அவர் தோல்வியடைந்த போது, மாநிலங்களவை உறுப்பினராக ஜார்க்கண்டிலிருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டார்.

 ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தார் ஷிபு சோரன். நீண்ட காலமாக அவர்மீது நிலுவையில் இருந்த கொலை வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்ததால், ஷிபு சோரனுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தனது அரசியல் வாரிசாக, தன் மூத்த மகன் துர்கா சோரனை முன்னிறுத்த விரும்பினார் ஷிபு சோரன். துர்கா சோரன் எதிர்பாராமல் மரணிக்க, கட்சியைக் காப்பாற்றும் பொறுப்பு, ஹேமந்த் சோரன்மீது விழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2010-ம் ஆண்டு, ஜார்க்கண்டில் பி.ஜே.பி அரசு ஆட்சியமைத்தபோது, முதல்வர் அர்ஜுன் முண்டா ஆட்சியில் துணை முதல்வராகப் பதவியேற்றார் ஹேமந்த். எனினும் இந்தக் கூட்டணி ஆட்சி நீடிக்கவில்லை. 2013-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த ஹேமந்த் சோரன், ஜார்க்கண்டின் முதல்வராகப் பதவியேற்றார்.

‘ஹேமந்த் தன் தந்தையைப்போல மக்களிடம் நேரடியாகப் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர் அல்லர். ஷிபு சோரன்மீதான குற்றச்சாட்டு, துர்கா சோரனின் மரணம் போன்ற காரணங்களால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வலிமையாக இருக்கும் பகுதிகளில் மற்ற கட்சிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி யுள்ளன. அதனால் ஹேமந்த் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் நீடித்திருப்பது கடினம்” என்று, அவர் முதல்வராகப் பதவியேற்றபோது எழுதின ஜார்க்கண்ட் மாநிலப் பத்திரிகைகள்.

அவர்கள் கணித்ததுபோல, ஹேமந்த் சோரனின் ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. 18 மாதங்களில் முடிவுக்கு வந்தது. 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜார்க்கண்ட் சட்டசபையைத் தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது பி.ஜே.பி. ரகுபர் தாஸ் முதல்வர் ஆனார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்த ஹேமந்த சோரன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார்.

வாகை சூடியவாரிசு சோரன்!
வாகை சூடியவாரிசு சோரன்!

ஆட்சியில் இருந்த பி.ஜே.பி அரசு, ஜார்க்கண்ட் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக, பழங்குடி நிலங்கள் தொடர்பான இரண்டு சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்தது. ஹேமந்த் சோரன் பழங்குடி அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். நடந்துமுடிந்த ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில், பெரிதும் விவாதிக்கப்பட்ட பிரச்னை, ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது.

ஜார்க்கண்டில் பி.ஜே.பி அரசு ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்தால் மட்டுமே ரேஷன் பொருள்களுக்கான பணத்தை வங்கிக்கணக்குகளில் செலுத்தும் என அறிவித்தது. இதனால் பல்வேறு இடங்களில் மக்கள் பட்டினியால் வாடினர். 11 வயதுச் சிறுமி உட்பட 22 பேர் இந்தத் திட்டத்தால் பட்டினி கிடந்து உயிரிழந்தனர். இதைக் கடுமையாக எதிர்த்து வந்தார் ஹேமந்த் சோரன். இந்தப் போராட்டங்களே இப்போது முதல்வர் நாற்காலியை ஹேமந்துக்கு அளித்துள்ளன.

ஹேமந்த் தன் தந்தையின் கட்சிப் பொறுப்பை ஏற்றபோது, நீண்ட காலமாகக் கட்சியின் தலைமைப்பொறுப்புகளில் இருந்தவர்கள் அதை ஏற்கவில்லை. எனினும் ஹேமந்தின் தலைமையை ஏற்காமல் பிரிந்துசென்றவர்கள், மீண்டும் அவரின் தலைமையை ஏற்றுக் கட்சியில் இணைந் துள்ளனர்.

‘ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு என்றாலும், குடியுரிமைச் சட்டத்திருத்தம், தேசியக் குடிமக்கள் பதிவேடு முதலானவை என் மாநிலத்தில் அமல் படுத்தப்படாது’ எனத் தனது முதல் அறிவிப்பை வெளி யிட்டு, மத்திய அரசை அதிர வைத்துள்ளார்.

ஹேமந்த் எப்படிப்பட்ட முதல்வராக இருக்கப்போகிறார் என்பது இனிவரும் நாள்களில் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism