Published:Updated:

ஒரு தரப்புக்கு சாதகமாகச் செயல்படுகிறது அரசு!

காடேஸ்வரா சுப்பிரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
காடேஸ்வரா சுப்பிரமணியம்

- கடுகடுக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம்

ஒரு தரப்புக்கு சாதகமாகச் செயல்படுகிறது அரசு!

- கடுகடுக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம்

Published:Updated:
காடேஸ்வரா சுப்பிரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
காடேஸ்வரா சுப்பிரமணியம்
‘விநாயகர் சதுர்த்தி’ என்றாலே விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது... இது கொரோனா காலகட்டம் என்பதால் கூடுதல் பரபரப்பு! ‘தமிழக அரசின் தடையை மீறி, தமிழ்நாடு முழுக்க ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை அமைத்தே தீருவோம்’ என்று தொடைதட்டிக் களமிறங்கியிருக்கிறது இந்து முன்னணி இயக்கம்! இந்த நிலையில், ‘இந்து முன்னணி’யின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘தமிழக அரசின் தடையை மீறி, `விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியே தீருவோம்’ எனப் பிடிவாதம் பிடிப்பது நியாயம்தானா?’’

‘‘144 தடை உத்தரவை மதித்து, `இந்த வருடம் ஊர்வலம் மற்றும் பொதுநிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம்’ என்று ஏற்கெனவே நாங்கள் அறிக்கை கொடுத்து விட்டோம். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசுதான் சரியாக நடந்து கொள்ளவில்லை. தூத்துக்குடியில் பனிமய மாதா திருவிழாவை அரசு அதிகாரிகளே உடனிருந்து நடத்துகிறார்கள். பக்ரீத் பண்டிகையின்போது, நூற்றுக் கணக்கானவர்கள் ஒன்றாகத் தொழுகை நடத்துகிறார்கள்... அப்போதெல்லாம் இந்த அரசாங்கம், ‘தடை’ என்ற சொல்லைக்கூட சொல்லவில்லை. இதோ... டாஸ்மாக் கடைகளை அரசே திறந்து விட்டிருக்கிறது. அங்கே வராத கொரோனா, சமூக இடைவெளியோடு வழிபடுகிற இடத்தில் பரவிவிடுமா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு தரப்புக்கு சாதகமாகச் செயல்படுகிறது அரசு!

``பெரும் வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் ஆலயங்களைத் திறக்க அனுமதிக்காத அரசு, ‘விநாயகரை வீட்டிலேயே வழிபடுங்கள்’ என்று ஆலோசனை சொல்கிறது. ஆனால், நீங்களோ ‘இந்துக்களுக்கு எதிரானது தமிழக அரசு’ எனக் கூறி பிரச்னையை திசை திருப்புகிறீர்களே..?’’

‘‘இது உணர்வு சம்பந்தமான விஷயம்... ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு என்பதால், சனிக்கிழமை இரவில் மளிகைக்கடை, சிக்கன் கடைகளில் கூட்டமாக நிற்கிறார்கள் மக்கள். அதுபோல், விநாயகரை வழிபடவும் கூட்டமாக வரும் மக்களைச் சமூக இடைவெளிவிட்டு தரிசிக்க நாங்கள் வழிசெய்வோம். ‘விநாயகரை வழிபட்டால், கொரோனா விலகும்’ என்ற நம்பிக்கையோடு வருபவர்களை நீங்கள் எப்படித் தடுக்கலாம்?’’

சாதியை ஒழிக்க வந்ததாகச் சொல்லுகிற திராவிடக் கட்சிகள்தான் சாதி பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றன!

‘` `கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும்’ என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை எனும்போது, வெறுமனே நம்பிக்கை சார்ந்து மக்கள் கூட்டம் கூடுவதை பொறுப்புள்ள ஓர் அரசு எப்படி அனுமதிக்க முடியும்?’’

‘‘அப்படி அரசு நினைத்திருந்தால் டாஸ்மாக் கடையைத் திறந்திருக்கவே கூடாது. அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஒருவர் திருப்பூரில் 300 பேரை அழைத்து ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறார். மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் அரசு நினைக்கவில்லை.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘அப்படியானால், தவறு செய்பவர்களைப் பார்த்து, அதேபோல நாங்களும் தவறு செய்வோம் என்கிறீர்களா?’’

‘‘நாங்களும் தவறு செய்வோம் என்று சொல்லவில்லை. `அரசு ஏன் இப்படி ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாகச் செயல்படுகிறது?’ என்றுதான் கேள்வி கேட்கிறோம். பிளேக் நோய் பரவிய காலங்களில், ‘பிளேக் மாரியம்மன்’ கோயில்களை உருவாக்கி, வேப்பிலை-துளசி இலைகளைக் கட்டிக்கொண்டு நம்பிக்கையில்தான் அந்த நோயை மக்கள் விரட்டியடித்தார்கள். `மக்களின் அந்த நம்பிக்கையை மதித்து அனுமதி கொடுங்கள்’ என்கிறோம்.’’

“மதுரை சித்திரைத் திருவிழா, அம்மனுக்குக் கூழ் ஊற்றும் விழாக்களை நடத்த அக்கறை காட்டாத இந்து முன்னணி, வட நாட்டு பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை மீறி நடத்திக்காட்ட ஆர்வம் காட்டுவது ஏன்?’’

‘‘சுதந்திரப் போராட்ட காலத்தில், மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் திலகரால் தோற்று விக்கப்பட்டது விநாயகர் சதுர்த்தி விழா. தமிழ்நாட்டில், இந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சாதிப் பாகுபாடில்லாமல் ஒற்றுமைப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட இந்து முன்னணி சார்பில், இந்த விழாவைக் கொண்டாடிவருகிறோம். எனவே, மக்கள் சேர்ந்து நடத்தும் சித்திரைத் திருவிழாவுக்கும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்து மதம் சார்ந்த எல்லா விழாக்களையும் கொண்டாடுவதுதான் எங்கள் வேலை. ஆடி மாதம் அம்மனுக்குக் கூழ் ஊற்றுவதற்காக, தமிழக அரசிடம் அரிசி கேட்கிறோம். ஆனால், ரம்ஜானுக்கு அரிசி கொடுக்கும் இந்த அரசு, இதுவரை எங்களுக்கு பதில்கூட கொடுக்கவில்லை!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘` `நாங்கள்தான் இந்துக்களுக்கான அதிகாரபூர்வ இயக்கம் என்ற அரசியலைப் பரப்புகிற உள்நோக்கத்துடனேயே நீங்கள் பிரச்னை செய்வதாக’ அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறதே?’’

‘‘இந்து முன்னணி அரசியல் இயக்கம் அல்ல. தி.மு.க, அ.தி.மு.க என்ற பாகுபாடும் எங்களுக்கு இல்லை. `ரம்ஜான் பண்டிகைக்குச் சென்று கஞ்சி குடிப்பதுபோல், விநாயகர் சதுர்த்தியிலும் வந்து கொழுக்கட்டை சாப்பிடுங்கள். எல்லோரையும் சமமாக நடத்துங்கள்’ என்றுதான் சொல்கிறோம்.’’

‘` `இந்துக் கடவுள்களைக் காப்பாற்றப் போராடும் இதுபோன்ற இயக்கங்கள், இந்து மக்களின் சமூகப் பிரச்னைகளைத் தீர்க்க முன்வருவதில்லை’ என்று திராவிடக் கட்சிகளின் குற்றச்சாட்டை எப்படி மறுப்பீர்கள்?’’

‘‘கடவுளைக் காப்பாற்றுகிறோமா என்பது வேறு ஒரு சப்ஜெக்ட். இந்து மக்களை சாதி பேதம் இல்லாமல் ஒன்றிணைக்கத்தான் நாங்கள் போராடுகிறோம். ஆனால், சாதியை ஒழிக்க வந்ததாகச் சொல்லுகிற திராவிடக் கட்சிகள்தான் சாதி பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றன.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism