என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

அகழி, பீரங்கி, மதில், குளம்... திருமயம் மலைக்கோட்டை!

திருமயம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமயம்

ர.இனியா

2K Kids

எங்க ஊரு புதுக்கோட்டையோட வரலாற்று அடையாளம், திருமயம் மலைக்கோட்டை. அதைப் பத்தின சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே...

அகழி, பீரங்கி, மதில், குளம்... திருமயம் மலைக்கோட்டை!

*17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்தக் கோட்டை. கட்டியவர், ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதி. மத்திய தொல்லியல் துறை இப்போ பராமரிச்சுட்டு வர்றாங்க.

*இந்தக் கோட்டை, ஒரு குட்டி மலை மேல கட்டப்பட்டிருக்கு. கோட்டைக்கு உச்சியில ஒரு பீரங்கி மேடையும், பீரங்கியும் இருக்கு. அந்த பீரங்கி மேடையில ஏறி நின்னு பார்த்தா, மொத்த ஊரையும் ஏரியல் வியூவுல ரசிக்கலாம்.

*வட்டவடிவமா கட்டப்பட்டிருக்கிற கோட்டை இது. கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததுக்கான தடயங்கள் இப்பவும் இருக்கு. எல்லாம் எதிரிகளை ஸ்டாப் பண்ணத்தான்.

அகழி, பீரங்கி, மதில், குளம்... திருமயம் மலைக்கோட்டை!

*இந்தக் கோட்டையிலதான் வீரபாண்டிய கட்டபொம்மனோட தம்பி ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டு இருந்திருக்காரு. அந்த இடம் ஒரு சின்ன குன்றுக்கு மேல சின்ன அறை மாதிரி இருக்கு. அந்த அறையை ஆயுதக் கிடங்காவும் பயன்படுத்தி இருக்காங்க.

*இந்தக் கோட்டையில இருந்து சேகரிக்கப்பட்ட பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், உடைவாள்களை எல்லாம் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சி யகத்துல பார்க்கலாம்.

*கோட்டையைச் சுற்றி ஏழு மதில்சுவர்கள் இருந்ததா வரலாற்றுக் குறிப்புகள் இருந்தாலும், இப்போ மூணு சுவர்கள்தான் மிஞ்சியிருக்கு.

* கோட்டைக்குக் கீழே சிவன், பெருமாள் கோயில்கள் பாறையைக் குடைஞ்சு கட்டப்பட்டிருக்கு.

* கோட்டைக்குக் கீழே எண்கோண வடிவ குளம், பல அடுக்கு படிக்கட்டுகளோட கலைநயத்தோட அமைக்கப் பட்டிருக்கு. நேரம் போறது தெரியாம உட்கார்ந்து ரசிக்கலாம்.

அகழி, பீரங்கி, மதில், குளம்... திருமயம் மலைக்கோட்டை!

* ‘நந்தா’ பட ‘முன் பனியா முதல் மழையா’ பாடல் முதல் பல பாடல்களிலும் பதிவாயிருக்கிற இந்தக் கோட்டை, கோடம்பாக்க கேமராக்களுக்கு பிடிச்ச ஸ்பாட்.

*மலைக்கோட்டைக்கு மொத்தம் மூன்று நுழைவு வாயில்கள். மலையிலேயே செதுக்கிய படிக்கட்டுகள்ல ஏறி மேல போறது ஒரு சாகச அனுபவம்.கோட்டைக்குக் கீழே எண்கோண வடிவ குளம், பல அடுக்கு படிக் கட்டுகளோட கலை நயத்தோட அமைக்கப் பட்டிருக்கு. நேரம் போறது தெரியாம உட்கார்ந்து ரசிக்கலாம்.