Published:Updated:

‘புள்ளி’ ராஜா டு ‘பஞ்ச்’ பாட்டி!

நம்பிக்கையூட்டும் 
`நேக்கோ’ ஆய்வு
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கையூட்டும் `நேக்கோ’ ஆய்வு

தமிழகத்தில் குறைந்தது எய்ட்ஸ் பரவல்... நம்பிக்கையூட்டும் `நேக்கோ’ ஆய்வு

‘புள்ளி’ ராஜா டு ‘பஞ்ச்’ பாட்டி!

தமிழகத்தில் குறைந்தது எய்ட்ஸ் பரவல்... நம்பிக்கையூட்டும் `நேக்கோ’ ஆய்வு

Published:Updated:
நம்பிக்கையூட்டும் 
`நேக்கோ’ ஆய்வு
பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கையூட்டும் `நேக்கோ’ ஆய்வு
உலகில் மரணங்கள் ஏற்படுவதற்கான முதன்மையான 10 காரணங்களில் எய்ட்ஸ் தொற்றும் ஒன்று. இந்தியாவில் முதல் ஹெச்.ஐ.வி நோயாளி கண்டறியப்பட்டது தமிழகத்தில்தான். கடந்த சில ஆண்டுகளாக எய்ட்ஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் விகிதம் குறைந்துவருவதாக, ஐ.நா-வின் ஹெச்.ஐ.வி-எய்ட்ஸ் திட்ட அறிக்கையும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு (நேக்கோ) அமைப்பும் தெரிவித்திருக்கின்றன. அதிலும், தமிழகத்தில் ஹெச்.ஐ.வி நோயாளி களின் சதவிகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது என்பது நம்பிக்கையூட்டும் தகவல்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேக்கோ அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 0.27 சதவிகிதமாக இருந்த தேசிய எய்ட்ஸ் தொற்றின் சராசரியின் அளவு தற்போது 0.18 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அதிலும், கருவிலிருக்கும் குழந்தைகளுக்குத் தாய் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று பரவுவதை தமிழகத்தின் 12 மாவட்டங்கள் முழுமையாகத் தடுத்துவிட்டன. அதாவது, ஒரு மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகள் எந்தக் குழந்தைக்கும் தாய் மூலம் தொற்று ஏற்படவில்லையென்றால், அந்த மாவட்டம் ஹெச்.ஐ.வி தொற்றை முழுமையாகத் தடுத்துவிட்டதாகக் கணக்கிடப் படுகிறது.

‘புள்ளி’ ராஜா டு ‘பஞ்ச்’ பாட்டி!
SergeiKorolko

அந்தவகையில் நீலகிரி, தூத்துக்குடி, தேனி, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், பெரம்பலூர், நாகை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சென்னை, அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தாய் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவது முழுமையாகத் தடுக்கப் பட்டிருக்கிறது. மேற்கண்ட பரிசோதனைக்காக 28,000 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. நேக்கோ அறிக்கையின்படி வேலூர், நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங் களில் மட்டும்தான் ஒரு சதவிகிதத்துக்கும் மேலாக ஹெச்.ஐ.வி தொற்று தொடர் கிறது. திருநெல்வேலி, விருதுநகர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளூர், சேலம், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான ஹெச்.ஐ.வி பரவலே இருக்கிறது. தமிழகத்தில் அரசுப் பதிவேட்டின்படி 1,19,300 எய்ட்ஸ் நோயாளிகள் இருந்தாலும், கடந்த ஆண்டில் மூன்று பேர் மட்டுமே இறந்திருப்பதாக நேக்கோ அறிக்கை தெரிவித்திருக்கிறது.

‘புள்ளி’ ராஜா டு ‘பஞ்ச்’ பாட்டி!

இது ஒருபுறம் இருந்தாலும், `கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், கொரோனா அச்சத்தாலும் எய்ட்ஸ் நோய்ப்பரவலின் வேகம் குறைந்திருக்கலாம்’ என்ற காரணமும் சொல்லப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய ஹெல்ப்லைன் ஆலோசகர் அனிதாவிடம் பேசினோம். ``கொரோனா காலத்தில் பாலியல் தொழில்கள் பெரிதாக நடக்கவில்லை. இதனால் ஹெச்.ஐ.வி பரவல் குறைந்திருக்கவே வாய்ப்பு அதிகம். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு எங்களுக்கு தினமும் 25 போன் கால்கள் வரும். கோவை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் தொடர்புகொள்வார்கள். இப்போது 10 முதல் 12 போன் கால்கள் மட்டுமே வருகின்றன. அதுவும் சிக்கலான பாலியல் உறவுகளைப் பற்றிய கேள்விகளே கேட்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கால் வெளியில் பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்த முடியாத பலரும், தங்களுடைய நெருங்கிய உறவு முறைகளுக்குள்ளேயே பாலியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தகவலும் தெரியவந்திருக்கிறது” என்றார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இணையதளத்தில் `பஞ்ச் பாட்டி’ என்றொரு பக்கம் தொடங்கப்பட்டது. ஒருகாலத்தில் தமிழ்நாட்டைக் கலக்கிய `புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ பாணியிலான விளம்பரம்தான் இது. `பஞ்ச் பாட்டி’யை க்ளிக் செய்தால், எய்ட்ஸ் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும்” என்றபடியே பேசத் தொடங்கினார் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப் ஐ.ஏ.எஸ்.

அனிதா
அனிதா
Jerome

``கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளிகள், ஓரினச் சேர்க்கை யாளர்கள் மூலமாக ஹெச்.ஐ.வி தொற்று பரவுவது சற்று குறைந்தி ருக்கலாம். ஆனாலும், இது தொடர்பான உறுதியான தகவல்கள், 2020-21-ம் ஆண்டுக்கான நேக்கோ ஆய்வறிக்கையில்தான் தெரியவரும். தமிழ்நாட்டில் 96 சதவிகிதப் பிரசவங்கள், மருத்துவமனைகளில் நடக்கின்றன. அங்கெல்லாம் ஹெச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில், 2001-ம் ஆண்டு 1.1 சதவிகிதமாக இருந்த ஹெச்.ஐ.வி தொற்று, 2014-ம் ஆண்டு 0.27 சதவிகிதமாகவும், தற்போது 0.18 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது. இந்த சதவிகிதத்தை மேலும் குறைக்க பாடுபடுவோம்.

தீபக் ஜேக்கப்
தீபக் ஜேக்கப்
Jerome

கொரோனா தொற்றால் ஏராளமானோர் இறந்துபோனாலும், எய்ட்ஸ் தொற்றாளர்களில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் இறந்து போனார். அவரும் மருந்தைச் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எய்ட்ஸ் நோயாளிகள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டால், நீண்டநாள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது இதன் மூலம் தெரிகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததும் இது தொடர்பான விழிப்புணர்வு முயற்சிகள் அதிகரிக்கப்படும்” என்றார்.

எய்ட்ஸ் இல்லாத உலகத்தை உருவாக்குவோம்!