Published:Updated:

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

க்ளீனிங் டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
க்ளீனிங் டிப்ஸ்

வீட்டை சுத்தம் செய்வது மிகவும் எளிய விஷயமே. ஆனால், அதைச் சரியான முறையில் கையாளத் தெரியாமல் சுத்தம் செய்யும் வேலையை சிலர் கடினமென எண்ணி விடுகிறார்கள்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

வீட்டை சுத்தம் செய்வது மிகவும் எளிய விஷயமே. ஆனால், அதைச் சரியான முறையில் கையாளத் தெரியாமல் சுத்தம் செய்யும் வேலையை சிலர் கடினமென எண்ணி விடுகிறார்கள்.

Published:Updated:
க்ளீனிங் டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
க்ளீனிங் டிப்ஸ்

பண்டிகை நாள்களில் வீடுகள் அழகு கூடிவிடும். உறவுகள் கூடுவது, மகிழ்ச்சி ததும்புவது, விருந்து மணப்பது என, இவற்றுடன் அதற்கு இன்னொரு முக்கியக் காரணம்... பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்து, கசடுகள் அகற்றி, சுகாதாரம், அலங்காரம் செய்வது.

இந்த நவராத்திரி பண்டிகை கொண்டாட்டமும், வீட்டை சுத்தம் செய்வதிலிருந்தே தொடங்கவிருக்கிறது. கதவுகள், ஜன்னல்கள், ஃபர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள், சமையலறை, பூஜையறை, பித்தளை பொருள்கள், வாட்டர் டேங்க், பாத்ரூம், வாகனங்கள் வரை... உங்கள் வீட்டை பளிச் ஆக்குவதற்கான க்ளீனிங் ஆலோசனைகள் இந்த இணைப்பிதழில் வரிசைகட்டுகின்றன.

பண்டிகை நாள்கள் மட்டுமல்ல, எல்லா நாள்களிலுமே வீட்டை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ அந்தளவுக்கு வீட்டின் பராமரிப்பும், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் உறுதியாகும். ``வீட்டை சுத்தம் செய்வது மிகவும் எளிய விஷயமே. ஆனால், அதைச் சரியான முறையில் கையாளத் தெரியாமல் சுத்தம் செய்யும் வேலையை சிலர் கடினமென எண்ணி விடுகிறார்கள். இந்த பண்டிகை காலத்தில், எளிய முறையில் நம் வீட்டை, வாகனங்களை சுத்தம் செய்வதற்கான சில வழிமுறைகளைப் பார்க்கலாம்’’ என்கிறார்கள், திருச்சி `ஹோம் சர்வீஸ்’ உரிமையாளர் கிருஷ்ணகுமார், திருச்சி `சிகி ஆட்டோ ஸ்பா’ உரிமையாளர் கெளதம், திருச்சி ‘ஏசி டெக்’ உரிமையாளர் கே.எல்.வெங்கடேஷ், மற்றும் திருச்சி ‘எஸ்2எஸ் கம்ப்யூட்டர் சொல்யூஷன்’ உரிமையாளர் பி.சரவணக்குமார்.

 கிருஷ்ணகுமார் -  கெளதம் -  கே.எல்.வெங்கடேஷ் -  பி.சரவணக்குமார்
கிருஷ்ணகுமார் - கெளதம் - கே.எல்.வெங்கடேஷ் - பி.சரவணக்குமார்

சோபா சுத்தம் செய்ய... டிரையர்?!

தேவையான பொருள்கள்:

சோப் ஆயில் கலந்த தண்ணீர் ஸ்கிரப்பர் காட்டன் துணி வேக்வம் க்ளீனர்.

செய்முறை:

* காட்டன் சோபாவை வேக்வம் க்ளீனர் பயன்படுத்தி சுத்தம் செய்வது சிறப்பான முறை.

* வேக்வம் க்ளீனர் இல்லாதபட்சத்தில், தூசி படிவதை தவிர்க்க சோபா மீது காட்டன் துணி போட்டு பயன்படுத்தவும்.

* ரெக்சின் சோபாவை சுத்தம் செய்ய, சோப் ஆயில் கலந்த தண்ணீரில் உள்ள நுரையை சோபாவின் மீது தெளித்து, வெறும் கை அல்லது ஸ்கிரப்பர் கொண்டு சுத்தம் செய்தால் பளிச் என்றாகிவிடும்.

* பின்னர், காட்டன் துணி கொண்டு ஈரம்போக துடைத்து எடுக்கலாம். முடிந்தால் ட்ரையர் கொண்டும் உலர்த்தலாம்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

ஜன்னல்கள், கதவுகள்... ஈரம்போக துடைக்கவும்!

தேவையான பொருள்கள்:

வெந்நீர் காட்டன் துணி கிருமி நாசினி திரவம்.

செய்முறை:

ஜன்னல்கள்

* ஜன்னல்கள் மூடியிருப்பது, திறந்தே இருப்பது என இரண்டு வகையில் இருக்கும். மூடியிருக்கும் ஜன்னல்களை மாதத்துக்கு ஒருமுறை அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை, ஈரத்துணி கொண்டு துடைத்து, பின் காட்டன் துணி கொண்டு துடைக்க வேண்டும்.

* ஆனால், திறந்திருக்கும் ஜன்னல்களுக்கு அதிகப் படியான பராமரிப்பு தேவை. இதைச் சுத்தம் செய்ய, வெந்நீரில் கிருமி நாசினி திரவம் சேர்த்து துடைக்க வும். பின் காட்டன் துணி கொண்டு துடைத்து எடுத்தால் பளிச்சென்று இருக்கும். இதை வாரத் துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!
பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

கதவுகள்

* கதவுகள் சாலையை நோக்கி இருப்பதால், மிக சீக்கிரமாகவே தூசி படிந்துவிடும்.

* கதவுகளை சுத்தம் செய்ய, தண்ணீருடன் கிருமி நாசினி கலந்து, அதில் துணியை நனைத்து எடுத்து, தாழ்ப்பாள், கைப்பிடி வரை அனைத்தையும் துடைத்து, உடனடியாக மீண்டும் காட்டன் துணி கொண்டு துடைத்து விட வேண்டும். ஏனெனில், பெரும்பாலும் மரம், இரும்பு ஆகியவற்றால் ஆன கதவுகளில் ஈரப்பதம் தவிர்க்க வேண்டும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

கண்ணாடிகள்... மேலிருந்து கீழ்!

தேவையான பொருள்கள்:

கண்ணாடி சுத்தம் செய்யும் பிரத்யேக ஸ்பிரே மைக்ரோ ஃபைபர் துணி காது குடையும் பட்ஸ் அல்லது கண்ணாடிகளை சுத்தம் செய்வதற்கு என்றே பொருள்கள் அடங்கிய கிட் கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

செய்முறை:

* கண்ணாடியை சுத்தம் செய்வதற்கான பிரத்யேக ஸ்பிரேயை தெளித்து, மேலிருந்து கீழ் நோக்கித் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

* மைக்ரோ ஃபைபர் துணி அல்லது பனியன் கிளாத் துணிகளைப் பயன்படுத்தி துடைக்கும்போது கண்ணாடிகளில் கீறல்கள் விழாமலும், நூல் பிரிந்து ஒட்டுவது போன்றவை இல்லாமலும் இருக்கும்.

* கண்ணாடியின் மூலைகளில் இருக்கும் தூசுகளை அகற்ற காது குடையும் பட்ஸ் பயன்படுத்தலாம்.

* கண்ணாடிகளைத் துடைக்கும்போது அதிக அழுத்தம் கொடுப்பது, சுரண்டுவது கூடாது.

பீரோவுக்குள் அந்துருண்டை!

தேவையான பொருள்கள்:

அந்துருண்டை கிருமி நாசினி திரவம் துணி

தண்ணீர்.

செய்முறை:

* பீரோவில் இருக்கும் துணிகள் அனைத்தையும் வெளியே எடுக்கவும். உலர்ந்த துணி கொண்டு பீரோவின் உள் பக்கம் முழுவதும் துடைத்து தூசியை அகற்றவும்.

* பின்னர் கிருமி நாசினி திரவத்தை தண்ணீரில் கலந்து, துணியில் நனைத்து பிழிந்து, முழு பீரோவையும் துடைக்கவும்.

* பீரோவின் வெளியேயும் அதேபோல துடைக்கவும்.

* ஈரம்போக, உலர்ந்த துணி கொண்டு மீண்டும் துடைக்கவும். காய்ந்தவுடன் உடனடியாகத் துணிகளை அடுக்காமல், நன்றாகக் காயவிட்டு காற்றோட்டத்தில் விடவும்.

* பின் அந்துருண்டைகளை ஒரு துணிப்பையில் கட்டி, மூலைகளில் வைக்கவும். நேரடியாக வைத்தால் ரசாயன மாற்றத்தால் துணியை பாழாக்கலாம் என்பதால், துணிப் பையில் கட்டியே வைக்கவும்.

* பீரோவை பொறுத்தவரை சுத்தம் செய்வது, பராமரிப்பதை கைவிட்டால் தூசு மட்டுமல்ல... பல்லி, கரப்பான் பூச்சி போன்றவையும் பீரோவுக்குள் இடம் தேடிக்கொள்ளலாம். இதைத் தவிர்க்க, பீரோவை சுத்தம் செய்த பின்னர் அந்துருண்டையை வைப்பது மிக மிக நல்லது. ஆனால் தற்போது பலரும் அதை பயன்படுத்துவது இல்லை. சிலருக்கு அதன் மணம் ஒவ்வாமையாக இருக்கும். எனில், பூச்சிகள் அண்டாமல் இருக்க வார்ட்ரோபுக்குள் வேப்பிலையை போட்டு வைக்கலாம். எறும்பு சாக்பீஸால் வார்ட்ரோப் சுற்றி கோடு போட்டுக்கொள்ளலாம்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

கப்போர்டுக்கு... ப்ளைவுட் ஸ்பிரே!

தேவையான பொருள்கள்:

கிருமி நாசினி திரவம், சோப் ஆயில் தண்ணீர் துணி பிரஷ்.

செய்முறை:

* கப்போர்டு பெரும்பாலும் பிளைவுட் கொண்டு செய்யப்பட்டிருக்கும் என்பதால், அதை பராமரிக்க தண்ணீரை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

* முதலில் கப்போர்டில் உள்ள பொருள்களை வெளியே எடுக்கவும்.

* சிலந்திவலை இருந்தால், தேவைப்பட்டால் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்யலாம்.

* பின்னர் உலர் துணி கொண்டு தூசிகள் அகற்றி துடைக்கவும்.

* மூலையில் தூசுகள் இருந்தால் பிரஷ் கொண்டு வெளியேற்றவும்.

* கிருமி நாசினி திரவம் மற்றும் சோப் ஆயிலை தண்ணீரில் கலந்து, துணியை அதில் நனைத்துப் பிழிந்து, கப்போர்டு முழுக்கத் துடைக்கவும் அல்லது, கடைகளில் கிடைக்கும் ப்ளைவுட் ஸ்பிரே வாங்கியும் பயன்படுத்தலாம்.

* ஈரம்போக, உலர்வான துணி கொண்டு துடைத்து எடுக்கவும்.

* நன்றாகக் காய்ந்ததும் பொருள்களை அடுக்கவும்.

ஃபேன்

தேவையான பொருள்கள்:

கிருமி நாசினி திரவம் தண்ணீர் துணி.

செய்முறை:

* தண்ணீரில் கிருமி நாசினி திரவத்தை கலந்துகொள்ளவும். அதில் துணியை நனைத்து, பிழிந்து, ஃபேனின் இறக்கைகளை துடைக்கவும். முன்னதாக தூசி தட்டினாலோ, உலர் துணி கொண்டு துடைத்தாலோ தூசி பறந்து, தரையில், ஃப்ர்னிச்சர்களில் படியும். அதுவே ஈரத்துணி கொண்டு துடைக்கும் போது அது தவிர்க்கப்படும், தூசி எல்லாம் ஈரத்துணியிலேயே ஒட்டிக்கொள்ளும். அதைக் கழுவிவிட்டு, மீண்டும் பிழிந்து, துடைக்கலாம்.

* ஃபேனின் மோட்டாரில் ஈரத்துணி கொண்டு துடைக்கக் கூடாது. உலர் துணி கொண்டு மட்டும் துடைக்கவும்.

வாஷிங்மெஷின்

* வாஷிங் மெஷின் உட்புறம், சம்பந்தப்பட்ட கம்பெனியின் க்ளீனிங் கிட் கொண்டு சுத்தம் செய்யலாம்.

* வெளிப்புறத்தில் உள்ள கறைகள், அழுக்குகள் நீங்க, ஓர் ஈரத்துணியில் சோப் ஆயில் தொட்டு துடைக்கலாம். துடைக்க முடியாத வளைவுகளில் பிரஷ் அல்லது பட்ஸ் கொண்டு அழுக்குகளை வெளியேற்றவும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

டிவி

தேவையான பொருள்:

மைக்ரோ ஃபைர் துணி.

செய்முறை:

* டிவியை ஸ்பிரே கொண்டு துடைப்பதோ, தண்ணீர் தொட்டு துடைப்பதோ கூடாது. குறிப்பாக ஸ்கிரீனில்.

* மைக்ரோ ஃபைர் துணி அல்லது பனியன் க்ளாத் எடுத்துக்கொள்ளவும்.

* கீறல்களை மற்ற பாதிப்புகளை தவிர்க்க, ஸ்கிரீனில் எந்த அழுத்தமும் இல்லாமல் மிக மிக பொறுமையாக, மேலிருந்து கீழாக அல்லது பக்கவாட்டில் எனத் துடைக்கவும்.

* எல்இடி டிவியை பொறுத்தவரை ஐ.பி.ஏ (IPA – Isopropyl Alcohol) சொல்யூஷன் பயன்படுத்தி, மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு துடைக்கலாம். பெரிய அளவில் அழுக்குகள் இல்லாதபட்சத்தில் உலர் துணி கொண்டு மட்டுமே துடைத்தால் போதுமானது.

*சமையலறை எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaus t Fan)... எண்ணெய்ப் பிசுக்குப் போக வேண்டுமா?!

தேவையான பொருள்கள்:

தண்ணீர் ஸ்க்ரூ டிரைவர் காட்டன் துணி கிருமி நாசினி திரவம்

ஸ்கிரப்பர் சோப் ஆயில்.

செய்முறை:

* சமையலறையில் இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன், மிகுந்த எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். இதைச் சுத்தம் செய்வது சவால்தான் என்றாலும், அடிக்கடி சுத்தம் செய்து வரும்போது வேலை சுலபமாகும்.

* இது பெரும்பாலும் கழற்றக் கூடியதாகவே இருக்கும் என்பதால், அப்படியே சுத்தம் செய்யாமல் ஸ்க்ரூ டிரைவர் கொண்டு கழற்றி எடுத்து சுத்தம் செய்வது எளிமையாக இருக்கும்.

* மோட்டர் வரை எண்ணெய்ப் பசை இருக்கும் என்பதால், மொத்தமாகக் கழற்றி எடுக்க வேண்டும்.

* சோப் ஆயில் அல்லது எண்ணெய்ப் பசை போவதற்கென்று கடைகளில் கிடைக்கும் திரவத்தைத் தண்ணீரில் கலந்து, பெரிய, அகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மோட்டரை தவிர அனைத்து பாகங்களையும் அதில் போடவும்.

* 20 - 40 நிமிடங்கள் வரை ஊறிய பின் எடுத்து, ஸ்கிரப்பர் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவவும்.

* காட்டன் துணி கொண்டு துடைக்கவும்.

* நன்றாகக் காய்ந்ததும் மீண்டும் பொருத்தவும்

* ஒருவேளை கழற்ற முடியவில்லை எனில், மோட்டர் தவிர மற்ற பாகங்களை சோப் ஆயில் கலந்த தண்ணீரில் நனைத்த துணி கொண்டு நன்கு தேய்த்துத் துடைக்கவும்.

* பிரெஷ் அல்லது ஸ்கிரப்பர் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். பின்னர் உலர் துணியால் துடைத்து நன்றாகக் காயவிடவும்.

* முடிந்தவரை கழற்றிச் சுத்தம் செய்வது நல்லது.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

ஃபிரிட்ஜ்

தேவையான பொருள்கள்:

தண்ணீர் வினிகர் எலுமிச்சை சாறு துணி.

செய்முறை:

* ஃபிரிட்ஜில் உள்ள உணவுப் பொருள்கள் அனைத்தையும் வெளியே எடுக்கவும்.

* ஃபிரிட்ஜின் பாகங்களை தனித்தனியாகக் கழற்றி, சோப்பு கொண்டு தேய்த்துக் கழுவவும்.

* ஃபிரிட்ஜின் உட்புறம், சோப் ஆயில் கலந்த தண்ணீர் கொண்டு துடைக்கவும்.

* இதனுடன் அப்படியே விட்டால் ஃபிரிட்ஜில் சோப் மணம் இருக்கும். எனவே, வினிகர் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து, துணியில் எடுத்து, ஃபிரிட்ஜின் உட்புறம் முழுவதும் பொறுமையாகத் துடைத்து எடுக்கவும்.

* கதவை திறந்தநிலையில் வைத்து நன்றாகக் காயவிடவும்.

* சோப்பு கொண்டு தேய்த்துக் கழுவி கழுவிவைத்த ஃபிரிட்ஜின் பாகங்களை மீண்டும் பொருத்தவும்.

* ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருள்களை சரியான முறையில் பாத்திரங் களில் சேமித்து, மூடிவைத்து எனப் பயன்படுத்தவும். ஃபிரிட்ஜுக்குள் ஏதேனும் சிந்திவிட்டால் உடனடியாக சுத்தம் செய்யவும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

மிக்ஸி... மேற்பகுதியை சுத்தம் செய்யும்போது...

தேவையான பொருள்கள்:

துணி தண்ணீர் பிரஷ் சோப் ஆயில்.

செய்முறை:

* மிக்ஸியை பொறுத்தவரை ஜார் பொருத்தும் மேற்பகுதியில் அழுக்கு மிகுதி யாகப் படிந்திருக்கும். அதை பிரஷ் கொண்டு தேய்த்து அப்புறப்படுத்த வேண்டும்.

* பின்னர் தண்ணீரில் சோப் ஆயில் கலந்து, துணியில் தொட்டு, மிக்ஸி முழுக்க நன்றாகத் துடைத்து சுத்தம் செய்யவும்.

* மிக்ஸியின் மோட்டார் பகுதியில் தண்ணீர் சென்றுவிடாமல், ஈரத்துணியால் துடைத்தால் போதுமானது.

* நன்றாகக் காயவிட்டு பின்னர் பயன்படுத்தவும்.

* கிச்சனை சுத்தம் செய்வது பலருக்கும் மலைப்பாக இருக்கும். ஆனால், சுத்தம் செய்யத் தேவையான பொருள்கள் இருந்தால் அது சுலபம்தான்.

அடுப்பு... அடிப்புறமும் நீக்குக அழுக்கு!

தேவையான பொருள்கள்:

துணி - 2 (சிறிய அளவு) வினிகர் - சிறிதளவு வெந்நீர் பிரஷ் - 1

இரும்பு நார் - 1.

செய்முறை:

* முதலில், காஸ் இணைப்பை நிறுத்தி, அடுப்பில் உள்ள பிளேட்களை தனியாக எடுத்து, ஒரு பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி அதில் போட்டு வைக்கவும்.

* அடுப்பின் பர்னர்களை சுத்தம் செய்ய, அவற்றையும் தனியாக எடுத்து வெந்நீரில் போட்டு வைக்கவும்.

* இவை ஊறும் நேரத்தில், அடுப்பின் மேல்பகுதியை சுத்தம் செய்துவிடலாம். அதற்கு 1:1 என்ற விகிதத்தில் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து, அடுப்பின் மேற்பகுதி, பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்புறமும் ஸ்பிரே செய்து வைக்கவும். 2 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.

* பின் அடுப்பை துணி கொண்டு துடைத்து எடுக்கவும், கறைகள் அனைத்தும் நீங்கிவிடும். ஒருவேளை கறை இருந்தால், பிரஷ்ஷில் சோப் தொட்டு மென்மையாகத் தேய்த்துக் கழுவவும். இதே செய்முறையை அடுப்பின் பின்புறமும், அடுப்பு நாப் (knob) பகுதியிலும் செய்யவும்.

* அடுப்பின் அடிப்பகுதியில் சோப்பு தண்ணீர் அல்லது வினிகர் போட்டு தேய்த்து 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

* பின் இரும்பு நாரை கொண்டு அழுத்தமாகத் தேய்த்து எடுக்கவும். எண்ணெய்ப் பசை நீங்கி சுத்தமாக இருக்கும்.

* அடுப்பை சுத்தம் செய்த பின், பிளேட் மற்றும் பர்னரை சுத்தம் செய்யவும். சோப்பு நீர், பிரஷ் கொண்டு நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்யவும். பர்னரை சுத்தம் செய்யும்போது ஓட்டையில் அடைந்திருப்பதை ஊசி/சேஃப்டி பின் கொண்டு நீக்கிவிடவும்.

* வினிகர், சோப்பு நீருக்கு பதிலாக, எண்ணெய்ப் பசை போவதற்கென்று கிடைக்கும் பவுடர்கள், திரவ கறை நீக்கிகள் பயன்படுத்தியும் சுத்தப்படுத்தலாம்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

அடுப்பு மேடை, சுவரில் எண்ணெய்ப் பசையை நீக்க...

தேவையான பொருள்கள்:

சோப் ஆயில் - தேவையான அளவு ஸ்கிரப்பர் - 1 தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை:

* எண்ணெய்ப் பசை உள்ள இடங்களில் தண்ணீர் தவிர்த்து வெறும் சோப் ஆயிலை மட்டும் ஊற்றி தேய்த்து, 40 நிமிடங்களுக்கு பின் ஸ்கிரப் செய்தால் பளிச் என்றாகிவிடும்.

* பின்னர் அந்த இடத்தை ஈரத்துணி கொண்டு நன்றாகக் துடைக்கவும்.

* எண்ணெய் பாட்டில்களை ஒரு ட்ரேயில் வைத்துப் பயன்படுத்தவும். சிந்தினால் உடனடியாக துடைத்து சுத்தம் செய்யவும்.

சிங்க்... வெந்நீர் ஊற்றவும்!

தேவையான பொருள்கள்:

வினிகர் பேக்கிங் சோடா எலுமிச்சை சாறு வெந்நீர் சோப் அல்லது சோப்பு நீர்.

கழுவும் முறை:

* சிங்க்கில் உள்ள, தண்ணீர் வெளியேறும் துவாரங்களை அடைத்து விடவும். பின் வெந்நீரில் சோப்பு கலந்து, சிங்க்கில் ஊற்றி 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.

* பின்னர் பேக்கிங் சோடா, எலுமிச்சைச்சாறு மற்றும் வினிகர் சேர்த்து தேய்த்து, 10 நிமிடம் ஊறவிடவும்.

* இறுதியாக ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து எடுத்தால் சிங்க் சுத்தமாக இருக்கும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

தரையை சுத்தம் செய்ய... இவற்றையெல்லாம் பயன்படுத்தலாம்!

தேவையான பொருள்கள்:

வினிகர் பேக்கிங் சோடா எலுமிச்சை சாறு தண்ணீர் மாப்

இரும்பு ஸ்கிரப்.

செய்முறை:

* டைல்ஸ், மார்பிள் போன்ற தரைகளை சுத்தம் செய்ய வழக்கம்போல் ஃப்ளோர் க்ளீனரை தண்ணீரில் கலந்து மாப் போடலாம்.

* கறை மற்றும் அழுக்குகள் இருந்தால் தண்ணீருடன் வினிகர், எலுமிச்சைச் சாறு அல்லது பேக்கிங் சோடா கலந்து சுத்தப்படுத்தலாம். குறிப்பாக மூலைப் பகுதிகளிள் இரும்பு ஸ்கிரப்பர் கொண்டு தேய்க்கலாம்.

* டைல்ஸ் சுத்தம் செய்வதற்கு என கடைகளில் மிருதுவான ஆசிட்டுகள் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்தலாம்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

பூஜையறை... சாமி பொருள்களை பத்திரமாக வெளியேற்றவும்!

பூஜையறையை சுத்தம் செய்யும் முன், சாமி படங்கள், சிலைகள், பூஜை பொருள்கள், வெள்ளி மற்றும் பித்தளை பொருள்கள் என அனைத்தையும் முதலில் கவனமாக இடம் மாற்றவும். இவற்றில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் அதிக சங்கடம் ஏற்படும் என்பதால் அவற்றை பத்திரமாக வைக்கவும்.

தேவையான பொருள்கள்:

சோப் ஆயில் - தேவையான அளவு

ஸ்கிரப்பர் - 1 தண்ணீர் - சிறிதளவு.

செய்முறை:

* அதிகமான எண்ணெய்ப் பசை இருக்கும் இடத் தில் முதலில் சுத்தம் செய்யவும். குறிப்பாக, விளக்கேற்றும்போது சிந்தி தரையில் ஏற்பட்ட எண்ணெய்ப் பசையை நீக்க, சோப் ஆயில் அல்லது சோப்புத்தூள் கலந்த தண்ணீர் பயன் படுத்தவும்.

* சோப் ஆயிலை அல்லது சோப்புத்தூள் கலந்த தண்ணீரை ஊற்றி தேய்த்துவிட்டு, 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும். அதன் பின் நார் கொண்டு ஸ்கிரப் செய்யவும்.

* ஸ்கிரப் செய்து முடித்த பின் அந்த இடத்தில ஈரத்துணி கொண்டு துடைத்தால் பளிச்சென இருக்கும்.

* பூஜை அறை பொருள்கள் அனைத்தையும் ஈரத் துணியால் துடைத்து, உலரவிட்டு, மீண்டும் அறையில் வைக்கவும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை பொருள்கள்...

தேவையான பொருட்கள்:

புளி எலுமிச்சை மற்றும் செம்பு, பித்தளை துலக்கும் பவுடர்.

வழிமுறை:

* பித்தளை பொருள்களை புளி, உப்பு அல்லது எலுமிச்சைச்சாறு கொண்டு பழைய முறையில் துலக்கலாம். ஆனால், அதிக அழுத்தம் கொடுத்தும், அதிக நேரமும் துலக்க வேண்டும்.

* கடைகளிலே பித்தளை பாத்திரங்களைத் துலக்குவதற்கு எனக் கிடைக்கும் செம்பு, பித்தளை துலக்கும் பவுடரும் பயன்படுத்தலாம். எண்ணெய்ப் பசை சிரமமில்லமால் அகன்று பளிச்சென மின்னும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

பாத்ரூம்... ஆசிட், மாஸ்க், க்ளவுஸ்!

* அழுக்கு, கறை மிக அதிகமாக சேரும் இடம், மிக அதிகமாக சுத்தம் செய்யத் தேவைப்படும் இடம்... பாத்ரூம். மேலும் உப்பு நீரும் கறையாகப் படிந்து காணப்படும். இவற்றையெல்லாம் நீக்க மெனக்கெடல் தேவை.

* இது போன்ற கறைகளை என்னதான் வினிகர், எலுமிச்சைச்சாறு, பேக்கிங் சோடா, உப்பு பேப்பர் போன்றவை கொண்டு தேய்த்தாலும், கழுவினாலும் ரிசல்ட் முழுமையாக கிடைக்காது. தினம் தினம் தேய்க்க தேய்க்க பொறுமை யாக நீக்கலாம்.

* பாத்ரூம் கழுவ என கடைகளில் கிடைக்கும் ஆசிட் பயன்படுத்தினால், கறைகள் நீங்குவதுடன் கிருமிகளும் அழியும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

கைப்பிடிகளையும் கவனியுங்கள்...

* தினமும் பயன்படுத்தினாலும் கவனிக்காத ஒரு பொருள், தண்ணீர் பைப்பு களின் கைப்பிடிகள். அவை பெரும்பாலும் உப்புக்கறை படிந்து இருக்கும்.

* வெகு சுலபமாக இதை நீக்க முடியும். வினிகரை சிறிதளவு கைப்பிடியின் மீது தெளித்து அல்லது ஊற்றி, அதன்மீது எலுமிச்சைப்பழத்தை வெட்டி எடுத்துக்கொண்டு தேய்த்து எடுக்கவும்.

* பின் தண்ணீர் கொண்டு கழுவினால் பளிச்சென்று ஆகும்.

வாட்டர் டேங்க்... டீப் க்ளீனிங் செய்யுங்கள்!

* வாட்டர் டேங்கை சுத்தமாகப் பராமரித்தால்தான், குளியல் முதல் சமையல் வரை வீட்டின் அனைத்து தண்ணீர் தேவைகளிலும் சுகாதாரம் உறுதி செய்யப்படும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

லேப்டாப் மற்றும் டேப்லெட்... நோ தண்ணீர்!

* லேப்டாப் திரையில் கைரேகை, தூசு என்று படிந்திருக்கும். இதைத் தவிர்க்க, செல்போனில் பயன்படுத்தும் டெம்பர் கிளாஸ் போன்று லேப்டாப் ஸ்க்ரீன் கார்டு (guard) பயன்படுத்துவது நல்லது. இதேபோன்று டேப்லெட்டுக்கும் பயன்படுத்தலாம்.

* கார்டு பயன்படுத்தாமல் இருப்பவர்கள், ஸ்க்ரீன் சுத்தம் செய்வதற்கான பிரத்யேக ஸ்பிரேயை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

* ஸ்பிரேயை தெளித்த பின், மைக்ரோ ஃபைபர் துணி அல்லது காட்டன் துணி கொண்டு மிருதுவாகத் துடைக்கவும்.

* தண்ணீர் கொண்டு ஸ்கிரீனை துடைக்கக் கூடாது.

* கீபோர்டுக்கு கவர் பயன்படுத்தலாம். சுத்தம் செய்ய, அதற்கான பிரத்யேக கீ போர்டு பிரஷ் பயன்படுத்தலாம்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

மொபைல்போன்

* மொபைல் டிஸ்ப்ளேயை சுத்தம் செய்வதற்கான பிரத்யேக க்ளீனரை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

* மொபைலில் தூசு அதிகம் சேர வாய்ப்புள்ள பகுதி, சார்ஜர் போடும் இடம். அந்தந்த மொபைல்போனின் மாடலுக்கு ஏற்ப, சார்ஜர் போடும் இடத்தை மூடுவது போன்ற அமைப்புடன் இருக்கும் கவரை பயன்படுத்தலாம்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

ஏசி சுத்தம் செய்யலாம்... நீங்களே!

* பழைய மாடல் ஏசிகளில் வெளிப்பக்கத்தில் மட்டுமே உலர் துணி கொண்டு துடைக்கலாம். ஆனால், தற்போது உள்ள மாடல்களில் உட்புறத்தில் உள்ள ஏர் ஃபில்டர்கள் வரை துடைக்க முடியும்.

* அதற்கு, ஏ.சியின் முன்புறம் உள்ள மேற்பகுதியை திறந்தால் ஏர் ஃபில்டர்கள் இருக்கும். இவற்றை தனியே எடுக்க முடியும்.

* தனியே எடுத்த ஏ.சி ஃபில்டர்களை, சோப்புத்தூள் கலந்த தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து, பின் எடுத்து மிருதுவாக பிரஷ் செய்து கழுவினால் பளிச் என்று ஆகிவிடும்.

* பின்னர் ஃபில்டர்களை வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். ஈரத்துடன் மீண்டும் பொருத்தினால் கண்டிப்பாக பூஞ்சைகள் வளரும் மற்றும் உடனடியாக மீண்டும் தூசுகள் சேர்ந்துவிடும் வாய்ப்புள்ளது.

* அதற்கு மேல் ஏ.சியை க்ளீன் செய்ய வேண்டும் என்றால், ஏசி மெக்கானிக் கொண்டே டீப் க்ளீன் செய்ய வேண்டும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

சிம்னி சுத்தம்... இவை போதும்!

* சிம்னி இப்போது பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதை சுத்தம் செய்யும் முன், மின்சார தொடர்பைத் துண்டிக்க வேண்டும்.

* சிம்னியின் முகப்புப் பகுதி, கிரில் பகுதி முழுவதும் அகற்றும் வகையில்தான் இருக்கும். கழற்றிக்கொள்ளவும். இவற்றில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும்.

* ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, தேவையான அளவு வினிகர், எலுமிச்சைச்சாறு, சோப் ஆயில் கலந்து, அதில் கழற்றிய சிம்னி பாகங்களைப் ஊறவிடவும்.

* 30 நிமிடங்களுக்குப் பின் அவற்றை எடுத்து, ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால் எண்ணெய்ப் பசை நீங்கிவிடும்.

வெயிலில் காயவைத்து பின் இணைக்கவும்.

* அகற்ற முடியாத சிம்னி பாகங்களை, மேலே சொன்ன கலவை தண்ணீரில் துணியை நனைத்துப் பிழிந்து, துடைத்து எடுக்கவும்.

* எக்காரணம் கொண்டும் காய்வதற்கு முன் சிம்னியைப் பயன்படுத்துவது கூடாது. அது அதிகப்படியான எண்ணெய்ப் பசைக்கும், சில சமயங்களில் எர்த் அடிக்கவும் வாய்ப்பாக அமைந்துவிடும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

வீட்டில் நாமே வாட்டர் டேங்க் சுத்தம் செய்ய...

தேவையான பொருள்கள்:

ப்ளீச்சிங் பவுடர் க்ளீனிங் திரவம் துணி.

சுத்தம் செய்யும் முறை:

* முதலில் டேங்கில் உள்ள தண்ணீரை வெளியேற்றவும்.

* பின் வால்வுகள் அனைத்தையும் மூடி விடவும்.

* பிளீச்சிங் பவுடர் அல்லது க்ளீனிங் திரவம் கொண்டு முழு டேங்க்கையும் ஸ்கிரப்பரால் தேய்த்துக் கழுவவும்.

* தண்ணீர் கொண்டு அலசி, நீரை வெளியேற்றவும்.

* இல்லையெனில், ஒரு பெரிய துணியில் ப்ளீச்சிங் பவுடரை கொட்டிக் கட்டவும். இதனை டேங்க்கின் உட்புறமாக போட்டு, பின் தண்ணீர் கொண்டு அலசி நீரை வெளியேற்றலாம்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

வாகனங்களை சுத்தம் செய்யும்போது... இவையெல்லாம் பயன்படுத்தக்கூடாது!

* சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்திலோ, திறந்த வெளியிலோ காரை சுத்தம் செய்தால் க்ளீனிங் திரவங்கள் விரைவில் உலர்ந்துவிடும் என்பதால், மூடிய இடத்தில் வைத்துதான் காரை சுத்தம் செய்ய வேண்டும்.

* காரை சுத்தம் செய்வதற்கு அதற்கான சுத்தம் செய்யும் சொல்யூஷனை கொண்டு காரின் வெளிப்புறத்தில் சுத்தம் செய்யலாம். இதை பொதுவாக, 1:10 (1 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி) என்ற விகிதத்தில் கலந்து கழுவப் பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தும்போது வரும் நுரை, காரில் உள்ள அழுக்குகளை நீக்கும்.

* இதை அப்ளை செய்து ஐந்து நிமிடங்களுக்குள் தண்ணீர் கொண்டு அலசிவிடுவது நல்லது. அதற்கு மேல் இருந்தால் ஒட்டிக்கொள்ளும், நீக்குவது சிரமமாகும்.

* தண்ணீர் கொண்டு கழுவும்போது நார்மல் தண்ணீர் பைப் பயன்படுத்தலாம் அல்லது பிரஷர் வாஷர் கொண்டும் கழுவலாம்.

* கழுவிய பின் மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு மட்டுமே துடைக்க வேண்டும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

* எக்காரணம் கொண்டும் சோப்பு, சோப்புத்தூள், ஷாம்பூ என்று எந்தப் பொருளும் பயன்படுத்தக்கூடாது. இவை காரின் பெயின்ட்டை பாதிப்பதுடன் வாட்டர் மார்க் அப்படியே இருக்கும்.

* காரின் உள்ளே ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும் அல்லது, அதற்கான பிரத்யேக க்ளீனரை பயன்படுத்தலாம்.

* ஏசி இருக்கும் பகுதிக்கு கவனம் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டும். நன்றாக தூசு நீக்கம் செய்ய வேண்டும்.

* காரின் உட்புறத்தில் உள்ள சீட்டுகள் ரெக்சின் அல்லது லெதராக இருந்தால் ஈரத்துணி கொண்டு துடைத்து, கறைகள் இருந்தால் பின் பிரெஷ் கொண்டு மென்மையாகத் தேய்த்து நீக்கலாம். மற்ற வகை சீட்களுக்கு கண்டிப்பாக வேக்வம் க்ளீனர் பயன்படுத்த வேண்டும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

* காரின் டயரில் உள்ள வீல் ஆர்ச்சின் (Wheel arch) லோயர் ஆர்ம் (Lower arm) பகுதியில் சேறு, சகதி அதிகமாக இருக்கும். இதை பிரஷர் வாஷர் கொண்டு சுத்தம் செய்யும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கும். பிரேக் பிடிக்கும்போது சிறப்பாக செயல்படும்.

* ரெகுலர் பயன்பாடு எனில் வாரத்துக்கு ஒருமுறை கார் சுத்தம் செய்யலாம். குறைவான பயன்பாடு எனில் 20 நாள்கள் அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்தால் போதுமானது.

* தொடர்ந்து ஏர் செக் பண்ண வேண்டும். கூடவே ஆயில் செக் செய்ய வேண்டும். ஸ்டெப்னி செக் செய்ய வேண்டும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

இரு சக்கர வாகனம்... இங்கெல்லாம் தண்ணீர் கூடாது!

* இரு சக்கர வாகனத்தில் மிக முக்கியப் பகுதி, செயின் தான். முதலில் அதைத்தான் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் பயன்படுத்தி ஐந்து நிமிடங்கள் வரை செயின் முழுவதும் ஸ்பிரே செய்ய வேண்டும். அதன்பின் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* செயின் லூப் பயன்படுத்துதல் நல்லது. வாரத்துக்கு ஒரு முறையாவது லூப் பயன்படுத்த வேண்டும்.

* சுத்தம் செய்யும் க்ளீனிங் ஏஜென்ட் கொண்டு வண்டியின் பாடியை சுத்தம் செய்யலாம் அல்லது, வெறும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய லாம்.

* இன்ஜின், எலெக்ட்ரிக் வயர் இருக்கும் பகுதி போன்றவற்றில் தண்ணீர் அடித்துக் கழுவக் கூடாது. கூடவே சைலன்சரில் தண்ணீர் செல்லக் கூடாது. இந்த இடங்களில் எல்லாம் வெறும் ஈரத்துணி கொண்டு துடைத்தால் போதுமானது.

* தண்ணீர் கொண்டு கழுவிய பின் மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு மட்டுமே துடைக்க வேண்டும். காட்டன், பனியன் க்ளாத் வேண்டாம்.

*****

எலெக்ட்ரானிக் பொருள்கள்... மின்சார இணைப்பு ஆஃப்!

எலெக்ட்ரானிக் பொருள்களை சுத்தம் செய்யும் முன் கட்டாயம் செய்ய வேண்டியது, மின்சார இணைப்பை துண்டிப்பது. இல்லையெனில் மின் விபத்து ஏற்படலாம் எச்சரிக்கை.

ஸ்பீக்கர் பத்திரம்!

* டிவியின் முன்புறத்தை மட்டும் துடைத்தால் போதாது. பின்புறத்தை சாதாரண காட்டன் துணி கொண்டோ, வேக்வம் க்ளீனர் கொண்டோ சுத்தப்படுத்தலாம்.

* ஸ்பீக்கர் இருக்கும் பக்கத்தில் வேக்வம் க்ளீனர் பயன்படுத்துவது கூடாது, இதனால் ஸ்பீக்கர் கிழிந்துவிடும் அபாயம் உள்ளது.

விளக்குகள்... துணி போதும்!

* லைட்டுகளில் அழுக்குகள் குறைவாகவே இருக்கும். இதை வெறும் உலர் துணி கொண்டு மென்மையாகத் துடைத்து எடுத்தால் போதும்.

ஆசிட் பயன்படுத்துகிறீர்களா?!

* ஆசிட் பயன்படுத்துவதில் தேர்ந்தவர் எனில் பிரச்னையும் இல்லை. புதிதாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் கண்டிப்பாக கிளவுஸ், மாஸ்க் போன்றவற்றை அணிந்திருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

* ரொம்ப ஹார்ட் ஆசிட்டாக இல்லாமல், சற்று வலு குறைந்ததாகவே வாங்கிப் பயன்படுத்தலாம்.

* ஆசிட் கொண்டு பாத்ரூமின் சுவர், டைல்ஸ் என அனைத்தையும் சுத்தம் செய்யலாம்.

* பாத்ரூமை அவ்வப்போது சுத்தப்படுத்துவதுடன், தினசரி பராமரிப்பும் முக்கியம். தரையில் நீர் தேங்காமல் முழுவதும் வெளியேறுவதை உறுதிப்படுத்தவும். நீர் வெளியேறும் இடத்தில் ஷாம்பூ பாக்கெட், முடி என எதுவும் அடைக்காமல் பார்த்துக் கொள்ளவும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது பாத்ரூமின் சுவர், டைல்ஸ் போன்றவற்றை தண்ணீர் ஊற்றியாவது அலசுங்கள்.

* தேவையில்லாத எந்தப் பொருளையும் உள்ளே வைக்காதீர்கள்.

டூப்ளிகேட் வேண்டாம்!

லேப்டாப், டேப்லெட் மற்றும் மொபைலை பொறுத்தவரை எப்போதும் ஒரிஜினல் சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவேளை அது பழுதானால், மீண்டும் சம்பந்தப்பட்ட கம்பெனியின் ஒரிஜினல் சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். டூப்ளிகேட் பயன்படுத்துவது போனின் இயங்கு திறனை பாதிக்கும்.

பண்டிகை பராக் பராக்... வீடு பளிச் பளிச்... வார்ட்ரோப் முதல் வாகனம் வரை... க்ளீனிங் டிப்ஸ்!

வாட்டர் டேங்க்... விஷப்பூச்சிகளின் வீடா?!

* வாட்டர் டேங்க் சுத்தம் செய்வதை பலரும் குறிப்பிட்ட இடைவெளியில் என்று இல்லாமல், எப்போதாவதுதான் செய்கிறார்கள். இதனால் தூசி, பாசி படர்ந்து பிரச்னைகள் ஏற்படுவதுடன் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகளின் வாழிடமாக மாறிவிடும் அபாயமும் உள்ளது.

* சரியான இடைவெளியில், வாட்டர் டேங்க் சுத்தம் செய்வதற்கு என இருக்கும் ஆட்கள், சர்வீஸை பயன்படுத்தி டீப் க்ளீனிங் (Deep cleaning) செய்வது மிக நல்லது. சர்வீஸில், யூவி ஒளியைக் கொண்டு சுத்தம் செய்யும் யூவி க்ளீனிங் (UV Cleaning) நல்ல பலன் தரும், தேர்வு செய்யலாம்.

நோட் பண்ணிக்கோங்க!

* சிறப்பான பராமரிப்புக்கு, 10,000 கிமீ ஓடிய பின் வாகனத்தை கம்பெனி சர்வீஸுக்கு விட வேண்டும்.

வீடு முதல் வாகனம் வரை இப்போது பளிச்!

வரவேற்போம் பண்டிகை நாள்களை!