தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பெட்ரூம் முதல் கிச்சன்வரை... ஷெல்ஃப்களில் அடுக்குங்கள் இப்படி! #Avaludan

பெட்ரூம் முதல் கிச்சன்வரை
பிரீமியம் ஸ்டோரி
News
பெட்ரூம் முதல் கிச்சன்வரை

வார்ட்ரோப், கிச்சன் ஷெல்ஃப், ஸ்டோர் ரூம் ஷெல்ஃப் எதுவாக இருந்தாலும் அடிக்கடி எடுக்கும் பொருள்களை நடுவில் உள்ள அடுக்கில் வைக்கவும்.

அலமாரியில் துணிகள் அடுக்க, சமையலறை அடுக்குகளில் டப்பாக்களை சீராக வைக்க வாசகர்கள் பின்பற்றும் வழிமுறைகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்துகொண்டவை இங்கே...

Krithika Venkat

முதலில், பயன்படுத்தாத துணிகளை வார்ட்ரோபில் இருந்து நீக்குங்கள். இரண்டாவது, எவற்றையெல்லாம் அடிக்கடி அணிவீர்களோ அவற்றை முன்னதாகவும் அவ்வப்போது அணிவது, எப்போதாவது அணிவது என்று அதற்கேற்றாற்போல உள்ளடங்கியும் அடுக்குங்கள்.

Naliniramachandran

சமையலறையில் குக்கர் வெயிட்களை ஒரு கிண்ணத்தில் வைத்திருந்தால் டென்ஷனைத் தவிர்க்கலாம்.

Raji Shankar

வார்ட்ரோப், கிச்சன் ஷெல்ஃப், ஸ்டோர் ரூம் ஷெல்ஃப் எதுவாக இருந்தாலும் அடிக்கடி எடுக்கும் பொருள்களை நடுவில் உள்ள அடுக்கில் வைக்கவும்.

Subashri Venkatesh

பாத்திரங்களை சைஸ் வாரியாக ஒன்றுக்குள் ஒன்று, ஒன்றின் மேல் ஒன்று என்று அடுக்கும்போது ஷெல்ஃபில் பாத்திரங்கள் பரவலாக இருக்காது; பார்க்கவும் நேர்த்தியாக இருக்கும்.

Rishi Prabhu

வாங்கி வரும் மளிகைப் பொருள்களை பாக்கெட்டுடன் வைக்காமல், சோம்பேறித்தனம் பார்க்காது உடனடியாகப் பாத்திரத்துக்கு மாற்றிவிடுவேன். மேலும், ஒவ்வொரு முறை பாத்திரத்தில் பொருள் தீர்ந்த பின்னரும் அதைக் கழுவிய பின்னரே மீண்டும் நிரப்புவேன். இதனால், எல்லா பாத்திரங்களையும் ஒரே நேரத்தில் கழுவிக் காய வைக்கும் சுமை இல்லாமல் இருக்கும்.

Nandhini

Chandramouli

ஹேங்கரில் பழைய வளையல்களை ஒட்டி வைத்து, துப்பட்டாக்களைத் தொங்கவிட்டால் அலமாரியில் இடம் சேமிக்கலாம்.

Deepika Kalidoss

அரிசி, பருப்பு டப்பாக்களில் காய்ந்த மிளகாய் போட்டு வைத்தால் பூச்சி, வண்டு வராது.

Sivakawya Senthilmurugan

எண்ணெய் பாட்டில்கள் வைக்கும் இடம் எண்ணெய்ப் பசையாகி, அதை சுத்தம் செய்வது சிரமமான வேலை ஆகிவிடும். நான் காளானுடன் வரும் பிளாஸ்டிக் டப்பாவை, எண்ணெய் வைக்கும் ட்ரேயாக வைத்து, அதில் டிஷ்யூ பேப்பர் விரித்துப் பயன்படுத்துவேன். அடிக்கடி டப்பாவை மாற்றிக்கொள்ளலாம், சுத்தம் செய்யும் நேரம் மிச்சம். அனைத்து மளிகைப் பொருள்கள், காய்கறிகளையும் ஒரு நோட்டில் எழுதி வைத்துள்ளேன். கடைக்குச் செல்லும் முன் இதை ஒரு முறை பார்க்கும்போது, எவற்றையெல்லாம் வாங்க வேண்டும் என்று மூளை எதையும் விடுபடாமல் குறித்துக்கொள்ளும்.

Anbu Bala

பொருள்களை வைப்பதற்கு அகலமான பாத்திரங்களை விட உயரமான பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது இடத்தை அடைக்காமல் இருக்கும்.

Raji Shankar

சமையலறையில் பிசுபுசுப்புத் தன்மையைக் கையாள, பழைய டேபிள் மேட், ரெயின் கோட்களை தேவையான அளவுகளில் வெட்டி கிச்சன் அடுக்குகள், எண்ணெய் ட்ரேக்கள் வைக்கப் பயன்படுத்தலாம்.

பெட்ரூம் முதல் கிச்சன்வரை
பெட்ரூம் முதல் கிச்சன்வரை

Sriidhya Prasath

மளிகைப் பொருள்களுக்கான டப்பாக்கள் வாங்கும்போது பருப்பு வகைகளுக்கு

ஒரே அளவில் ஒரு செட், காபித்தூள், டீத்தூள், சர்க்கரைக்கு ஒரு செட், தாளிப்புப் பொருள்களுக்கு ஒரு செட், மசாலா பொடிகளுக்கு ஒரு செட் என வாங்கி அடுக்கினால் நேர்த்தியாக இருக்கும்.

Sri Vidya

புடவைக்கு உள்ளேயே பிளவுஸையும் சேர்த்து மடித்து வைத்துவிட்டால், அவசரமாகக் கிளம்பும்போது பிளவுஸ் தேடும் நேரம் மிச்சமாகும்.

Andal Rengamannar

சத்து மாவு, கேப்பை மாவு, சிறுதானிய மாவு என மாவு வகைகள் உள்ள டப்பாக்களில் பெயர் எழுதி வைத்துக்கொண்டால் குழப்பம் இருக்காது.

Shama Imaam

கிச்சனில் மசாலா மற்றும் பருப்புப் பொருள்களை, ஊடாகத் தெரியும் (Transparent) விதமான கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்து வைக்கும்போது, எது எது எவ்வளவு இருக்கிறது என்ற அளவு தெரியும், காலியாகி வருவதை உடனே வாங்கிவிடலாம். மேலும், ஏற்கெனவே இருப்பவற்றை மீண்டும் மீண்டும் வாங்கிக் குவிக்காமலும் இது தடுக்கும்.

Gomathi Sivayam

சிந்தடிக் புடவைகள் அடிக்கடி சரிந்து, அடிக்கடி அடுக்குவதைத் தவிர்க்க, ஒவ்வொரு நான்கு புடவைக்கும் இடையில் கனமான ஓர் அட்டையை வைத்து, அதன் மேல் அடுக்கி விடுவேன். இதனால் புடவைகளும் சரியாது, நடுவில் இருந்து ஒரு புடவையை எடுப்பதும் எளிது.