Published:Updated:

தியேட்டருக்குக் கூட்டம் வந்துச்சா... சூரரைப் போற்று ஹிட்டா..?!

திரையரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
திரையரங்கம்

#HomeTheatreVSTheatre

தியேட்டருக்குக் கூட்டம் வந்துச்சா... சூரரைப் போற்று ஹிட்டா..?!

#HomeTheatreVSTheatre

Published:Updated:
திரையரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
திரையரங்கம்
திரையரங்கம் - தமிழர்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடம். தீபாவளி, பொங்கலில் புத்தாடை, ருசியான உணவுகளுக்கு அடுத்து இடம் பிடிப்பது ‘முதல் நாள் முதல் காட்சி’ புதுப்படம். காதலியுடனும் புதுமனைவியுடனும் பார்க்கும் திரைப்படங்களுக்கு மல்லிகை வாசமுண்டு.

தியேட்டர் என்றால் தமிழர்களுக்குத் திருவிழாதான். டென்ட் கொட்டாய் தொடங்கி ஷாப்பிங் மால் வரை விதவிதமான வடிவங்கள் எடுத்துவிட்டாலும் தியேட்டரில் படம் பார்ப்பது என்பதை உற்சாகமான கொண்டாட்டமாகத்தான் உருவாக்கிக்கொண்டார்கள் தமிழர்கள்.. அந்த தியேட்டர்கள் எட்டுமாதங்கள் இழுத்து மூடப்படும் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். எட்டு மாதங்களுக்குப் பிறகு எக்கச்சக்க பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டிருக்கின்றன தியேட்டர்கள் எப்படியிருக்கின்றன தியேட்டர்கள்?

தியேட்டருக்குக் கூட்டம் வந்துச்சா... சூரரைப் போற்று ஹிட்டா..?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரையரங்குகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்கவே ஒரு கூட்டம் வருகிறது. ‘இரண்டாம் குத்து’ மாதிரியான படங்களுக்கு நம்மூர்களில் எப்போதுமே கர்ச்சீப் கட்டித்தான் வருவார்கள். இந்தமுறை அது மாஸ்க்காக மாறியிருந்தது. சந்தானத்தின் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தில் காமெடிக் காட்சிகள் நன்றாக இருந்தாலும், படமாக அது முழுமை பெறவேயில்லை. அமெச்சூர் படங்களாகவே கோட்டாவும், நுங்கம்பாக்கமும் திருப்திப்பட்டுக்கொண்டன. பெரிய படங்களையெல்லாம் 75 % இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய பின்னரே வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

மார்ச் மாதம் வரை வெளியாகும் திரைப்படங்களுக்கு VPF (Virtual Print Fee) இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். ஏற்கெனவே சொன்னது போல், பெரிய படங்கள் வெளியாகும் வரை திரையரங்குகளில் எந்தப் படங்கள் வெளியாகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த இடைவெளியில் நிறைய சின்னப் படங்கள், ரொம்ப நாளாக வெளியாகாமல் இருக்கும் படங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தியேட்டர்களுக்கு மக்கள்கிட்ட எப்போவும் வரவேற்பு இருக்கு. இப்போ ரிலீஸான படங்கள் எதுவும் பெரிய படங்கள் இல்லை. இருந்தாலும் மக்கள் நாங்க எதிர்பார்த்ததைவிட அதிகமாதான் வர்றாங்க. இவ்வளவு நாள் வேற வழியில்லாமல்தான் ஓ.டிடியில படம் பார்த்துட்டு இருந்தாங்க. 50% சதவிகித இருக்கைகள்தான் என்றதால் ஒரு தொய்வு இருக்கிறது உண்மைதான். ஆனால், ஒரு பெரிய படம் வந்தால் தானாவே கூட்டம் அதிகமாகும். ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’ இந்த இரண்டு படங்களும் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நல்லா இருந்திருக்கும்னுதான் எல்லோரும் நினைக்கிறாங்க. டிசம்பர் மாசம் 75 % அனுமதி கொடுக்கச் சொல்லி தமிழக அரசுகிட்ட கேட்டிருக்கோம். நல்லது நடக்கும்னு நம்புறோம்” என்கிறார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.

தியேட்டருக்குக் கூட்டம் வந்துச்சா... சூரரைப் போற்று ஹிட்டா..?!

சரி, பாதுகாப்பு வசதிகளிலாவது எல்லாம் சரியா என்றால், அதுவும் முழுமையாக இல்லை. சாட் ஐட்டங்களை முற்றிலுமாய்க் குறைத்துவிட்டு, குளிர்பானங்கள், பாப்கார்ன் மட்டுமே பெரும்பாலான திரையரங்களுகளில் விற்கப்படுகிறது. ஆனால், குழுவாக வந்து படம் பார்ப்பவர்கள் கும்பலாகவே அமர்கிறார்கள். ஒரு சீட் விட்டு அமரவேண்டும் என்ற விதிமுறைகளையெல்லாம் மதிப்பதேயில்லை. சென்னையிலிருக்கும் மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளிலேயே இதுதான் நிலையென்றால், பிற ஊர்களில் என்ன நடக்கும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

“தியேட்டர்ல வந்தால்தான் மாஸ் இருக்கும். எல்லோரும் பல மாதங்களா வீட்டுக்குள்ளேயே இருக்காங்க. ஆபீஸ் வேலைகளைக்கூட வீட்டுக்குள்ள இருந்தே பண்ணிட்டு இருக்காங்க. அதனால, கொஞ்சம் வெளியே போயிட்டு வந்தால்தான் ரிலாக்ஸா இருக்கும்னு நினைச்சு தியேட்டர்களுக்கு வர்றாங்க. போகப்போக கூட்டம் அதிகரிக்கும்.

தியேட்டருக்குக் கூட்டம் வந்துச்சா... சூரரைப் போற்று ஹிட்டா..?!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பஸ் விட ஆரம்பிச்ச சில நாள்கள் ஆட்களே இல்லை. ஆனா, இப்போ படிக்கட்டுல தொங்கிக்கிட்டுப் போறாங்க. அதுமாதிரி, தியேட்டருக்கு மக்கள் வரத்து நிச்சயம் இருக்கும். எட்டு மாதங்களா வருமானமே இல்லாமல் கையில இருந்து செலவு பண்ணிக்கிட்டிருந்தோம். இப்போ பரவாயில்லை. லாபம் இல்லைன்னாலும் நஷ்டத்தைக் குறைக்க முடியுது. இன்னும் கொஞ்ச நாள்களில் பெரிய படங்கள் வந்திடும். அப்புறம், எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்திடும்” என்கிறார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, நம்மூரில்தான் இந்த நிலை மற்ற இடங்களில்..? அங்கேயும் திரையரங்குகள் பேய் பங்களாக்கள் ஆகியிருப்பதுதான் வேதனைதரும் விஷயம். அமிதாப்பச்சன், அக்‌ஷய் குமார், ஆயுஷ்மான் குர்ரானா என மூன்று தலைமுறை பாலிவுட் ஸ்டார்களின் படங்களும் ஓ.டிடி வசம் தான். நவாஸுதின், ராஜ்குமார் ராவ், விக்ராந்த் மாஸே படங்கள் எல்லாம் டஜன் கணக்கில் வெவ்வேறு ஓடிடிக்களில் வெளியாகி வருகின்றன. எவ்வளவு சுமாராக இருந்தாலும் 100 கோடி அள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் அக்‌ஷய் குமாரின் ‘லக்‌ஷ்மி’ திரைப்படமே ஓடிடி பக்கம் ஒதுங்கும் என திரையரங்குகள் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.

தியேட்டருக்குக் கூட்டம் வந்துச்சா... சூரரைப் போற்று ஹிட்டா..?!

25 வாரங்களாகத் திறக்கப்படாத திரையரங்கங்களால் 3,500 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. ஒரு வாரம் திரையரங்கம் திறக்கப்பட்ட போதும், குறைந்த அளவிலான கூட்டம்கூட இல்லாததால், பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களிலிருக்கும் திரையரங்கங்கள் மீண்டும் மூடப்பட்டுவிட்டன . இந்தாண்டு முழுக்க இதே நிலை தொடர்ந்தால், இந்தியாவில் 300 சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களாவது மொத்தமாய் மூடப்படலாம் என்பதே உண்மை .

“இனிவரும் காலங்களில் படங்கள் எல்லாம் தியேட்டர் - ஓடிடி ரெண்டிலேயும் ஒரே நாள் வெளியாகும். தியேட்டர் அனுபவம் வேணும்னு நினைக்கிறவங்க தியேட்டருக்கு வந்து பார்ப்பாங்க. மத்தவங்க வீட்ல இருந்தே பார்த்துக்குவாங்க. ஆக மொத்தம், ரெண்டு பிளாட்பாரம் ஆடியன்ஸுக்கும் அந்தப் படம் ஒரே நேரத்துல போய்ச் சேர்ந்திடும். கொரோனா பயத்துல இருக்கிறவங்களை நம்ம எப்படி தியேட்டருக்கு வந்துதான் படம் பார்க்கணும்னு கட்டாயப்படுத்த முடியும்? அதனால, அவங்க இருக்கிற இடத்துல நம்ம படத்தைக் கொடுக்கணும். ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்கள் ஓடிடியில பார்த்துட்டு இவ்ளோ கொண்டாடுறாங்க. அதே படங்கள் தியேட்டர்ல வெளியாகியிருந்தா வந்திருப்பாங்களான்னு ஒரு கேள்வி இருக்கு. எல்லோரையும் படம் பார்க்க வைக்குற வாய்ப்பா ஓடிடி இருக்கு. தியேட்டர்ல வெளியாகியிருந்தால், 50% இருக்கைகளில் எத்தனை பேர் வந்து பார்த்திருப்பாங்கன்னு தெரியாது” என்று சொல்லும் தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய சொந்த அனுபவத்தையே பகிர்ந்துகொள்கிறார்.

“நான் தயாரிச்ச ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் இந்த வாரம் தியேட்டர்ல வெளியாகுது. ஆனா, எவ்ளோ பேர் வருவாங்கன்னு தெரியலை. சாதாரண நாள்களிலேயே இந்த மாதிரியான சின்னப் படத்துக்கு நான் எதிர்பார்க்கிறது 30% மக்கள்தான். அதனால, எனக்கு இந்த 50% ஓகேதான். இன்னும் கொஞ்சம் சதவிகிதம் இருக்கைகளுக்கு அனுமதி கிடைச்சவுடன் வெளியிடலாம்னு நினைச்சா பெரிய படங்கள் எல்லாம் வந்து தியேட்டர்கள் கிடைக்கிறதுல சிக்கல் வந்திடும். அதுக்கு இது பரவாயில்லைன்னு நினைக்கிறேன். அதே சமயம், ஒரு பெரிய படத்துடைய பட்ஜெட் 50 கோடி என்றால், அதுக்கான வட்டி மாதம் 2%. ஏற்கெனவே, இத்தனை மாதங்களா காத்திருந்தவங்க அந்தப் பணத்தை எல்லாம் எடுக்க சரியான காலம் வரணும்னு நினைப்பாங்கதானே. அதுக்காகதான் எல்லாப் பெரிய படங்களுடைய தயாரிப்பாளர்களும் வெயிட்டிங். இவ்ளோ பிரச்னைகள் இருக்கு. எல்லோரும் லாபமடையணும்னா, நான் மேலே சொன்ன மாதிரி எல்லோரும் கலந்துபேசி அடுத்த கட்டத்துக்கு நகரணும்” என்கிறார் .

தியேட்டருக்குக் கூட்டம் வந்துச்சா... சூரரைப் போற்று ஹிட்டா..?!

உலகளவில் ‘டெனெட்’ திரைப்படத்தை எப்படியாவது வெளியிடுவேன் என அடம்பிடித்து வெளியிட்டார் கிறிஸ்டோபர் நோலன். படம் பெரிய வசூலைப் பெறவில்லை. இந்த ஆண்டு வந்திருக்க வேண்டிய பெரிய பட்ஜெட் ஹாலிவுட் படங்கள் 2020 என்பதை அழித்து 2021 என வெளியீட்டுத் தேதியை மாற்றிவிட்டு அமைதியாகிவிட்டார்கள். இந்தியாவில் பெரிய வசூலைக் குவித்த ‘வொண்டர் வுமன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாதம் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியாகும் அதே நாள், HBO மேக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது.

ஐரோப்பாவில் கொரோனா அதன் இரண்டாம் அலையில் இன்னும் வீரியமாய் தாக்கிக்கொண்டிருக்கிறது. இதுவரையில் 5 லட்சம் பேர் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜூன் 15-ம் தேதி சமூக இடைவெளி விதிகளுடன் மீண்டும் இத்தாலியில் திரையரங்கங்கள் திறக்கப்பட்டன. தற்போது அவற்றையும் மூடச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் இத்தாலியின் பிரதமரான கோன்டே. அமெரிக்காவே விழாக்கோலத்தில் காட்சியளிக்கும் ThanksGiving வைபவம் நடைபெறும் காலமிது. அதையொட்டியே சில படங்களை வெளியிடுவார்கள். ஆனால் அமெரிக்காவிலும் கனடாவிலும் நூற்றுக்கணக்கான தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டிருக்கின்றன.

மற்ற ஊர்களில் எப்படியோ, தமிழகத்தைப் பொறுத்தவரை, விஜய்யின் மாஸ்டர் தான் மீண்டும் திரையரங்கம் நோக்கி மக்களை இழுத்து வரவைக்கப்போகும் கடைசிக் கயிறு. அந்த ஒற்றை நம்பிக்கையில் அடுத்த இரு மாதங்கள் காட்சிகளைக் குறைவான எண்ணிக்கைகளுக்கு நிறுவனங்கள் ஓட்டப்போகின்றன.

இப்போதைக்கு ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழியை நம்பித்தான் இருக்கிறது தமிழ்த்திரையுலகம்.

ற்போது ஓடிடியில் வெளியாகியிருக்கும் இரண்டு படங்கள் கலெக்‌ஷன் பற்றி ஓடிடி தரப்பில் விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் இவை. ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவின் சம்பளம் இல்லாமல் படத்தின் பட்ஜெட் 20 கோடி என்கிறார்கள். சம்பளம் சேர்த்தால் 45 கோடி. அமேசான் ப்ரைமுக்கு மட்டும் விற்றது 50 கோடிக்கு மேல். தமிழ், தெலுங்கு சாட்டிலைட் உரிமை, இந்தி டப்பிங், ரீமேக் உரிமை, ஓவர்சீஸ் சாட்டிலைட் உரிமை என எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட நூறு கோடி என்கிறார்கள். ஆக, படம் நல்ல லாபத்திற்கு விற்றிருக்கிறது. அந்த லாபத்தில் இருந்துதான் 5 கோடியை ஒவ்வொரு சங்கத்திற்கும் பிரித்து நன்கொடையாகக் கொடுத்தார், சூர்யா. படம் வெளியான பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கும் சூர்யா, படத்தில் உள்ளவர்களுக்குப் பரிசுகளும் கொடுத்திருக்கிறார்.

‘மூக்குத்தி அம்மன்’ பட பட்ஜெட் 12 கோடி. ஹாட்ஸ்டார், சாட்டிலைட், டப்பிங் எல்லாம் சேர்த்து 21 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியிருக்கிறதாம். ஆக, தீபாவளிக்கு ஓடிடி தளங்களில் வெளியான இரண்டு படங்களுமே அதனுடைய தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கின்றன.

கடந்த மாதம் வெளியான ‘க\பெ.ரணசிங்கம்’ படத்தைப் பார்க்க வேண்டுமென்றால் ஜீ5 சந்தாதாரர்களாக இருந்தாலும் தனியே பணம் செலுத்திப் பார்க்கவேண்டும் என்ற முறை இருந்தது. அந்தப் படத்தை 12 கோடி ரூபாய்க்கு எடுத்து 13 கோடிக்கு விற்றிருக்கிறார்கள். 199 ரூபாய் கொடுத்து கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் மேலான நபர்கள் ஜீ ப்ளக்ஸிஸ் பார்த்திருக்கிறார்கள். இதிலேயே 14 கோடி ரூபாய் வந்துவிட்டது. தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் லாபம். ஜீ 5 நிறுவனத்துக்கு இதற்குப்பிறகு படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது கிடைக்கும் விளம்பர வருமானங்களும் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism