வீடுகளுக்கென தனி அதிர்வு உண்டு. வீடு வந்து சேர்ந்தாலே ‘அப்பாடா’ என இருப்பதாகப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம். போலவே வீடுகளுக்கு தனி மணமும் உண்டு. அது அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் உருவாக்கும் ஒன்றுதான். உங்கள் வீட்டை எப்படி இயற்கையாகவே மணமாக வைத்திருப்பது என்பதை இந்த இதழில் பார்க்கலாம்.
* டிபார்ட்மென்டல் கடைகளில் நறுமண எண்ணெய்கள் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்த டிஃப்யூசர்ஸ் எனும் கருவி வேண்டும். டிஃப்யூசரில் உங்களுக்குப் பிடித்த நறுமண எண்ணெயை ஊற்றி வைத்தால், அது மெதுவாக காற்றில் கலந்து, வீடு முழுக்க மணம் வீசும்.
* பேக்கிங் சோடா இல்லாத வீடு உண்டா? ஆனால், அதை வைத்து மணம் உண்டாக்க முடியும் என்பதை பலர் அறிவதில்லை. உங்களுக்குப் பிடித்த நறுமணம் கொண்ட சென்ட்டை, பேக்கிங் சோடாவுடன் கலந்து கபோர்டு, ஷெல்ஃப் போன்ற இடங்களில் வைத்து விடுங்கள். அந்தச் சூழலே வாசமாக மாறும்.
* சிம்மர் பாட் (Simmer Pot) கேள்விப்பட்டிருக் கிறீர்களா? பாத்திரத்தின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றிவிடுங்கள். அதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத்தை நறுக்கிப் போடவும். தேவைப்பட்டால் சில துளிகள் வெனிலா எசென்ஸும் சேர்த்து, காற்று வரும் ஜன்னல் பக்கத்தில் வைத்து விடுங்கள். இப்போது அந்த அறை முழுக்க ஆரஞ்சும் வெனிலாவும் கலந்த மணம் வீசும்… வாவ்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS* பலருக்கும் காபி பிடிக்கும்; காபியின் மணமும் பிடிக்கும். கொஞ்சம் கிரியேட்டிவ்வாக யோசித்தால் வீடு முழுக்க லேசான காபியின் மணம் கொண்டு வந்துவிடலாம். டிகாக்ஷன் போட்டுவிட்டு மீதமாகும் காபி தூளை கிச்சனில் ஒரு மூலையில் வைக்கலாம். அதன் மெல்லிய மணம் உங்களுக்குப் புத்துணர்வூட்டும்.
* பலரும் பயன்படுத்தும் எளிமையான விஷயம் ஊதுவத்தி. உங்கள் குடும்பத்துக்குப் பிடித்த நறுமணத்தில் ஊதுவத்தியைத் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்துங்கள். கூடவே நறுமணம் கொண்ட மெழுகு வத்திகளும் பயன்படுத்தலாம். கெமிக்கல் அதிகம் கொண்ட மெழுகு அல்லது ஊது வத்திகளைத் தவிர்க்கலாம்.
* புதிய மணம் கொண்டு வருவது ஒரு வகை என்றால், துர்நாற்றம் வீசும் விஷயங்களைத் தவிர்ப்பது இன்னொரு வகை. குறிப்பாக, சமையலறையில் துர்நாற்றம் வீசும் எந்தக் கழிவுகளையும் வைத்திருக் காதீர்கள். பயன்படுத்திய சாக்ஸ், ஈரமான துணிகள் போன்ற துர்நாற்றம் தரும் எதையும் உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.