Published:Updated:

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

அனுபவம் பகிரும் பொதுமக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

சூப்பர் மார்க்கெட்டுக்குப் போறதுக்குப் பதிலா, மளிகைக்கடையில பொருள்கள் வாங்க போகிறேன்!

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

சூப்பர் மார்க்கெட்டுக்குப் போறதுக்குப் பதிலா, மளிகைக்கடையில பொருள்கள் வாங்க போகிறேன்!

Published:Updated:
அனுபவம் பகிரும் பொதுமக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவம் பகிரும் பொதுமக்கள்!
டந்த ஏழு மாதங்களாகக் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். விளைவு, அவரவர்க்குத் தெரிந்த முறையில் செலவுகளைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்தக் கொரோனா காலத்தில் எப்படியெல்லாம் செலவுகளைக் குறைத்தீர்கள் எனச் சிலரிடம் கேட்டோம். அவர்கள் சொன்ன பதில் இனி...

“ஆஃபர்களைக் கண்டுக்கிறதில்லை!’’

பாலாஜி, தனியார் நிறுவன ஊழியர்

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மார்க்கெட்டுக்கு லேட்டஸ்ட்டா எலெக்ட்ரானிக் கேட்ஜெட் ஏதும் வந்துவிட்டால் உடனே வாங்கிடுவேன். இப்ப அப்படிப் பண்றதில்ல. அப்புறம், பிராண்டட் ஷோரூம்கள்ல ஆஃபர் போட்டிருந்தா முதல் ஆளா ஓடிப்போய் விதவிதமா ஆடைகள், சாமான்கள்னு அள்ளிட்டு வந்திடுவேன். அதுக்கும் எண்ட் கார்டு போட்டுட்டேன். இதனால இந்த கொரோனா நேரத்துல கணிசமானத் தொகை மிச்சமாயிருக்கு. இதையே தொடரணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

கொரோனாவுக்கு முன்னாடி என் பையன் எவ்வளவு காஸ்ட்லியான டாய் கேட்டாலும் வாங்கிக் கொடுத்திடுவேன். இப்ப சம்பளம் குறைஞ்சிட்டதால ‘நோ’ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.’’

“ட்ரீட் வைக்கிறதை நிறுத்திட்டேன்!’’

மைதிலி மணிகண்டன், சாஃப்ட்வேர் இன்ஜினீயர்

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

“கொரோனாவுக்கு முன்னாடி அடிக்கடி ஆன்லைன்ல உணவு ஆர்டர் பண்ணுவேன்.  வீக் எண்ட்ல வெளியே போறப்போ பிடிச்சப் பொருள்களையெல்லாம் வாங்கிடுவேன். அதுக்கெல்லாம் இப்ப ஒரு பிக் நோ.

முன்னால ஒரு கிலோ உளுத்தம்பருப்பு வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனா, பக்கத்து ரேக்ல இருக்கிற ஜாம் பாட்டில், பனீர்னு அப்போதைக்குத் தேவையே இல்லாத பொருள்களையும் வாங்கிட்டு வந்து ஃபிரிட்ஜல அடுக்கி வச்சிடுவேன்.

இதை கன்ட்ரோல் பண்றதுக்காக சூப்பர் மார்க்கெட்டுக்குப் போறதுக்குப் பதிலா, மளிகைக்கடையில பொருள்கள் வாங்க ஆரம்பிச் சிருக்கேன். அங்க வெளியே நின்னு பொருள்கள் வாங்க வேண்டியிருக்கிறதால, தேவைப்படாததெல்லாம் என் கண்ணுல படாது. பணமும் வீணாகச் செலவாகாது.

சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட ஃபிரெண்ட்ஸுக்கு ட்ரீட் வைக்கிற பழக்கம் என்கிட்ட இருந்துச்சு. இப்போ அப்படியொரு விஷயத்தையே மறந்திட்டேன்.’’

“வாரத்துக்கு மூணு நாலு நாளாவது நான்வெஜ் சாப்பிடுவோம். உடலுழைப்புக் குறைஞ்சுபோயிட்டதால, இப்ப ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை மட்டுமே நான்வெஜ் சாப்பிடுகிறோம்!”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘பட்ஜெட் போட்டு செலவு பண்ண ஆரம்பிச்சிருக்கேன்!’’

ராமஜெயம், ஆசிரியை

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

“மாதம் பிறந்தால் பட்ஜெட் போட்டு, வரவு செலவு கணக்குகள் எழுதி வைத்து குடும்பம் நடத்துகிற பழக்கம் நம்மகிட்ட மறைஞ்சுடுச்சுன்னே சொல்லலாம்.

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

மற்ற பள்ளிக்கூடங்கள் அளவுக்கு நான் வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்தில் சம்பளத்தைக் குறைக்க வில்லைன்னாலும், 35 வருடங் களுக்கு முன்னால் எனக்குத் திருமணமான புதுசுல எப்படி பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தினோமோ, அதேபோல மறுபடியும் சிக்கனமா குடும்பம் நடத்த ஆரம்பித்திருக்கிறேன். அந்தந்த நேரத்துல விலை மலிவா கிடைக்கற சீஸனல் காய்கறி, பழங்களை மட்டும் வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சுருக்கேன்.

பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பதால், உடலுழைப்பு கொஞ்சம் குறைந்துவிட்டது. அதனால் அரிசி உணவுகளைக் கொஞ்சம் தவிர்த்துவிட்டு, சொந்த ஊரிலிருந்து அனுப்பி வைத்த சிறு தானியங்களைச் சமைத்துச் சாப்பிட ஆரம்பித்தோம். அந்த வகையில் பணத்துடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறோம்.’’

‘‘அடிக்கடி ஷாப்பிங் போறதை விட்டுட்டேன்!’’

ஆர்த்தி அருண், பல் மருத்துவர்

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

“நான் ஒரு ஷாப்பிங் பிரியை. நவராத்திரிக்குக்கூட புதுசு புதுசா டிரெஸ் போடுவேன்னா பார்த்துக் கோங்க. அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமும் எங்க வீட்ல உண்டு. லாக்டெளன் முடிஞ்சு கடைகள் எல்லாம் திறந்த பிறகும், செலவுகளைக் குறைக்கிறதுக்காக இந்த ரெண்டு பழக்கத்தையும் கிட்டதட்ட விட்டுட்டோம்னு தான் சொல்லணும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘நோ அவுட்டிங், நோ ஹோட்டல்!’’

பிரபாகரன், பிசினஸ்மேன்

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

“ஆரோக்கியமா சாப்பிடுறதால, ஹைஜீனா இருக்கிறதால, மருந்து மாத்திரை செலவு சுத்தமா இல்ல. கடந்த ஆறு மாசத்துல ஒரு தைல பாட்டில்கூட வாங்கல.  வொர்க் ஃப்ரம் ஹோம்கிறதால பெட்ரோல் செலவு மிச்சமாயிடுச்சு. இவையெல்லாம் நாங்களா குறைச்ச செலவில்ல. கொரோனா புண்ணியத்துல குறைஞ்ச செலவு. கொரோனா வுக்கு முன்னாடி என் பொண்ணை அடிக்கடி அவுட்டிங் கூட்டிட்டுப் போவேன். குடும்பமா வெளியே டின்னர் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொரோனா பயத்தால, இந்த ரெண்டு விஷயங்களையும் தவிர்த்துவிட்டேன். இதனால கணிசமான தொகை மிச்சமாக ஆரம்பிச்சிருக்கு. இதையே தொடர்ந்து ஃபாலோ பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்.

வாரத்துக்கு மூணு நாலு நாளாவது நான்வெஜ் சாப்பிடுவோம். உடலுழைப்புக் குறைஞ்சுபோயிட்டதால, இப்ப ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை மட்டுமே நான்வெஜ் சாப்பிடுகிறோம். நாங்க பிளான் பண்ணி மிச்சம் பிடிச்ச செலவுன்னா இது மட்டும்தான்.’’

மானாவாரியாகச் செய்த செலவுகளுக்குக் கடிவாளம் போட்ட கொரோனாவுக்கு நன்றி சொல்வோம்!

ஃபைனான்ஷியல், நான்ஃபைனான்ஷியலாகச் சேமிக்கத் தொடங்குங்கள்!

- லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர்

“இந்த ஐந்து பேருமே சொல்லிவைத்தாற்போல ஷாப்பிங் செலவுகளையும் ஹோட்டலில் சாப்பிடுகிற செலவையும் குறைத்திருக்கிறார்கள். ஷாப்பிங்கை குறைத்ததால் பணம் சேமிப்பாகியிருக்கிறது. வெளி உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தியிருப்பதால் அல்லது குறைத்திருப்பதால் ஆரோக்கியம் கூடியிருக்கிறது. ஒருவர் சீஸனல் காய்கறிகளை மட்டுமே சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம் என்றிருக்கிறார். சேமிப்பில், இது எவர்கிரீன் விஷயம். ஆனால், லாக்டெளன் முழுவதுமாகத் தளர்த்தப்பட்ட பிறகு, இவர்கள் இதேபோல் சிக்கனமாக இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

கொரோனா காலத்தில் செலவை எப்படிக் குறைத்தீர்கள்? - அனுபவம் பகிரும் பொதுமக்கள்!

அலுவலகம் சென்றபிறகு, அதற்குத் தேவையான ஆடைகள் வாங்குவது, ஷூ வாங்குவது என்று குறிப்பிட்ட சில விஷயங்களுக்குக் கட்டாயம் செலவழித்துதான் ஆக வேண்டியிருக்கும். அதுபோன்ற நேரங்களில், நமக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே வாங்க வேண்டும் என்பதில் இந்த ஐவருமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதேபோல, இன்னும் சில மாதங்களில் அதாவது, கொரோனா பயம் குறைந்த பிறகு, ஆன்லைனில் உணவுகள் ஆர்டர் செய்வது, டின்னருக்கு வெளியே போவது எல்லாம் மறுபடியும் ஆரம்பிக்கவே செய்யும்.

இதை முழுவதுமாக நிறுத்திவிட முடியாது. அதனால் வாரத்துக்கு ஒருநாள் என்பதை மாதத்துக்கு ஒருநாள் என்ற ஒழுக்கத்துக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள் என்றால், கணிசமான அளவு பணம் சேமிப்பாவதை நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது. இந்த ஐந்து பேருக்கும் நான் சொல்ல விரும்புவது, தற்போது நீங்கள் சேமிக்கிற பணத்தை எப்படி முதலீடு செய்யலாம், எதில் முதலீடு செய்யலாம் என்பதை நீங்கள் உடனடியாக யோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு, இந்தப் பணத்தை ஃபைனான்ஷியல், நான்ஃபைனான்ஷியல் என இரண்டு வழிகளில் சேமிக்க முடியும். இவர்கள் ஐந்து பேரிடமும் சேமிப்பாகியிருக்கிற பணம் ஒரு போனஸ் போலதான்.

இந்தப் பணத்தை பேங்க்கில் போட்டு வைத்தீர்கள் என்றால், சின்னச் சின்ன செலவுகள் வரும்போது எடுத்துச் செலவழித்துவிடுவீர்கள். இதுவொரு தொடர் சேமிப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்களுடைய பிள்ளைகளின் பெயரில் போஸ்ட் ஆஃபீஸில் ‘சுகன்யா சம்ருதி’ போன்ற நீண்டகாலத் திட்டத்தில் போட்டு வைக்கலாம். இது ஃபைனான்ஷியல் சேமிப்பு. அல்லது, நீங்கள் பல காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த, உங்களுக்குத் தேவையான ஒரு கேட்ஜெட்டை வாங்கலாம். அல்லது வேலையில் உங்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்கிற ஒரு சாஃப்ட் ஸ்கில் பயிற்சியை ஆன்லைனில் கற்றுக்கொள்ளலாம். இதுவும் ஒருவகையில் முதலீடுதான். இது நான்ஃபைனான்ஷியல் சேமிப்பு. இந்த இரண்டையும் எல்லோரும் செய்யத் தொடங்குங்கள்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism