பிக் பாஸ்கெட் நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள் குறித்த டேட்டாக்கள் சமீபத்தில் திருடுபோயின. இந்த ஆன்லைன் நிறுவனத்தில் பொருள்களை வாங்கிய பல லட்சம் வாடிக்கையாளர்கள் குறித்த டேட்டாக்கள் வெறும் 40,000 டாலருக்கு விற்கத் தயார் என டார்க் வெப் (Dark Web) என்ற தகவல் ஹாக்கர் இணையதளத்தில் வெளியானது.

இந்தத் தகவலைப் பார்த்து அந்த ஆன்லைன் நிறுவனத்தில் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ந்து போனார்கள். அவர்கள் பெயர், முகவரி, செல்போன் நம்பர், வங்கி விவரங்கள், ரகசிய எண் என அத்தனையும் ஹாக்கர்கள் கையில் கிடைத்து, அதைப் பொதுவெளியில் வெளியிட்டிருப் பார்களோ, இதனால் நம்முடைய வங்கியிலிருந்து பணம் பறிபோகுமோ என்ற கவலை அவர்களை வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில், உங்களைப் பற்றிய விவரங்கள் திருடப்பட்டு பொதுவெளியில் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள https://amibreached.com என்ற இணைய தளத்துக்குச் சென்று, உங்களைப் பற்றிய டேட்டா ஏதும் இருக்கிறதா என்று தேடினால், அது உடனே சொல்லிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஹாக்கர்களிடம் சிக்காமல் எப்படித்தான் தப்பிப்பதோ!

ஈசாப்: ஸ்விக்கி அதிரடி

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தன் ஊழியர்களுக்கு இரண்டாவது முறையாகப் பங்குகளைத் (ESOP) தரப்போகிறது. சுமார் 7 - 9 மில்லியன் டாலர் மதிப்பில் ‘ஈசாப்’ அடிப்படையில் பங்குகள் தரப்படும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலை பார்த்து வருபவர்களுக்கும் ஊரடங்கின்போது வேலையிலிருந்து நீக்கப்பட்டவர் களுக்கும் இந்த ‘ஈசாப்’ பங்கு வழங்கப்படவிருக்கிறது. 2018-ல் முதல் ‘ஈசாப்’ பங்குகளை வழங்கியது ஸ்விக்கி; இப்போது இரண்டாவது முறையாகவும் வழங்கப்போகிறது.

ஸ்விக்கிக்கு ஜே!

விசாரணையில் கூகுள் பே!

ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது நுழைந்திருக்க, கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்த கூகுள் பே-வை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா. பணப் பரிமாற்றம் செய்யும் பிற ஆன்லைன் நிறுவனங் களின் ஆப்பை கூகுள் பிளேஸ்டோரில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படை யில் கூகுள் பே மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவின் கேள்விகளுக்கு கூகுள் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டியிருக்கலாம் என்கிறார்கள்.

கூகுளுக்கே செக்!

32% உயர்ந்த காப்பீட்டு பிரீமியம்!

கொரோனா நோய்த்தொற்று வந்ததன் விளைவாக எல்லோரும் பயந்துபோயிருக்கிறார்கள். இதுவரை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதவர்கள்கூட இப்போது பாலிசி எடுத்துவருகிறார்கள். இதனால் புதிய பாலிசிகள் மூலம் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கிடைத்த பிரீமியம் கடந்த அக்டோபரில் 32% உயர்ந்திருக்கிறது. நம் நாட்டில் மொத்தமுள்ள 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கடந்த அக்டோபரில் ரூ.22,776 கோடி அளவுக்கு புதிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூலம் பிரீமியத்தை ஈட்டின. கடந்த ஆண்டில் அக்டோபரில் ரூ.17,271 கோடி மட்டுமே புதிய பாலிசிகள்மூலம் பிரீமியம் வசூலானது. கடந்த செப்டம்பரில்கூட அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 24% அளவுக்கு மட்டுமே புதிய பாலிசிகள் மூலம் பிரீமியம் அதிகரித்தது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதே பெஸ்ட்!

பாதியாகக் குறைந்த ஜாக் மா நிறுவனத்தின் மதிப்பு!

சீனாவின் மிகப்பெரும் தொழிலதிபரான ஜாக் மாவின் ஆன்ட் (Ant) நிறுவனத்தின் பங்கு வெளியீடு கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால், நிறுவனத்தின் மதிப்பை 280 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலராகக் குறைத்து மதிப்பிடுகிறது பங்கு ஆய்வு நிறுவனங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் 280 பில்லியன் டாலருக்கு மதிப்பிட்டதாகவும், தற்போது அதன் மதிப்பு பாதியாகக் குறைந்திருப்பதாகவும் அந்த நிறுவனங்கள் சொல்கின்றன.

இந்த சவாலைத் தாண்டி வருவாரா ஜாக் மா?