ஒரு தலைவனாய் நீங்கள் செய்யும் தவறுகள் உங்களுடைய டீம் சிறப்பாகச் செயல்படுவதை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது மைக் விக்ஸ் என்பவர் எழுதிய ‘ஹெளவ் நாட் டு மேனேஜ் பீப்பிள்’ என்ற புத்தகம். அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதைவிட எப்படி நிர்வகிக்கக் கூடாது என்பது பற்றி இந்தப் புத்தகத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் உள்ள முக்கியமான விஷயங்கள் இனி...

மோசமான பாஸாக இருப்பது சுலபம்..!

1. ஒரு பாஸாக (மேனேஜராக)ப் பணி செய்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. உங்களுடைய சொந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, மற்றவர் நிறுவனத்தில் நீங்கள் பாஸாகப் பணிபுரிந்தாலும் சரி, ஒரு நாளின் பலவேளைகளில் நீங்கள் சொதப்பவே செய்வீர்கள். இதுதான் நிதர்சனத்தில் உள்ள நிலைமை. ஒவ்வொரு நாளும் சிறப்பான முன்னேற்றங்களைக் கொண்டு இயங்கும் பாஸாக இருப்பதைவிட, ஒரு மோசமான பாஸாக இருப்பதே மிகச் சுலபமான விஷயம்.

டீம் அல்ல, நான்தான் முக்கியம்..!

2. டீம் என்ற எண்ணத்தைத் தூக்கி கடாசிவிட்டு செயல்படும் தன்மை. எனக்கு எல்லாம் தெரியும். எனக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு என் அளவுக்கு அறிவு இல்லை என்ற எண்ணம் கொண்டு செயல்படுவது தவறு. இதுபோன்ற எண்ணத்தால் தான் ஒரு மோசமான நிர்வாகி என்பதுகூட அந்த நிர்வாகிக்குத் தெரியாமல் போய்விடுகிறது. ‘எனக்கு என் டீமில் உள்ளவர்கள் பெயர் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், என்னைப் பற்றி எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம், டீம் என்பதைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் இல்லையா?

ஊழியர்களைப் பயன்படுத்திக் கொள்வது..!

3.  நமக்குக் கீழ் பணிபுரிபவர்களைப் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். அவர்களை மதிப்பாக நடத்துவதுபோல் நடித்து (நம்முடன் அமர்ந்து காபி, குக்கீஸ் எல்லாம் சாப்பிடும் அந்தஸ்த்தையெல்லாம் தந்து) அவர்களின் அபிமானத்தைப் பெற்றால், அவர்கள் நம்முடைய காலுக்குக்கீழ் இருந்து நமக்காக இரவுபகல் பாராமல் உழைப்பார்கள் என்று நினைப்பது மகா தவறு. பாஸ் நம்மை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால், அவர்கள் எளிதாக விலகிச் சென்றுவிடுவார்கள்.

இதேபோல, டீமில் இருப்பவர்களை எதையும் முன்னால் நின்று செய்ய விட்டுவிடாமல் இருப்பது. அதுவும் பிரசன்டேஷன் போன்ற வேலை களைச் செய்ய விட்டுவிடவே கூடாது. ஏனென்றால், அது என்னுடைய புராஜெக்ட். நான் செய்தால்தான் எனக்குப் பெருமையும் பதவியும் கிடைக்கும் என்ற எண்ண மெல்லாம் எப்படி நிர்வகிக்கக் கூடாது என்பதற்கான தலைசிறந்த உதாரணங்களாகும்.

தகவல்களைப் பகிறாதீர்கள்..!

4. தகவல்களை ஒருபோதும் கீழே பணிபுரிபவர்களிடம் பகிர்ந்து விடக் கூடாது; எது அவர்களுக்கு தேவைப்படுகிறதோ, அதை மட்டுமே அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அவர்கள் தகவல் தெரியாமல் இருட்டில் இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு நமக்கு அது நல்லது. நிறுவனத்தைப் பொறுத்தவரை, தகவல்களே மிகப் பெரிய சக்தி. அதை எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குப் பகிராமல் வைத்துக்கொண்டால் எல்லோரும் நம்மைக் கேட்டே வேலை செய்வார்கள். கெத்துதான் போங்கள். யாரையும் தப்பித் தவறி நம்பி தகவலைப் பகிரவே கூடாது. யாருக்குத் தெரியும், அவர் நமக்குப் போட்டியாக வந்துவிட்டால்? டீம் என்பது நம்மைச் சார்ந்தே இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் சொந்த முடிவுகளை எடுத்துச் செயல் பட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் கொண்டிருப்பது.

யார் சொல்வதையும் கேட்கக்கூடாது..!

5. யார் சொல்வதையும் கேட்கவே கூடாது. நாமாகவே சொந்தமாக யாரையும் கலந்துகொள்ளாமல் முடிவெடுக்க வேண்டும். டீமிடமிருந்து வரும் பின்னூட்டங்களைக் குப்பையில் போடுங்கள். அவர்களுக்கு அந்தத் தகுதி இருந்தால் ஏன் அந்த வேலையில் (டீமின் அங்கத்தினராக) இருக்கிறார்கள். தகுதி இல்லாதவர்கள் தரும் பின்னூட்டத்தை எல்லாம் நாம் ஒருபோதும் ஒரு பொருட்டாக மதித்து கருத்தில்கொள்ள வேண்டியதேயில்லை. முக்கியமாக, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது கிறுக்குத்தனம். நம்மிடம் இருக்கும் அதிகாரத்தை ஒருவருக்குப் பகிர்ந்து தந்துவிட்டால் அவர் அந்த வேலையில் நம்மைவிட சிறப்பாகச் செயல்பட்டு நம் வேலைக்கும் பதவி உயர்வுக்கும் ஆபத்தை விளைவித்துவிடுவாரே என்ற எண்ணமும் தவறான நிர்வாகத் துக்கான உதாரணம் ஆகும்.

கற்றுத்தருவது கூடாது..!

6. தப்பே நடக்கக் கூடாது. தப்பு செய்தால் வேலையை விட்டு தூக்கிவிட்டு வேறு பணியாளரைப் பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம். என்னது கற்றுக்கொடுப்பதா? அதற்குத்தான் இங்கே முதல் போட்டு தொழில் நடத்துகிறோமா? சம்பளம் கொடுக்கிறோம் இல்லையா? அவர்களாகவே கற்றுக்கொள்ள வேண்டியதும் அவர்களுடைய கடமை என்று நினைப்பதும் தவறான நிர்வாகமே!

வேண்டப்பட்டவர்களுக்கே சம்பள உயர்வு..!

7. வேண்டப்பட்ட நபர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகளை வாரி வழங்குவோம். அலுவலகத்தில் எப்போது பார்த்தாலும் சீட்டில் இருப்பவர் (அதிலும் இரவு 10 மணி வரை) எந்த அளவு அறிவும் திறமையும் இல்லாதவராக இருந்தாலும் அவரைத் தொடர்ந்து பலப்படுத்துவோம். வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டுக்குப் போக நினைப்பவன் துரோகி. நிறுவனத்துக்கு (எனக்கும்) விசுவாசமே மிக மிக முக்கியம். திறமை, தகுதி என்பதையெல்லாம் தூக்கிக் குப்பையில் போடுங்கள் என்ற எண்ணம் கொண்டிருப் பவர்களாலும் பணியாளர்கள் உற்சாகம் இழக்கவே செய்வார்கள்.

பொது இடத்தில் கண்டித்தல்..!

8. பணியாளர்கள் செய்யும் தவறுகளை பொது இடத்தில் வைத்து கண்டிக்க வேண்டும். அப்போதுதான் அதுபோன்ற நிலை நமக்கு வரக்கூடாது என்பதற்காக மற்றவர்கள் பயத்துடன் பணிபுரிவார்கள். டீமில் இருக்கும் ஒரு முட்டாளை எதற்கெடுத்தாலும் வெளுத்து வாங்கினால் மற்றவர்களுக்கு அது சிறந்த பாடமாக இருக்கும்.

வேலையை ஒழுங்காகச் செய்யாவிட்டால் வேலை போய்விடும் என்ற பயத்தில் அனைவரையும் தொடர்ந்து வைத்திருப்பதும் சிறந்த உத்தியாக இருக்கும். பாராட்டுதலும் கடிந்து கொள்வதும் அடுத்தடுத்து திட்டமிட்டுச் செய்யப்பட வேண்டும். மனக்கசப்பு மற்றும் குஷி என்ற இரண்டும் நீண்ட நாள்களுக்கு நிலைத்திருக்காமல் பார்த்துக்கொள்வது மிகமிக அவசியம்.

பணியாளர்கள் மத்தியில் பழகும்போது எப்போதுமே கொஞ்சம் கடுமை காட்டுவதே புரடக்டிவிட்டிக்கு வழிவகை செய்யும் என்பது போன்ற எண்ணமும் தவறான வழிமுறையேயாகும்.

சண்டையை மூட்டிவிடுவது..!

9. பணியாளர் களை ஒருவருக்கு எதிராக ஒருவர் (சதியோடு) நடந்து கொள்ளும் வண்ணம் கையாளுவது எல்லோரையும் சிறப்பாகச் செயல் பட வைக்கும். யாராவது நான் சிறப்பாக எனக்குத் தரப்பட்ட வேலையைச் செய்துவிட்டேன் என்று மார்தட்டிக் கொண் டால், என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள். நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவரை வைத்து இந்த வேலையை என்னால் செய்ய முடியும். ஏனென்றால், நான்தான் இங்கே பாஸ் என்ற தொணியில் பேசுவது போன்ற வையும் தவறான முறையில் பணியாளர்களை நடத்துவதே ஆகும்.

பணியாளர்கள் அனைவருமே மோச மானவர்கள்..!

10. பணியாளர்களுக்கு எப்படியெல்லாம் தகவல் சொல்லக் கூடாது, எதையும் விசாரிக்காமல் அனுமானித்துக் கொண்டு பேசுவது, பிரச்னை என்று ஒன்று வந்தால் யாரைப் பிடித்து சாத்தலாம் என்று அலைவது, பிடிக்காத நபர்களை ஓரக் கண்ணால்கூட பார்க்காமல் ஒதுக்கி வைப்பது, குழப்பம் மற்றும் தெளிவற்ற நிலையை வேண்டுமென்றே உருவாக்கி வைத்து குளிர்காய்வது, எக்காரணம் கொண்டும் நம்மைவிட புத்திசாலியாய் தெரிகின்ற நபரை பணிக்குத் தேர்வு செய்யாமல் தவிர்ப்பது, வேலைக்கு வருபவர்கள் அனைவருமே அடிப்படையில் மோசமானவர்கள் என்ற எண்ணம் கொண்டிருப்பது என விளக்கமாகவும் பல்வேறு நிஜ வாழ்க்கை உதாரணங் களுடன் சொல்கிறது இந்தப் புத்தகம்.

எதிர்மறை விஷயங்களை சரளமான தொனியில் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் தெளிவாக எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகத்தை எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல, அனைவரும் ஒருமுறை படித்து பயன் பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்

பாஸ் எப்படி இருக்க வேண்டும்?

எந்தத் தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், திறமையான நிர்வாகிகள் (பாஸ்கள்) என்று அறியப்பட்டவர்கள் நேர்மை, நடுநிலைமை, மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப மாறிக்கொள்ளும் தன்மை, பொறுப்பேற்றல், பச்சாதாபம் (empathy) போன்ற குணங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பவர்களாகவே இருக்கின்றனர். சொல்லும் விஷயங்களைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்திருப்பது, தனக்குகீழ் பணிபுரிபவர்களைச் சிறப்பாக ஊக்குவிப்பது, அவர்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவது, தன்னுடைய தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிவது, ஒவ்வொரு நாளும் மேலும் நல்லதொரு தலைவனாய் மெருகேறுவதற்கான முயற்சிகளைச் செய்வது போன்றவற்றையும் தலைசிறந்த திறமைகொண்ட நிர்வாகிகள் கொண்டிருக்கின்றனர்.

பிட்ஸ்

தேவை இல்லாத போன்கால்கள் வருவது நம் நாட்டில் 34% குறைந்து உள்ளது. ஏறக்குறைய 14.5 கோடி போன்கால்கள் வந்திருப்பதாக ட்ரூகாலர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.