Published:Updated:

காக்கிகள் வியூகம்: ஆளும் கட்சியில் 'மூம்மூர்த்தி'கள்... எதிர்முகாமில் பெண் அதிகாரிகள் படை!

காக்கிகள்
காக்கிகள்

எதிர்முகாமைப் பொறுத்தவரை தனித்தனி சேனல்கள். ஸ்டாலினுக்கு ஒரு டீம், உதயநிதிக்கு ஒரு டீம், சபரீசனுக்கு ஒரு டீம். 20-20 மேட்ச் போல இவர்களுக்குள் நடக்கும் சேஸிங் காட்சிகள் அனல்பறக்கின்றன

'மூம்மூர்த்தி'கள் ராஜ்ஜியம்... அபார்ட்மென்ட் வியூகம்

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகிலிருக்கிறது அந்த அதிநவீன அபார்ட்மென்ட். உளவு பார்ப்பது தொடங்கி எதிர்முகாமின் ரகசியங்களைக் களவாடுவது வரை அத்தனையும் இங்கிருந்தே சுடச்சுட 'ஆர்டர்' செய்யப்படுகின்றன. முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி ஒருவர், சேலம் வாரிசு, தேர்தல் வியூக ஆலோசகர் ஒருவர் என மூம்மூர்த்திகள் சுற்றிச் சுழன்று, வரும் தேர்தலில் ஆளும் கட்சியைக் கரையேற்றும் வித்தைகளைச் செய்துவருகிறார்கள்.

காக்கிகள் வியூகம்: ஆளும் கட்சியில் 'மூம்மூர்த்தி'கள்... எதிர்முகாமில் பெண் அதிகாரிகள் படை!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், மீடியா பிரமுகர்கள், அதிகாரிகள் என 230 பேரின் அலைபேசிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். அரசியலில் எதிரிகளை ரகசியமாகப் பின்தொடர்வது, பெண் தொடர்புகளை ஆராய்வது, சாதிரீதியான பலத்தை உடைப்பது, ஊழல் விவகாரங்களைத் தோண்டியெடுப்பது போன்ற பணிகளை மற்றொரு டீம் ஒன்று கச்சிதமாகச் செய்துவருகிறது. இன்னொரு பக்கம் கொங்கு அமைச்சருக்காகத் தகவல் திரட்டும் வேலைகளை, பெருநகர காக்கி அதிகாரி ஒருவர் பார்க்கிறார்.

'பென் டிரைவ்'-ல் பயணிக்கும் பெண் அதிகாரிகள் படை!

எதிர்முகாமைப் பொறுத்தவரை தனித்தனி சேனல்கள். ஸ்டாலினுக்கு ஒரு டீம், உதயநிதிக்கு ஒரு டீம், சபரீசனுக்கு ஒரு டீம். 20-20 மேட்ச் போல இவர்களுக்குள் நடக்கும் சேஸிங் காட்சிகள் அனல்பறக்கின்றன. காக்கித் துறையில் மூன்று பெண் உயரதிகாரிகள் இவர்களுக்காக 'ஸ்பை' வேலைகளைப் பார்க்கிறார்கள்.

'பென் டிரைவ்'களில் ரகசியமாகப் பயணிக்கின்றன ஆளும்கட்சியின் ஊழல் கோப்புகள். 'சகோதரர்' ஒருவரிடம் தொடர்பிலிருக்கிறார் மூன்றெழுத்து கேடர் அதிகாரி ஒருவர். 'போதும் போதும்' எனும் அளவுக்கு ஆளும்கட்சியின் ஊழல் தகவல்களைக் கொட்டுகிறார் கோதுமை தேசத்து அதிகாரி ஒருவர். சமீபத்தில் இவர் கசியவிட்ட விவகாரம் ஒன்றுதான், பிரதமர் அலுவலகம் வரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

காக்கிகள் வியூகம்: ஆளும் கட்சியில் 'மூம்மூர்த்தி'கள்... எதிர்முகாமில் பெண் அதிகாரிகள் படை!

- இன்னும் ஏழே மாதங்கள்தான்... தேர்தல் போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம். 2021, மே மாத உச்சிவெயிலுக்கான சூடு இப்போதே ஏறத் தொடங்கிவிட்டது. கட்சிகளெல்லாம் கார்ப்பரேட் அரிதாரம் பூசிக்கொண்டு, அசைன்மென்ட் டிசைன்களை ஆராயத் தொடங்கிவிட்டன. கோட், சூட் அணிந்த வடக்கு 'வாலா'க்கள் சக்கர வியூகங்கள் வகுக்க... முன்னாள், இந்நாள் உளவுத்துறை அதிகாரிகள், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்-கள், சீனியர் பத்திரிகையாளர்கள் எனப் பெரும் குழுவே அவர்கள் பின்னால் அணிவகுக்கிறது.

> மன்னார்குடி டு தென்சென்னை!

> ரஜினிக்கு ராஜசேகர்!

> காக்கிகளின் கண்ணசைவில் கரன்ஸி!

> நிறைவான சம்பளம்... தாராளமாகச் செலவு!

> "பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு!"

> ரெஸ்ட் எடுக்கும் கிங் மேக்கர் அலெக்ஸ்!

- இந்தக் காட்சிகள் அப்படியே ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக... படிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3n5cuWY> போருக்குத் தயாராகும் கட்சிகள்! - வியூகம் வகுக்கும் காக்கிகள் https://bit.ly/3n5cuWY

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு