Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம் சிக்கல்கள்... சரியான தீர்வுகள்..!

வொர்க் ஃப்ரம்
ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
வொர்க் ஃப்ரம் ஹோம்

புதிய உத்திகளைப் பயன்படுத்தினால் வீட்டிலிருந்து பணிபுரியும் காலம் வசந்தகாலமாக மாறும்!

வொர்க் ஃப்ரம் ஹோம் சிக்கல்கள்... சரியான தீர்வுகள்..!

புதிய உத்திகளைப் பயன்படுத்தினால் வீட்டிலிருந்து பணிபுரியும் காலம் வசந்தகாலமாக மாறும்!

Published:Updated:
வொர்க் ஃப்ரம்
ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
வொர்க் ஃப்ரம் ஹோம்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலிலுள்ள சூழலில், நம்மில் பலருக்கும் வீடே அலுவலகமாக மாறியிருக்கிறது.

பலரும் வீட்டிலிருந்தே ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் வேலை செய்துவருகின்றனர். ‘வீட்டிலிருந்தே வேலையா... நல்லாயிருக்கே!’ எனப் பலரும் முதலில் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்வதில் பல சிக்கல்கள். இது குறித்து ‘SCIKEY’ என்ற நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.

வொர்க் ஃப்ரம்
ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘99.8% பணியாளர்களால் வீட்டிலிருந்து அலுவலக வேலையைத் திறம்படச் செய்ய முடியவில்லை; வெறும் 0.2% பணியாளர்கள் மட்டுமே திறம்பட மேற்கொள்கின்றனர். 95% பணியாளர்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளவும், அறியவும் தயக்கம் காட்டுகிறார்கள். 65% பணியாளர்கள் தாங்கள் செய்யும் வேலை பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதில் சிரமப்படுகிறார்கள். 71% பணியாளர்கள் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் கஷ்டப்படுகிறார்கள். 16.97% பணியாளர்கள் சவாலான வேலைகளையும் சாதுர்யமாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 17% பணியாளர்கள் முறையான வழிமுறைகளைச் சொன்னால் மட்டுமே சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள்’’ என்கிறது அந்த ஆய்வு. நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறை சேர்ந்த 10,599 மென்பொறியாளர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கை குறித்து ‘SCIKEY’ நிறுவனத் துணை இயக்குநர் ஸ்ரீராம் விஸ்வநாதன், “பணியாளர்களின் மனநிலை அறிந்து வேலை அளிப்பதே நல்ல பலன்களைத் தரும்” என்கிறார்.

இந்த சர்வே குறித்து முன்னணி ஐ.டி நிறுவனமான ஜோஹோ-வின் (ZOHO) தொழில் நுட்பப் பிரிவின் இயக்குநரான ராஜேந்திரன் தண்டபாணியிடம் பேசினோம். “குழுவாக வேலை செய்யும் அலுவலகச் சூழலிலிருந்து மாறுபட்டு வீட்டிலிருந்து வேலை செய்வது சிக்கலானதுதான். அவர்கள் தனியாக வேலை செய்யும்போதும், மற்றவர்களுடன் எவ்வாறு இணைந்து ஒரு குழுவாகச் செயல்பட்டு வேலை செய்கிறார்கள் என்பது முக்கியம். இருவருக்கு ஒரே நேரத்தில் வேலை அளிக்கப்பட்டால், ஒருவர் முடிக்கும்போதுதான் மற்றொருவர் தொடங்கும் நிலையில் இருக்கக்கூடும். ஆனாலும்கூட கொடுக்கப்பட்ட வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் ஒரு குழுவாக இணைத்து முடித்துத் தர வேண்டும். இதற்கு அனைவரிடமும் சரியான கம்யூனிகேஷன் இருக்க வேண்டியது முக்கியம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘இந்த வேலையை நான் இப்போது தொடங்கி முடிப்பேன். அதற்குள் நீங்கள் இந்த வேலையை முடித்துவைத்தி ருந்தால் சரியாக இருக்கும்’ என்பது போன்ற உரையாடல்கள் நிகழ வேண்டும். வேலைப் பளுவைப் பிரித்துக் கொள்ளுதல், இணைந்து செயலாற்றுதல் போன்றவை மிக அவசியம்.

வொர்க் ஃப்ரம்
ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

சாதாரணமான சூழலில் வீட்டிலிருந்து வேலை செய்வதென்றால், அலுவலக நண்பர்களை வீட்டுக்கு அழைத்துப் பணிபுரியலாம். வாடிக்கையாளருடன் ஒரு காபி ஷாப்பில் கலந்துரையாடலாம். மனதை இதமாக்க, கடற்கரை சென்று வரலாம். ஆனால், தற்போதைய நிலை அப்படியல்ல. எங்கும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்று கூறுவதைவிட ‘கொரோனா அவசரகாலம்’ என்று கூறுவதே சரி. ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில் எல்லோரும் வீட்டுக்குள் சிக்கித் தவிக்கிறோம். பொழுதுபோக்கு குறைந்துள்ளது. தினம் தினம் வரும் நெகட்டிவ் செய்திகளைக் கையாள்வது பெரும்பாடாக உள்ளது.

வொர்க் ஃப்ரம்
ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

இந்த நேரத்தில் நாம் நம்பிக்கையுடன் செயல்படுவதுடன், தொழில் தொடர்பான ஏதாவது ஒரு புதிய திறனை இந்த நேரத்தில் கற்றுக்கொண்டு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். இணையம் மட்டும் இருந்தால் போதும், பணியாளர்கள் வேலை செய்துவிடுவார் கள் என்று நினைக்கக் கூடாது. நிறுவனங்கள் பணியாளர்களின் தேவைகளைப் புரிந்து நடக்க வேண்டும்.

பணி செய்வதற்கான புதிய உத்திகளைப் பயன்படுத்தினால் வீட்டிலிருந்து பணிபுரியும் காலம் வசந்தகாலமாக மாறும்” என்று கூறினார்.

பொதுவாக, வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதற்கான சில டிப்ஸ்கள்...

வொர்க் ஃப்ரம் ஹோம் சிக்கல்கள்... சரியான தீர்வுகள்..!
  • வீட்டு உறுப்பினர்கள் அடிக்கடி தொந்தரவு செய்யாதபடி அலுவலகச் சூழலில் இருப்பது போன்ற ஒரு செட்-அப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

  • டி.வி., குழந்தைகள் விளையாட்டுச் சத்தங்கள் என்று உங்கள் கவனத்தை திசை திருப்ப முடியாத இடமாக உங்கள் வேலை இடம் இருப்பது அவசியம். ஜன்னலுக்கு அருகில் இருக்கை அமைத்துக் கொள்வதன் மூலம் மின்விசிறி, மின் விளக்கின் பயன்பாட்டை முடிந்த வரை குறைக்கலாம்.

  • அலுவலகத்தில் நாம் புத்துணர்வுடன் வேலை செய்ய ஒரு முக்கியக் காரணம் நம் உடை. மிடுக்கான தோற்றம் நமக்கே புத்துணர்வை ஏற்படுத்தும். வீட்டில் வேலை பார்க்கும் போது உடையில் கவனம் தேவை. அலுவலகத்துக்குச் செல்லும் அளவுக்கு ஆடை அணிய வேண்டும் என்பதில்லை என்றாலும், சற்று புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் உடை அணிவது அவசியம்.

  • சமூக வலைதளங் களில் ஒவ்வொரு முறையும் நோட்டிஃபிகேஷன்ஸ் வரும்போது அதை நாம் பார்ப்பது வழக்கம். அப்போது வேலையில் கவனம் சிதறும். வேலைக்கு நடுவே அவ்வப்போது குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு, தண்ணீர், காபி குடித்து புத்துணர்ச்சி பெறலாம்.

  • தினமும் காலையில் சிறிது நேரம் உடற்பயிற்சி,யோகா, தியானம் செய்வது அவசியம். இவற்றைப் பயிற்றுவிப்பதற்காகவே இருக்கும் இலவசச் செயலிகளைப் பயன்படுத்திப் பயன் பெறலாம். இவை நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.

  • குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வேலை என்று பட்டியலிட்டுச் செயல்பட்டால் சிறப்பாகச் செயல்படலாம். தினமும் ஒரே நேரத்தில் வேலையை மேற்கொண்டால், உடல் இயக்கமும் ஒத்துழைக்கும். இடையில் ஓய்வு அவசியம். குறிப்பாக, கண்களுக்கு ஓய்வு மிக மிக முக்கியம். கண்களை அவ்வப்போது பணியிலிருந்து திருப்பி, வேறொன்றில் சில விநாடிகள் பதியவிடலாம். கழுத்து, கை கால்களை 10 - 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஆட்டி, இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம்.

  • தற்போது பலரு டனான கலந்துரை யாடல்கள் எளிதாக நடக்கச் செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு கலந்துரையாடல் நடக்கும்போது, நீங்களும் உங்கள் கருத்தைப் பகிர்வதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.

இந்தக் காலகட்டத்தில் உங்கள் அலுவலக வேலை தொடர்பாக ஏதாவது திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இணையவழியில் கற்கப் பல பயிற்சிகள் இருக்கின்றன.

இவை அனைத்தையும்விட முக்கியம், உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு, மனதை நேர்மறை எண்ணங்களால் நிறைத்து வைத்திருப்பதுதான். இதன் மூலம் உங்கள் வேலைத்திறன் பல மடங்கு உயரும்.