Published:Updated:

How to: ஆன்லைனில் வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி? | How to apply Income Certificate online?

Representational Image ( Photo: Pixabay )

இப்போது வருமானச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எவ்வாறு வருமானச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பெறுவது என்று பார்ப்போம்.

How to: ஆன்லைனில் வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி? | How to apply Income Certificate online?

இப்போது வருமானச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எவ்வாறு வருமானச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பெறுவது என்று பார்ப்போம்.

Published:Updated:
Representational Image ( Photo: Pixabay )

பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, போட்டித் தேர்வு விண்ணப்பங்களுக்கு, பணியில் இருப்போருக்கு, அரசுத் திட்டத்தின் பயனர்களுக்கு எனப் பல தளங்களிலும் கோரப்படும் முக்கியமான ஆவணம், வருமானச் சான்றிதழ் (Income Certificate). இப்போது இதைப் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எவ்வாறு வருமானச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பெறுவது என்று பார்ப்போம்.

* தேவை: பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சுயவிவரப் படிவம் (Self declaration form) மற்றும் இவற்றின் சாஃப்ட் காபிகள்.

* கணினியில் TNeGA போர்ட்டலுக்குச் செல்லவும். அதில் Citizen Login/பயனாளர் உள்நுழைவு என்பதை க்ளிக் செய்யவும்.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

* உள்நுழைந்ததும் Login செய்யச் சொல்லிக் கேட்கும். புதிய பயனர் என்றால் New user என்பதை க்ளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களையும், User name மற்றும் Password ஆகியவற்றையும் உள்ளீடு செய்து பதிவு செய்துகொள்ளவும். அதன் பின் Login பகுதிக்கு வந்து, உருவாக்கிய User name, Password ஆகியவற்றையோ, உங்கள் மொபைல் எண்ணையோ கொடுத்து Login செய்து கொள்ளவும்.

* உங்களுக்கான dashboard ஒன்று திறக்கப்படும். இதில் பல தேர்வுகள் இருக்கும். அதில் முதலில் Department என்ற பகுதி இருக்கும். Revenue Department-ஐ தேர்வுசெய்து கொள்ளவும்.

* உள்ளே சென்ற பின், வருமானம் தொடர்பான பல சான்றிதழ்களில் உங்களுக்குத் தேவையானது எது என்று கேட்கப்படும். இதில் நீங்கள் 'REV-103 வருமானச் சான்றிதழ்' என்பதை க்ளிக் செய்யவும்.

* க்ளிக் செய்த பின், என்ன மாதிரியான ஆவணங்கள் வேண்டும் என்ற விவரங்கள் காண்பிக்கப்படும். அதனை நன்றாகப் படித்த பின் Proceed என்பதை Ok செய்யவும். பின் உங்கள் CAN (The Common Account Number) நம்பரை Register செய்யச் சொல்லிக் கேட்கும். இந்த இடத்தில் உங்களுடைய CAN நம்பர் தெரிந்தால் Register செய்யவும். இல்லையெனில், அதன் கீழே உங்களுடைய ஆதார் குறித்த விவரங்கள் கேட்கப்படும். அதனை உள்ளீடு செய்து Search என்பதை க்ளிக் செய்தால் உங்கள் CAN நம்பர் உங்களுக்குக் கிடைத்துவிடும். அதனை க்ளிக் செய்து கீழே, உங்கள் ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்யவும். உங்கள் எண்ணிற்கு ஒரு OTP வரும். அதனை உள்ளீடு செய்து, Proceed என்ற தேர்வை க்ளிக் செய்தால் உங்களுடைய வருமானச் சான்றிதழைப் பெற அப்ளை செய்யத் தயாராகிவிட்டீர்கள்.

* பின்னர், CAN Register செய்திருப்பதால், உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் தானாக நிரப்பப்பட்டுவிடும். தொடர்ந்து உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களின் விவரங்கள் கேட்கப்படும், அதனை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளீடு செய்ய வேண்டும். பணி குறித்த தகவல்களையும் நிரப்ப வேண்டும். ஒருவேளை நீங்கள் மாணவராக இருந்தால், மாணவர் என்பதைக் குறிப்பிடவும். குடும்ப உறுப்பினர்களின் உறவு, வயது போன்ற விவரங்களை எல்லாம் நிரப்பிய பின் கீழே உள்ள Other என்ற தேர்வுக்குச் சென்று, பணியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமான (ஆண்டு வருமானத்தை அல்ல) விவரங்களை ஒவ்வொருவருக்காக உள்ளீடு செய்ய வேண்டும். .

* இப்போது Submit கொடுக்கவும். அதன் பின், கோரப்படும் ஒவ்வோர் டாக்குமென்ட்டையும் அடுத்தடுத்து Upload செய்யவும் (கணினியில் அப்லோடு செய்யத் தேவையான அளவில் தயாராக வைத்துக்கொள்ளவும்). அனைத்தையும் பதிவேற்றம் செய்த பின், அதே பக்கத்தில் இருக்கும் self declaration form-ஐ download செய்து, பிரின்ட் எடுத்து, உங்களுடைய கையொப்பம் இட்டு, மறுபடி ஸ்கேன் செய்து Upload செய்யவும். அல்லது, download செய்து கணினியில் இருக்கும் self declaration form-ஐ Adobe Reader பயன்படுத்தி கணினிலேயே கையொப்பம் இட்டு Upload செய்யவும்.

* அனைத்தையும் Upload செய்த பின், Make payment என்பதை க்ளிக் செய்து உள்ளே சென்றால் Terms and Conditions என்ற தேர்வை க்ளிக் செய்த பின் Make Payment கொடுத்து, உங்களுக்கு எந்த முறையில் பணம் செலுத்த முடியுமோ அதை க்ளிக் செய்து ரூபாய் 60 செலுத்தவும்.

பின் உங்களுக்கு ஒரு Acknowledgement slip கொடுக்கப்படும். அதில் உள்ள எண்ணைக்கொண்டு, 10 நாள்களுக்குப் பின் சான்றிதழை நீங்களே டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ஒருவேளை இந்த செயல்முறை சிரமமாக இருந்தால், அருகில் உள்ள இ-சேவை மையத்திற்குச் சென்று, உங்களுடைய ஆவணங்களைக் கொடுத்து, 60 ரூபாய் செலுத்தினால், அவர்கள் உங்களுடைய வருமானச் சான்றிதழுக்கு அப்ளை செய்துவிட்டு, அதற்கான Acknowledgement slip-ஐ உங்களிடம் கொடுப்பார்கள். அதனைக் கொண்டு உங்களுடைய சான்றிதழின் ஸ்டேட்டஸை (status) செக் செய்துகொள்ளலாம். 10 நாள்களுக்குப் பின் இந்த ஸ்லிப்பை அந்த மையத்திற்குக் கொண்டு சென்று உங்கள் வருமானச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.''