எந்தக் கடனாக இருந்தாலும் சரியான முறையில், சரியான தேவைக்காக வாங்காவிட்டால், சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். கடந்த ஐந்து வருடங்களாக நம்மில் பலர் குறுகியகாலக் கடன்களான தனிநபர் கடன், கிரெடிட் கார்டு ஆகியவற்றை வாங்கிப் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது.

இந்த விஷயத்தில் அவர்கள் தங்களை அறியாமலேயே மிகப்பெரிய தவறு ஒன்றைச் செய்கிறார்கள். குறுகியகாலக் கடன்களை வாங்கி, அதன் மூலம் நீண்டகாலச் சொத்துகளான மனைகள் மற்றும் வீடுகளை வாங்குகிறார்கள். ஏதாவது திடீர் மருத்துவச் செலவு அல்லது வேலையிலிருந்து திடீரென நீக்கப்படுவது போன்ற பாதிப்பு ஏற்பட்டால், அவர்களால் இந்தத் தனிநபர் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களைச் செலுத்த முடியாமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அவர்கள் தேவையில்லாத நிதிச் சிக்கலில் சிக்கிக்கொள்ளவும் நேரிடும். இந்தச் சிக்கலில் பலரும் சிக்கிக்கொள்ள காரணம் என்ன?

தனிநபர் கடன்

பொதுவாக, தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு தொகை ஆகியவை குறுகியகாலத்தில் திரும்பச் செலுத்த வேண்டிய கடன்கள். அதாவது, அதிகபட்சம் 3 - 5 ஆண்டுகளுக்குள் இந்தக் கடன்களைச் செலுத்தி முடித்துவிட வேண்டும். தனிநபர் கடனுக்கான வட்டி சுமார் 12 சதவிகிதத்தில் தொடங்கி 22% வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், கிரெடிட் கார்டை எடுத்துக் கொண்டால், அதற்கான ஆண்டு வட்டி 30% - 42% வரைக்கும் இருக்கும். அசலையும் வட்டியையும் உரிய தேதியில் செலுத்தத் தவறினால் அபராதத் தொகை அதிகமாகும்.

சலுகை நிறைந்த வீட்டுக் கடன்

அதே நேரத்தில், மனைக் கடன் வாங்கினால் அதை ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை செலுத்த முடியும். சில வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் மனைக் கடனை 15 வருடங்கள் வரை திரும்பச் செலுத்த அனுமதிக்கின்றன. வீட்டுக் கடனை வாங்குபவருக்கு இளம் வயது எனில், அதிகபட்சம் 30 ஆண்டுகள்கூட திரும்பச் செலுத்த வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் சலுகையளிக்கின்றன. அதே நேரத்தில், இந்தக் கடனுக்கான வட்டியும் மிகக் குறைவு. தற்போதைய நிலையில், மனைக் கடனுக்கான வட்டி சுமார் 8.5 - 9 சதவிகிதமாக இருக்கிறது.

மேலும், வீட்டுக் கடன் வாங்கும்போது, திரும்பச் செலுத்தும் வட்டி (ரூ.2 லட்சம்), அசல் (ரூ.1.5 லட்சம்) ஆகியவற்றில் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.3.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை பெற முடியும். வீட்டுக் கடன் வாங்குவதில் இவ்வளவு வசதிகள், சலுகைகள், லாபமிருந்தும் பலர் இதைத் தவிர்த்துவிட்டு தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வீடு வாங்கிவிட்டு அவதிப்படுவதையும், அதிகமாக வட்டி செலுத்துவதையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

கெளரவம் பார்க்கலாமா?

என்னைப் பார்க்க வரும் பெரும்பாலான புதிய முதலீட்டாளர்கள் ஒரு லட்ச ரூபாய் மாதம் சம்பளம் வாங்கினால், அதில் 70,000 ரூபாய்க்கு மேல் தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டுக்குச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடன்களை அவர்கள் வாங்கியதற்கு முக்கியமான காரணம், வீட்டு மனை அல்லது வீடு / அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்காகத்தான்.

அண்மையில் என்னை பார்க்க இளம் வயது அண்ணன், தங்கை வந்திருந்தார்கள். இருவரும் வேலை பார்க்கிறார்கள்; நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். “குறைந்த வட்டியில் (8.5 - 9 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டியில்) 20-30 ஆண்டுகள் செலுத்தும்விதமாக வருமான வரிச் சலுகையுடன் வீட்டுக் கடன் கிடைக்கும்போது, நீங்கள் ஏன் 15% வட்டியில் பர்சனல் லோன், 40% வட்டியில் கிரெடிட் கார்டில் பணமெடுத்து வீடு வாங்கினீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டேன்.

“நம்ம சொத்துப் பத்திரம் எதுக்கு பேங்க்ல இருக்கணும்... அது நம்மகிட்டதானே இருக்கணும்... நம்ம சென்டிமென்ட், கெளரவம் என்ன ஆகுறது... கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாங்கினா அதுக்கு அடமானம் எதுவும் கொடுக்கவேண்டியதில்லை. சுலபமா வேற கிடைச்சிடுது. வீட்டுக் கடன் வாங்க நிறைய அலையணும், நேரம் ஒதுக்கணும். அதனாலதான் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மூலமா வீடு வாங்கினோம்” என்றார்கள்.

அண்ணன், தங்கை இருவரும் சென்டிமென்ட், கெளரவம் பார்த்தார்களே தவிர, தனிநபர், கிரெட் கார்டுகளிலுள்ள சிக்கல்களை கவனிக்கவில்லை. இப்போது பொருளாதார மந்தநிலையால் அண்ணனுக்கு வேலை போய்விட்டது. தங்கைக்குச் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு தவணைகளைச் செலுத்த முடியாத சூழ்நிலை. இதுவே, வீட்டுக் கடன் மூலம் அந்த வீட்டை நீண்டகாலத்துக்கு வாங்கியிருந்தால், கடனுக்கான மாதத் தவணை குறைவாக இருந்திருக்கும். கடனைத் திரும்பக் செலுத்துவதில் அதிக சிக்கல் ஏற்பட்டிருக்காது.

அதிக தொகைகொண்ட வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவது ஒருவருக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அதற்குக் குறைவான வட்டியுடன் நீண்டகாலத் தவணை மற்றும் வருமான வரிச் சலுகைகளை அளித்திருக்கிறார்கள். இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

டவுன் பேமென்ட்

இன்னும் சிலர் ‘டவுன் பேமென்ட்’ என்கிற முன்பணம் சுமார் 15% - 20% தொகையை ஏற்பாடு செய்யாமல், வீட்டுக் கடன் வாங்கத் தயாராகிவிடுகிறார்கள். உதாரணமாக, சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்க வேண்டும் என்றால், அதில் 20% அதாவது, ரூ.10 லட்சத்தை வீடு வாங்குபவர் கையிலிருந்து போட வேண்டும். அந்தப் பணத்தை தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு அல்லது நகை அடமானம் வைப்பதன் மூலம் பெற்று, வீடு வாங்கிவிடுகிறார்கள். இப்படிச் செய்தால் அவர்கள் வீட்டுக் கடன் தவணை மற்றும் முன்பணத்துக்காக வாங்கிய கடன் ஆகியவற்றையும் சேர்த்து பல கடன்களைச் செலுத்த வேண்டி வரும். இதனால் அவர்கள் செலுத்தும் மாதத் தவணை மிக அதிகமாக இருக்கும்.

பொருளாதார மந்தநிலை போன்ற சூழ்நிலையால் சம்பள அதிகரிப்பு விகிதம் குறைவு அல்லது அல்லது சம்பள உயர்வு இல்லாத நிலை அல்லது வேலை இழப்பு போன்றவை ஏற்படும்போது, அதிக தொகை மாதத் தவணையாக இருந்தால் குடும்பத்தினர் அனைவரின் நிம்மதியும் பறிபோய்விடும். எப்போது கடன் வாங்கினாலும், அது எந்தக் கடனாக இருந்தாலும் நாம் செலுத்தும் கடனுக்கான மாதத் தவணை, மொத்தச் சம்பளத்தில் பாதிக்குமேல் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

வருமானத்தில் பாதி மட்டுமே கடன்

கடன் மாதத் தவணை என்பது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மற்றும் வேறு ஏதாவது கடன் இருந்தால், இவை அனைத்தும் சேர்ந்தது. உதாரணமாக, ஒருவர் மாதம் ரூபாய் ஒரு லட்சம் சம்பாதிக்கிறார்; பி.எஃப்., இன்ஷூரன்ஸ் பிரீமியம், தொழில் வரி, வருமான வரி போன்றவை செலுத்தியது போக மாதம் ரூ.70,000 வீட்டுக்கு எடுத்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் அதிகபட்சம் 35,000 ரூபாய்தான் அனைத்துக் கடன்களுக்கான மாத மொத்தத் தவணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவசரச் செலவுகள், மருத்துவச் செலவுகள் அல்லது திடீர் பணத் தேவை ஏற்பட்டால் சமாளிக்க முடியும்.

கடனுக்கு முன் காப்பீடு

பொதுவாக நம்மில் பலர் முதலீடு மற்றும் காப்பீட்டுக்கு முக்கியத்துவம் தராமல், சுலபமாகக் கிடைக்கிறது என்பதற்காக எடுத்தவுடனேயே கடன் வாங்கச் சென்றுவிடுகிறார்கள். அதுவும் எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறான கடன்களை வாங்கிவிடுகிறார்கள்.

கடன் வாங்குவதற்கு முன்னதாக, சம்பாதிக்கும் நபருக்குக் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் மற்றும் மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி, அவசரகால நிதி ஆகியவற்றை ஏற்படுத்திவிட்டுத்தான் எந்தக் கடனையும் வாங்க வேண்டும்.,

மேலும், புதிதாகக் கடன் வாங்கும்போது ஆயுள் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்வது மிக அவசியம். அப்போதுதான் கடன் வாங்கியவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில், குடும்பத்தினர் சிக்கலில்லாமல் கடனை அடைக்க முடியும்; அவர்களின் எதிர்காலமும் அதிக சிக்கலில்லாமல் செல்லும்.

முதல் வீடு இருக்கும்போதே இரண்டாவது வீடு

மேலும், பலர் ஏற்கெனவே சொந்த வீட்டில் குடியிருந்துகொண்டு, முதலீட்டு நோக்கிலோ மற்றும் வரி சேமிப்பதற்காகவோ இரண்டாவது / மூன்றாவது வீட்டைக் கடனில் வாங்கிவிடுகிறார்கள். காரணம், `அந்த வீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைச் சம்பாதித்துத் தரும்’ என அவர்கள் நம்புவதுதான்.

வீட்டுக் கடன் வாங்குவதில் இவ்வளவு வசதிகள், சலுகைகள், லாபமிருந்தும் பலர் இதைத் தவிர்த்துவிட்டு தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வீடு வாங்கிவிட்டு அவதிப்படுவதையும், அதிகமாக வட்டி செலுத்துவதையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில், இந்த எண்ணம் மிகவும் தவறானது. காரணம், இந்திய அளவில் மற்றும் தமிழக அளவில் ரியல் எஸ்டேட் பல்வேறு சிக்கல்கள் மற்றும் மந்தநிலையைச் சந்தித்துவருகிறது. `இன்றைக்கு ரூ.30 லட்ச ரூபாய்க்கு வாங்கும் வீட்டை, இன்னும் 10 ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபாய்க்கு விற்க வாய்ப்பு வரும்’ என்ற எண்ணத்தில் கடன் வாங்குபவர்கள் தயவுசெய்து ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது நல்லது.

கடந்த காலங்களில் வேண்டுமானாலும் அப்படி நடந்திருக்கலாம். இனிவரும் காலத்தில் ரியல் எஸ்டேட் மூலம் அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஓய்வுக்காலத்துக்கு...

இன்னும் சிலர் தங்களின் ஓய்வுக்காலத்துக்குப் பிறகும் அவர்களின் பென்ஷன் பணத்திலிருந்தோ, முதலீடு மூலம் கிடைக்கும் பணத்திலிருந்தோ வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ செலுத்தும் விதமாக கடன் வாங்கிவிடுகிறார்கள். இது மிக மிகத் தவறு.

`ஓய்வுக்குப் பிறகு செலவு குறைந்துவிடும்’ என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி நடப்பதில்லை. சில செலவுகள் குறைந்தால், சில செலவுகள் அதிகரித்துவிடும்.

உதாரணமாக, அலுவலகம் செல்லும் போக்குவரத்துச் செலவு குறைந்தால், ஓய்வுக்காலத்தில் சுற்றுலா செல்லும் செலவு, பிள்ளைகளின் வீடுகளுக்குச் செல்லும் செலவு அதிகரித்துவிடும். மிக முக்கியமாக, மருத்துவச் செலவுகள் மிக அதிகமாக உயர்ந்துவிடும். இந்த நிலையிலும் வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகை இருந்தால், அதைக் கஷ்டப்பட்டுத்தான் செலுத்த வேண்டியிருக்கும்.

வேலையில் இருக்கும்போதே...

வீட்டுக் கடனை வேலை பார்க்கும்போதே செலுத்தி முடித்துவிடுவது மிக நல்லது. நம்மில் பலர் சொத்து சேர்ப்பதிலும், கௌரவமாக வாழ்வதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். ஆனால், கடனில்லா வாழ்வு மற்றும் தன் தேவைக்கு மற்றவரைச் சார்ந்திருக்காத நிதிச் சுதந்திரம் ஆகியவற்றில் அக்கறை காட்டுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

எந்தக் கடன் வாங்கினாலும் அது நமக்கும் நம் குடும்பத்துக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்க வேண்டும்; எந்த வகையிலும் கவலை தரக்கூடியதாக இருக்கக் கூடாது. கடனில்லா வாழ்க்கை அல்லது அளவான கடன் நிம்மதியைத் தரும்.

அடுத்தமுறை நீங்கள் கடன் வாங்கும்போது இந்த விஷயங்களையெல்லாம் நிச்சயம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்!

வீடு வாங்க தனிநபர் கடன் ஏன் வாங்கக் கூடாது?

ஒருவர் தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரூ.10 லட்சத்தில் வீடு ஒன்று வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்குச் சரியான வட்டி ஆண்டுக்கு 20% என வைத்துக்கொள்வோம். அந்த வகையில் கடனை மூன்று ஆண்டுக்குள் திரும்பச் செலுத்த வேண்டுமென்றால், மாதத் தவணை 37,165 ரூபாயாக இருக்கும். கடன் சீக்கிரம் முடிந்துவிடும். என்றாலும், இந்த அளவுக்கு அதிகமான தொகையை மாதந்தோறும் தொடர்ந்து செலுத்துவது பலருக்கும் சிரமமாகத்தான் இருக்கும்.

மேலும், திரும்பச் செலுத்தும் கடனுக்கு வரிச் சலுகை இல்லை. அதேநேரத்தில், ரூ.10 லட்சம் கடனை வீட்டுக் கடன் மூலம் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். கடனுக்கான வட்டி 9.5% ஆகவும், 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாகவும் இருந்தால் மாதத் தவணை 9,320 ரூபாயாக இருக்கும். இந்தத் தொகையைச் செலுத்துவது மிக எளிதாக இருக்கும்; திரும்பச் செலுத்தும் வட்டி மற்றும் அசலுக்கு வரிச் சலுகை இருக்கிறது என்பது முக்கியமான விஷயம்!

கடன்... கவனி... வாங்கு!

1)  தேவைக்காகக் கடன் வாங்குங்கள். கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்காதீர்கள்.

2)  வாடகை மூலமான வருமானம், வீட்டின் விலையோடு ஒப்பீடும்போது வெறும் 2-3 சதவிகிதம்தான். எனவே, வீடு (கடனில்) வாங்கி, வாடகைக்கு விட்டுச் சம்பாதிப்பது லாபகரமானதாக இருக்காது.

3) கடன் வாங்குவதற்கு முன்னர் அவசரகால நிதியாக 3-6 மாத சம்பளத் தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

4. குறுகியகாலக் கடன் வாங்கி, நீண்டகாலச் சொத்துகளை (மனை, வீடு) வாங்காதீர்கள்.

5. அந்தந்தத் தேவைக்கு அதற்கென இருக்கும் கடனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக காரை, கார் கடன் வாங்கி வாங்குங்கள். இதற்கான வட்டி விகிதம் சுமார் 9.5 சதவிகிதம்தான் இருக்கும். இதற்கு பதில், தனிநபர் கடன் வாங்கி கார் வாங்கினால் 18-22% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்!