Published:Updated:

டேபிள் மேனர்ஸ்

டேபிள் மேனர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டேபிள் மேனர்ஸ்

#HowToBehave

டேபிள் மேனர்ஸ்

#HowToBehave

Published:Updated:
டேபிள் மேனர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
டேபிள் மேனர்ஸ்

1

“சாப்பிடும்போது மடில டவல் போட்டுக்கணும்னு வீட்ல சொல்லித் தரலயா?”, `சிந்தாம சாப்பிடச் சொல்லித் தந்திருக்காங்க” - ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியின் அண்ணி கதா பாத்திரம் சாப்பாட்டு மேஜையில் ஜெனிலியாவிடம் கேட்பதும், அதற்கு அவர் பதிலளிக்கும் இந்தக் காட்சி யும் நினைவிருக்கிறதா?

அனைவர் மத்தியிலும் ஒருவரை மட்டம் தட்டுவதற் காகக் கேட்கப்பட்ட கேள்வி என்ற கோணத்தில் மட்டும் இதைக் கடந்துவிட முடியாது. உணவை எப்படிப் பார்த்துப் பார்த்துத் தயாரிக்கிறோமோ, ருசித்து ருசித்துச் சாப்பிடுகிறோமோ அதே முக்கியத்துவத்தை மேஜை நாகரிகத்துக்கும் கொடுக்க வேண்டும்.

சாப்பாட்டு மேஜையை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும், பரிமாறுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், அமர்ந்து சாப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், பரிமாறுவது எப்படி, சாப்பிடுவது எப்படி எனப் பல விஷயங்கள் அடங்கியதைத்தான் ‘டேபிள் மேனர்ஸ்’ (Table manners) என்று அழைக்கின்றனர். ‘டேபிள் மேனர்ஸ்’ பற்றிய முக்கிய விஷயங்களை இந்த இதழில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறோம். தகவல் அளித்தவர் செஃப் மைக்கேல் ஜாக்சன்.ஏ.

டேபிள் மேனர்ஸ்

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிடுவது ‘ரெஃப்ரி’ இல்லாத மேட்ச் போலத்தான் என்பதால் சுதந்திரமாகச் சாப்பிடலாம். ஆனால், வீட்டில் விருந்தினர் கள் வருகையின்போது, வீட்டில் கெட் டுகெதர், பார்ட்டியின்போது, ஹோட்ட லுக்குச் சென்று சாப்பிடும்போது சில விஷயங்களை, பரிமாறுபவர், சாப்பிடுபவர்கள் கடைப் பிடிக்க வேண்டும். குழந்தை களுக்கும் சிறு வயதிலேயே டேபிள் மேனர்ஸ் பற்றி சொல்லிக் கொடுப்பது அவர் கள் வளரும்போது சமூகத்தில் ஏற்புடைய நடத்தையைக் கொடுக்கும் என்கின்றன சில ஆய்வுகள்.

பரிமாறும்போதும் டேபிள் மேனர்ஸ் இல்லாவிட்டால் சுகாதாரம் கேள்விக்குறி யாகும். இது உடல்நலக் கேட்டுக்கு வழிவகுக்கும். சாப்பிடும்போது நாம் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கா விட்டால் எதிரில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் அசௌ கர்யமாக உணர்வார்கள். இது நம் மீதான நன்மதிப்பைக் கெடுக்கும் விஷயமாக அமைந்து விடலாம்.

2

டிபன் பாக்ஸ் உணவோ, அசௌகர்யமான இடத்தில் உட்கார்ந்து அவசர அவசரமாகச் சாப்பிடுவதோ நிறைவைக் கொடுக்காது. சாப்பாட்டு மேஜையில் வசதியாக உட்கார்ந்து சாப்பிடுவது பெரிய விருந்தையே சாப்பிட்டது போன்ற நிறைவையளிக்கும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாப்பாட்டு மேஜையில் இந்த விஷயங்கள் எல்லாம் நிச்சயம் இருக்க வேண்டும்.

அனைத்துக்கும் முதலாக சாப்பிடும் மேஜை சுத்தமாக இருப்பது அவசியம். சுத்தமான, ஓட்டைகள், கிழிசல் இல்லாத மேஜை விரிப்பு விரிக்கப்பட வேண்டும். உட்காரும் நபருக்கு வலது பக்கம் ஸ்பூன், இடது பக்கம் ஃபோர்க் இடம்பெற வேண்டும். கூடுதலாக ஒரு ஸ்பூன் வைக்கலாம். அதை சர்வீஸ் ஸ்பூன் என்பார்கள்.

தண்ணீர் டம்ளரோ, பாட்டிலோ அதை வலதுபுறத்தில் வைக்க வேண்டும். உப்பு, பெப்பர், ஊறுகாய், சாஸ், மயோனைஸ் போன்றவற்றை மேஜையில் வைத்திருக்க வேண்டும். விருந்தினர் கேட்ட பிறகு விழுந்தடித்து கிச்சனுக்குப் போய்க் கொண்டு வரக்கூடாது.

டேபிள் மேனர்ஸ்

மேஜையில் சாப்பிடும்போது பயன் படுத்தும் சிறிய துண்டு போன்ற டேபிள் நாப்கின் வைக்கலாம்.

மிகவும் வயதானவர்களும் குழந்தைகளும் சிந்தாமல் உண்ண வேண்டும் என்பதால் அவர்களின் கழுத்துப் பகுதியில் ஏப்ரன் போல செருகிக் கொள்வார்கள். பிறர் மடியில் போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.

சாப்பாட்டுக்குத் தேவை யான கரண்டி, தட்டு, கத்தி என அனைத்தையும் விருந்து நடக்கும் பகுதியிலேயே வைத்திருக்க வேண்டும். சரியான எண்ணிக்கைக்கு அதிகமாக ஒன்றிரண்டு அதிகமாகவே இவற்றை யெல்லாம் வைத்திருப்பது நல்லது. அடிக்கடி கிச்சனுக்கு ஓடி ஓடிப் போகக்கூடாது.

ஓடி ஓடிப் போய் வியர்த்து விறுவிறுத்து நின்று பரிமாறு வது சாப்பிடுபவர்களின் ஆர்வத்தைக் குறைப்பதோடு அசௌகர்யத்தையும் ஏற்படுத்தும்.

3

மணமாகவும் ருசியாகவும் சமைத்து விட்டு அதைப் பரிமாறும்போது சொதப்பிவிட்டால் உணவு மட்டுமல்ல; அந்த நிகழ்ச்சியே ருசிக்காமல் போய்விடும். பரிமாறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே...

உணவைப் பரிமாறும்போது முகத்தை உம்மென்று வைத்துக்கொள்ளாமல், சிரித்த முகத்துடனும் இயல்பாகவும் பரிமாறுவது முக்கியம். இதுதான் உணவு விருந்தோம்பலுக் கான கோல்டன் ரூல்.

பெண்கள் மேஜையில் அமர வரும்போது நாற்காலியை உட்காருவதற்கு வசதியாக பின்னால் இழுத்துக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கென்றால் அவர்களுக்குத் தகுந்த உயர நாற்காலியைப் போட வேண்டும். பரிமாறும்போது முதலில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்குப் பரிமாறிவிட்டு கடைசியாக ஆண்களுக்குப் பரிமாற வேண்டும்.

டேபிள் மேனர்ஸ்

ஒருவரின் தட்டில் உணவை வைப்பதற்கு முன்னர் அதன் பெயரைக் கூற வேண்டும். உதாரணத்துக்கு நீங்கள் சிக்கன் பிரியாணி பரிமாறுகிறீர்கள் என்றால் அதைக் கூறிவிட்டு தான் தட்டில் வைக்க வேண்டும். அந்த உணவு பிடிக்காதவர்கள் அதை வேண்டாம் என்று கூறி, உணவு வீணாகாமல் தடுப்பதற்கும் இது உதவும்.

முதலில் சூப் வகைகள், அடுத்ததாக பக்கோடா, சிக்கன் 65 போன்ற ஸ்டார்ட்டர் வகைகள் பரிமாற வேண்டும். அடுத்ததாக மெயின் கோர்ஸ் உணவுகளைப் பரிமாறவும். இறுதியில் கை கழுவிய பிறகு, டெசர்ட் வகைகளைப் பரிமாற வேண்டும். சமைத்த அனைத்து உணவுகளையும் மொத்தமாக சாப்பாட்டு மேஜையில் குவித்து வைக்கக் கூடாது. மேஜைக்கு அருகில் வேறு இடத்தில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துப் பரிமாற வேண்டும்.

ஒவ்வோர் உணவாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரிமாறும்போது பசி தூண்டப்படும். பசியெடுத்துச் சாப்பிடும்போது சுமாரான உணவும் அமிர்தம்போல் தோன்றும். அதிக வெரைட்டி சாப்பிட்டது போலவும், கூடுதல் அக்கறையுடன் உணவு பரிமாறப்பட்ட திருப்தியும் ஏற்படும்.

எக்ஸ்ட்ரா டிப்: மெயின் கோர்ஸ் பரிமாறுவதற்கு முன்பு கறிவேப்பிலை, எலும்பு, முள் போன்ற வேஸ்ட் வைப்பதற்கு சிறிய தட்டு (சைட் பிளேட்) வைப்பது விருந்தினர் களைக் கூடுதலாக இம்ப்ரெஸ் செய்யுமாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism