என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

தங்கமே உன்னைத்தான்... #HowToBuy

தங்கமே உன்னைத்தான்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கமே உன்னைத்தான்

- ராஜலட்சுமி

மாதாந்தர நகைச்சீட்டு போட்டு, வருடம் தவறாமல் நகை வாங்குவோருக்கும் சரி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு எப்போதாவது நகைகள் வாங்குவோருக்கும் சரி... சில கேள்விகள் எப்போதும் இருக்கும். சரியான விலைக்குத்தான் வாங்குகிறோமா, வாங்கும் தங்கத்தின் தரம் சரியாக இருக்குமா, தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்வது... இப்படி தங்கம் தொடர்பான பல சந்தேகங் களுக்கான பதில்களை இந்த இதழில் ஆங்காங்கே தெளிவுபடுத்தியிருக்கிறார் நகை விற்பனையாளர் கீதா சுப்ரமணியம்.

கீதா சுப்ரமணியம்
கீதா சுப்ரமணியம்

செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்க முடியாதா?

எந்த நகை வாங்கினாலும் சேதாரம் என்ற பெயரில் ஒரு தொகையைச் சேர்க் கிறார்கள் என்பது மக்களின் குற்றச்சாட்டு. பொற்கொல்லர்கள் தங்கக் கட்டியை உருக்கி, தகடாக்கி கம்பியாக நீட்டி, பிறகு தேவைப்படும் வடிவத்துக்குக் கொண்டு வந்து, ஊதி, பற்றவைத்து இத்தனை வேலைகளுக்குப் பிறகே, ஒரு நகைக்கு இறுதி வடிவம் கொடுக்கிறார்கள்.

தங்கமே உன்னைத்தான்... #HowToBuy

தங்கத்தை தகடாக்கும்போதே குறைந்தபட்ச சேதாரம் ஒன்று தவிர்க்க முடியாதது. அது தகடாக்கும் மெஷினில் தானே இருக்கும், எடுத்துவிடலாமே என்று சிலர் கேட்கலாம். உண்மைதான்... ஆனால், அதை ஓரளவுக்கு எடுக்கலாம். பிறகு அது கண்காணாத துகளாக மாறிவிடும். விற்பனையாளர்கள் தங்கத்தை ஓரிடத்தி லிருந்து வாங்கி, அதைப் பொற்கொல்லரிடம் கொடுத்து அவருக்கான கூலியும் சேதாரமும் கொடுத்து நகையாகச் செய்து வாங்குவார்கள். அந்த நகைகளை விற்கும்போது அவர்கள் குறைந்தபட்ச தொகையை சேதாரமாக வைப்பதைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை அப்படி விற்பனை செய்கிறார்கள் என்றால், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். அந்த நகையை நன்கு பரிசோதித்து தரத்தை உறுதிப்படுத்தாமல் வாங்கவே கூடாது.

தயாரிப்பு குறைபாடுகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

ங்க நகைகள் தயாரிக்கும்போது மேனுவலாக சில தவறுகள் நடப்பது இயல்புதான். பெரும்பாலும் இந்தக் குறை களைக் கவனித்து, சரிசெய்த பிறகுதான் விற்பனைக்கு அனுப்புவார்கள். அதையும் மீறி சில நேரம் குறைகளுடனேயே விற்பனைக்கு வருவதுண்டு. அதையும் நகை வாங்கும்போது கவனித்து தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்துக்கு தாலிச் சரடோ, சங்கிலியோ வாங்கும்போது முதலில் அது உறுதியாகத் தான் இருக்கும். நாள்பட நாள்படத்தான் தளரும். அப்படியன்றி அந்தச் சங்கிலியில் ஓரிடத்தில் மட்டும் கெட்டியாகவும் மற்ற இடங்கள் தளர்வாகவும் இருந்தால் அதில் குறைபாடு இருக்கலாம். அந்த இடம் சுலபமாக அறுந்துபோக வாய்ப்புண்டு.

தங்கமே உன்னைத்தான்... #HowToBuy

சில நகைகளை மீண்டும் பற்றவைத்து சரிசெய்ய முடியும். சிலதை அப்படிச் செய்ய முடியாது. அதை மாற்றிவிட்டு வேறு வாங்க வேண்டியிருக்கும்.

காதணிகளில் திருகு டைட்டாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அது சுலபமாக உள்ளே போய் விட்டு வரும்படி இருந்தால் கவனம் தேவை.

நெக்லஸ் வாங்கும்போது சில இடங்களில் சலங்கைகள் தொங்கும். சில இடங்களில் விடுபட்டுப் போயிருக்கும். பார்ப்பதற்கும் நன்றாக இருக் காது. வளையம் இருந்தால் சலங்கையைக் கோத்து விடலாம். வளையமே இல்லா விட்டால் பிரச்னை.

இப்படி நீங்கள் வாங்கும் எந்த நகைக்கும் கொக்கி, வளையம், திருகு என எல்லாவற்றையும் சரி பார்த்து வாங்குவது விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்குமான தேவையற்ற மனஸ்தாபத்தையும் தவிர்க்கும்.

தரக்குறைவான தங்கமா?

ங்க நகைகள் தயாரிக்கப்பட்டு வரும் போது நடக்கும் சில சின்னச் சின்ன கவனக்குறைவான விஷயங்கள் வாடிக்கை யாளரின் நம்பிக்கையையே தகர்ப்பதுண்டு.

உதாரணத்துக்கு புது நகைகளை குட்டிக்குட்டி `அயர்ன் பால்ஸ்' (Iron Balls) கொண்டு பாலிஷ் செய்வார்கள். அப்படிச் செய்யும்போது அந்த நகையில் இடைவெளி இருக்கும் இடங்களில் அந்த அயர்ன் பால்ஸ் போய் செட் ஆகிவிடக்கூடும். அது தெரியாமல் வாங்கிய அந்த நகையை வாடிக்கையாளர் எதேச்சையாக எங்கேயோ தரம் பரிசோதிக்க நேர்கிறது என வைத்துக்கொள்வோம்.

தங்கமே உன்னைத்தான்... #HowToBuy

இரும்பு பால்ஸ் செட் ஆன இடமெல்லாம் 22 காரட் என காட்டாது. உண்மையில் அந்த நகை ஹால்மார்க் தேர்வான, 22 காரட் நகையாகத்தான் இருக்கும். ஆனால், தரமற்ற நகையைத் தலையில் கட்டிவிட்டதாக வாடிக்கையாளர் புலம்பு வார். அவர்கள் நினைக்கிற மாதிரி அது தரக்குறைவான தங்கமாகவே இருக்காது. குறிப்பிட்ட சில ஊர்களில் இருந்து தயாராகி வரும் நகைகளில்தான் பெரும் பாலும் இந்தப் பிரச்னை இருக்கும்.

99 சதவிகிதம் இது கவனக் குறைவால் ஏற்படுவதுதான். மற்றபடி வாடிக்கையாளரை ஏமாற்றும் தந்திரமெல்லாம் இல்லை. அடுத்தமுறை நகை வாங்கும்போது இந்தச் சந்தேகத்தைக் கேட்டு, `அயர்ன் பால்ஸ்' ஏதும் இருக் கின்றனவா என சரிபார்த்து வாங்குங்கள்.

ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தில் என்ன ஸ்பெஷல்?

ஹால்மார்க்கிங் என்பது தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தரச்சான்றிதழ் திட்டம், ஆபரணத் தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத் தன்மையை அளவிடுவதற்கான, அதிகாரபூர்வமான முத்திரைதான் ஹால்மார்க்.

தங்கமே உன்னைத்தான்... #HowToBuy

இந்தியாவில் பல இடங்களில் ஹால்மார்க்கிங் மையங்கள் நிறுவப்பட்டு, தங்க நகைகள் 22 காரட்டில் இருக்கின்றனவா என சோதித்து முத்திரை போடப்பட்டுக் கொடுக்கப்படுகின்றன.இன்றைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 40 சதவிகித நகை விற்பனையாளர்கள் மட்டுமே ஹால் மார்க்கிங் லைசென்ஸ் பெற்றிருக்கிறார்கள்.மற்ற அனைவரும் வரும் ஜூன் மாத இறுதிக்குள் ஹால் மார்க்கிங் லைசென்ஸை பெற வேண்டும் என இந்திய அரசு கெடு விதித்திருக்கிறது.

தங்கமே உன்னைத்தான்... #HowToBuy

ஏற்கெனவே ஹால்மார்க் லைசென்ஸ் பெற்ற விற்பனையாளர்கள், அந்த நெறிமுறைகளின்படி சட்டத்திட்டங்களுக்குட்பட்டுதான் நகைகளை விற்பனை செய்கிறார்களா என்பதையும் அரசு தரப்பிலிருந்து அடிக்கடி கண்காணிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று சாம்பிள் எடுத்து அதில் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கிறார்கள்.

தங்கமே உன்னைத்தான்... #HowToBuy

நகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை...

நகை வாங்கக் கிளம்பும்போதே என்ன நகை வாங்கப் போகிறோம் என்ற முடிவுடன்தான் போவீர்கள். என்ன வாங்குவது என முடிவெடுத்த நீங்கள், அது குறுகிய கால பயன்பாட்டுக்கா, நீண்டகால பயன்பாட்டுக்கா என்று யோசித்திருக்க மாட்டீர்கள். தோடு, மூக்குத்தி போன்றவற்றை ரெகுலராகப் பயன்படுத்துவதால் அவை சீக்கிரம் தேய்மானம் ஆகும். நெக்லஸ், ஆரம் போன்ற எடை அதிகமான நகைகளே பெரும்பாலும் நீண்டகால பயன்பாட்டுக்கு வாங்கப்படும். தினசரி உபயோகத் துக்காக வாங்கும்போது பிடித்த டிசைனில் நீடித்து உழைக்கக்கூடியவையாக வாங்கி விடலாம். நீண்டகால பயன்பாட்டுக்கு வாங்கும்போது அந்த டிசைன் பல காலத்துக்கு மாறாமலிருக்குமா என்று பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் அடிக்கடி அதை மாற்றத் தேவையிருக்காது. எப்படியிருந்தாலும் பணத்தைத் திரும்பப் பெற முடிகிற பொருளாகத் தங்கம் இருப்பதால் அநாவசிய வேஸ்ட்டேஜ் அதில் இருக்க வேண்டாம்.

குறுகிய காலத்துக்கு வாங்கும் நகைகளேகூட வாங்கிய பிறகு சிலருக்கு டிசைன் பிடிக்காமல் மறுபடி மாற்ற நினைப்பார்கள். எனவே, அந்த நகையை அணியப்போகிறவரை வைத்துக்கொண்டே நகையைத் தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. அந்த நகை அணிய வசதியாக இருக்கிறதா, முகத்துக்குப் பொருத்த மாக இருக்கிறதா, வேறு குறைகள் இருக்கின்றனவா என்றெல்லாம் பார்த்து வாங்க வேண்டும்.

நீண்டகால பயன்பாட்டுக்கான நகைகளை வாங்கும்போது, டிசைனை மட்டும் பார்க்காமல், பின்னாளில் உடைந்தாலோ, அறுந்தாலோ மறுபடி ரிப்பேர் செய்துவிட முடியுமா என்பதை யும் பார்த்து வாங்க வேண்டும்.

இந்தியாவில் சில இடங்களில் தயாராகும் நகைகளை ரிப்பேர் செய்யவே முடியாது. கைவேலைப்பாடுகளுடன் வரும் சில நகைகளை ரிப்பேர் செய்தால் புதிது போல மாற்றி விடலாம். இந்த டெக்னிக் தெரிந்து வாங்குவது புத்திசாலித்தனமான ஷாப்பிங்காக இருக்கும்.