Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோமில் குழந்தைகளை பிஸியாக வைத்துக்கொள்வது எப்படி? #HowToHandleChildren

குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை

குழந்தைகள் சில நேரங்களில் தான் அதிகம் தொந்தரவு செய்வார்கள். பசி, தூக்கம், சலிப்பு (Boring), சுகவீனம் என அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும்.

வொர்க் ஃப்ரம் ஹோமில் பெற்றோர் வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஓரளவு வளர்ந்த குழந்தைகள் ஆன்லைன் கிளாஸ், கேட்ஜெட்ஸ், விளையாட்டு எனத் தங்களுக்கான உலகத்தை உருவாக்கிக்கொள்வார்கள். ஆனால் சின்ன குழந்தை களுக்கு பெற்றோரின் கண்காணிப்பும் அரவணைப்பும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

வொர்க் ஃப்ரம் ஹோமில் குழந்தைகளை பிஸியாக வைத்துக்கொள்வது எப்படி?
#HowToHandleChildren

பெருந்தொற்றுக் காலம் என்பதால் வீட்டு உதவிக்கு ஆட்கள் வைப்பது, டே ஸ்கூல் போன்ற வாய்ப்புகளும் இல்லை. பெற்றோர் அலுவலக வேலைகளில் ஈடுபடும் போது குழந்தைகள் தொந்தரவு செய்வதால் அவர்களின் வேலையும் தடைப்படுகிறது, குழந்தையும் அசௌகர்ய மாக உணர்கிறது.

பெற்றோரைத் தொந்தரவு செய்யாமல் குழந்தை களை பிஸியாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்? இந்த இதழில் ஆங்காங்கே அதற்கான வழிகாட்டுதல் களை வழங்குகிறார் பேரன்டிங் ஆலோசகர் ஆனந்தி ரகுபதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வொர்க் ஃப்ரம் ஹோமில் குழந்தைகளை பிஸியாக வைத்துக்கொள்வது எப்படி?
#HowToHandleChildren

காரணத்தைக் கண்டறியுங்கள்!

குழந்தைகள் சில நேரங்களில் தான் அதிகம் தொந்தரவு செய்வார்கள். பசி, தூக்கம், சலிப்பு (Boring), சுகவீனம் என அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். அந்தக் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்து விட்டாலே குழந்தைகள் தங்கள் உலகுக்குள் புகுந்து கொள் வார்கள். நான்கு வயதுக் குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பிலேயே இருந்து விளையாடுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அலுவலக வேலையைத் தொடங்குவதற்கு முன்பாகவே குழந்தைக்கான சாப்பாடு, ஸ்நாக்ஸ், விளையாட்டுப் பொருள்கள், தூக்கம் என எல்லாவற்றையும் திட்டமிட்டுத் தயார் செய்துவிட வேண்டும். மனைவிக்கு அன்றைக்கு முக்கியமான மீட்டிங் அல்லது வேலைகள் இருந்தால், கணவர் சற்று முன்னரே எழுந்து தன் னுடைய வேலைகளை முடித்து விட்டு குழந்தையைப் பார்த்துக் கொள்ளலாம். இதுபோன்று சின்ன சின்ன அட்ஜஸ்ட் மென்ட்டுகளை செய்துகொண் டால் குழந்தைக்கு நாள் முழுவதும் பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வொர்க் ஃப்ரம் ஹோமில் குழந்தைகளை பிஸியாக வைத்துக்கொள்வது எப்படி?
#HowToHandleChildren

இயற்கையோடு விளையாடு!

அப்பா, அம்மா இருவருக்கும் ஒரே நேரத்தில் வேலை இருக்கும்போது பெற்றோரின் பார்வையில்படும்படி குழந்தைகளை விளையாட வைக்கலாம். குழந்தைகளிடமிருந்து பிரிக்கவே முடியாத ஒன்று இயற்கை. மண்ணில் விளையாடும் குழந்தையையோ தண்ணீரில் விளையாடும் குழந்தையையோ அவ்வளவு எளிதில் பிரித்துக் கூட்டிவர முடியாது. பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுக் குள்ளேயே இருக்கும்போது இப்படி விளையாட வாய்ப்பு குறைவு.

சிறு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விளையாடக் கொடுங்கள். அடுத்த நாள் ஒரு டம்ளர், ஸ்பூன் கொடுங்கள், அடுத்த நாள் ஒரு டப் தண்ணீரில் புதினா இலைகள், அடுத்த நாள் ரோஜா இதழ்களைத் தூவி விடுங்கள். அதே டம்ளர் அதே தண்ணீர் என ஒரே விஷயத்தைக் கொடுத்தால் குழந்தைகள் சலிப்படைந்து விடுவார்கள்.

குழந்தைகள் எப்போதுமே புதுமை விரும்பிகள். குழந்தை களை ஒரே அறையில் அடைத்து வைத்து, வாங்கி வைத்த அதே பொம்மைகளை விளையாடக் கொடுத்தால் எளிதில் சலிப் படைந்துவிடுவார்கள். ஒரே விஷயத்தையேகூட சிறிய மாற்றத் துடன் கொடுக்கும்போது யாரையும் தொந்தரவு செய்யாமல் அவர்கள் போக்கில் சந்தோஷமாக விளையாடுவார்கள்.

குழந்தைப் பிறந்து எட்டு மாதங்களிலேயே கணிதம், அறி வியல் தொடர்பான விஷயங்கள் அவர்களின் மூளையில் வளர்ச்சி யடையத் தொடங்கிவிடும்.

குழந்தைகள் தண்ணீரில் விளையாடும்போது ஒரு டம்ளரிலிருந்து இன்னொரு டம்ளருக்கு தண்ணீரை எடுத்து ஊற்றும்போது அறிவியல் தெரிந்துகொள்கிறார்கள். கை விரல்களைப் பார்த்துக் கொண்டே படுத்திருக்கும் குழந்தை கணிதத்தைப் படிக்க ஆரம்பிக்கிறது.

சந்தோஷமான குழந்தைகள் புதிது புதிதாக எதையாவது முயன்றுகொண்டே இருப் பார்கள். பிஸியான குழந்தைகள் யாரையும் தொந்தரவும் செய்ய மாட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோமில் குழந்தைகளை பிஸியாக வைத்துக்கொள்வது எப்படி?
#HowToHandleChildren

கிச்சனில் கிடைக்கும் பொம்மைகள்!

குழந்தைகளுடன் விளையாடவும் அவர் களைச் சமாளிக்கவும் போதுமான ஆற்றலும் கிரியேட்டிவிட்டியும் இல்லை என்பதுதான் இன்றைய பெற்றோரின் பெரிய சவால். குழந்தைகளின் ரத்தம் மிகவும் சுத்தமாகவும் அடர்த்தி குறைவாகவும் இருக்கும். இளரத்தம் அவர்களை மிக வேகமாக இயக்கும். அதனால் குழந்தைக்கு இணையாக பெற்றோரால் ஓடவும் அவர்கள் வேகத்துக்கு சிந்திக்கவும் முடியாது. எனவே குழந்தைகளின் வயதுக்கேற்ப அவர்களுக்கான விளையாட்டை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு வயதிலும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு விஷயம் பிடிக்கும். உதாரணமாக, 8-10 மாதக் குழந்தைகள் எதையாவது திறந்து மூடிக்கொண்டே இருப்பார்கள். ஒன்றரை வயதுக் குழந்தைகளுக்கு எதையாவது எதற்குள்ளாவது போட்டுப் போட்டு வெளியே எடுத்துப் பார்ப்பது பிடிக்கும்.

குழந்தைகளின் வயதுக்கேற்ற விளையாட்டுப் பொருள்கள் அனைத்தும் உங்கள் வீட்டு கிச்சனிலேயே கிடைக்கும். இரண்டு டிபன் பாக்ஸ் மூடியைக் கழற்றி அவர்களிடம் கொடுத்து விட்டால், அவற்றை திறந்து திறந்து மூடி விளையாடுவார்கள்.

அடுத்த நாள் இட்லி பாத்திரத் துக்குள் நான்கு ஸ்பூன்களை போட்டுக் கொடுக்கலாம். பெரிய பாத்திரம் - சிறிய பாத்திரம், பெரிய டம்ளர் - சின்ன டம்ளர் என காம்பினேஷன் மாற்றிக் கொடுக்கலாம். இரண்டு சிறிய டம்ளரை எடுத்து ஒன்றில் கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல், இன்னொன்றில் பாசிப்பயறு சுண்டல் என வெவ்வேறு நிற தானியங்களைப் போட்டுக் கொடுக்கலாம்.

சற்று பெரிய குழந்தைகள் என்றால் ஒருநாள் பட்டாணித் தோலை உரித்துத்தரச் சொல்ல லாம். மற்றொரு நாள் காய்கறி களைப் பிரித்து தனித்தனி கூடையில் போடச் சொல்லலாம். அரிசியில் கிராம்பைக் கலந்து அதைப் பிரித்துத் தரச் சொல்ல லாம். மணிக்கணக்காக உட் கார்ந்து சின்சியராக அந்த வேலையைப் பார்ப்பார்கள்.

பெரும்பொருள் செலவழித்து விளையாட்டுச் சாமான்களை வாங்கிக் கொடுப்பதைவிட உங்கள் வீட்டு கிச்சனை குழந்தை களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

வொர்க் ஃப்ரம் ஹோமில் குழந்தைகளை பிஸியாக வைத்துக்கொள்வது எப்படி?
#HowToHandleChildren

அழுக்கே அழகு!

குழந்தைகளிடம் அதிக ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உருவாக்குவது Pretend Play. அதாவது கற்பனையாக ஒரு சூழலை உருவாக்கி அதில் குழந்தைகளை ஈடுபடுத்துவது. உதாரண மாக கேரட் கூடையை எடுத்து, ‘பெருசா இருக்குறது அப்பா - அம்மா கேரட், சின்னது அக்கா - அண்ணா கேரட், ரொம்ப சின்னதா இருக்குறது பேபி கேரட். அன்னிக்கு பேபி கேரட் என்ன சொல்லுச்சு தெரியுமா... அம்மா, அம்மா இன்னிக்கு நான்தான் சமைக்கப் போறேன்னு’ - இதுபோன்ற ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்துவிட்டால் மிகவும் ஈடுபாட்டோடு விளையாடுவார்கள்.

‘நீ தான் டாக்டர், பார்பி தான் பேஷன்ட். பார்பிக்கு உடம்பு சரியில்ல. ஊசி போட்டு விடு பார்ப்போம் அல்லது நாம சாப்பிடப் போறோம். உன்னோட நாய், கரடி, யானை யெல்லாம் கூட்டிட்டு வந்து சாப்பிட வை’ என அந்த விளையாட்டைப் பெற்றோர் ஆரம் பித்துவிட்டால் போதும். குழந் தைகள் கற்பனைத் திறனால் அடுத்தடுத்து புதிய உலகை உருவாக்கி விளையாடத் தொடங்கிவிடுவார்கள். இது குழந்தைகளின் கற்பனைத் திறனையும் கிரியேட்டி விட்டியையும் மேம்படுத்தும்.

குழந்தைகளுக்கு வர்ணம் தீட்டுவதற்கு கடைகளில் விற்கப்படும் பெயின்ட், கிரேயான்ஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதற்கு பதில் தண்ணீரில் சிறிது மஞ்சள்தூள் தூவிக் கொடுப்பது, புதினா சட்னி, தக்காளிச்சாறு, ஸ்ட்ரா பெர்ரி கூழ் போன்றவற்றைத் தயிரில் கலந்துகொடுப்பது என உட்கொள்ளக்கூடிய வர்ணங் களைக் கொடுக்கலாம். இதைக் குழந்தைகள் சாப்பிட்டாலும் பிரச்னை இல்லை. வழக்கமான பெயின்ட்டைவிட வித்தியாச மாகவும் உணர்வார்கள்.

தனியாக விளையாடும் குழந்தைகள் அதிகம் தங்களை அழுக்காக்கிக் கொள்வார்கள். அதைப் பெரும்பாலும் பெற்றோர் விரும்புவதில்லை.

குழந்தைகள் எவ்வளவு அழுக்காகிறார்களோ மூளையில் அவ்வளவு கனெக்‌ஷன் உருவாகிறது என்று அர்த்தம். குழந்தைகளை அழுக்காக அனுமதியுங்கள்!

வொர்க் ஃப்ரம் ஹோமில் குழந்தைகளை பிஸியாக வைத்துக்கொள்வது எப்படி?
#HowToHandleChildren

கேட்ஜெட்ஸ், பகல் தூக்கம் அவசியமா?!

ஆன்லைன் கிளாஸ், ஆன்லைன் மீட்டிங் என்ற நியூ நார்மலுக்குள் நுழைந்துவிட்ட நிலையில், `ஜீரோ ஸ்கிரீன் டைம்’ என்ற ஒன்றை இனி யோசிக்கவே முடியாது. குழந்தை உங்களிடம் வந்து யானைக் கூட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டால், யூடியூப் வீடியோக்களைத்தான் காட்ட முடியும். எழுத்துகள், வர்ணங்கள், வடிவங்கள் என குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் அதிலிருந்து கற்றுக்கொடுக்க முடியும்.

குழந்தைகள் கேட்ஜெட் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், எதைப் பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர் தீர்மானிக்க வேண்டும். பெற்றோர் அதிக பிஸியாக இருக்கும்போது ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலையில் தலா அரை மணி நேரம் பயனுள்ள விஷயங்களைப் பார்க்க அனுமதிக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக நேரம் திரையைப் பார்த்தால் அவர் களின் பேச்சுத்திறனில் பிரச்னை வரக்கூடும்.

அதனால் குழந்தைகள் ஒரே இடத்தில் இருந்து, அமைதியாக கேட்ஜெட்டைப் பார்த்து முடித்த பிறகு, அந்த நேரத்தையும் சேர்த்து அவர்களைப் பேச வேக்க வேண்டும், ஓடியாடி விளையாட வைக்க வேண்டும். கண்களுக்குத் தேவையான ஊட்டமான உணவு களையும் கொடுத்து ஈடுசெய்து விட வேண்டும்.

குழந்தைகள் தொந்தரவு செய்கிறார்கள் என்பதால் பகலில் சில மணி நேரம் அவர்களைத் தூங்க வைத்துவிடுகிறார்கள். அத னால் இரவு அதிக நேரம் விழித் திருப்பதால் அவர்களின் உயிரி யல் கடிகாரம் மாறிவிடுகிறது.

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் பகலில் ஒரு மணி நேரம் தூங்க வைக்க லாம். மாலை 4 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் தூங்க வைக்கக் கூடாது. இரவு 8 மணிக்கு சாப்பாடு கொடுத்து, 9 மணிக்குத் தூங்க வைத்துவிட வேண்டும். நான்கு முதல் எட்டு வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு இரவு 10 மணி நேரத் தூக்கம் அவசியம்.