Published:Updated:

கடன் வாங்க கைகொடுக்கும் கிரெடிட் ஸ்கோர்! - தக்கவைக்கும் வழிமுறைகள்!

கிரெடிட் ஸ்கோர்
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருந்தால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்!

கடன் வாங்க கைகொடுக்கும் கிரெடிட் ஸ்கோர்! - தக்கவைக்கும் வழிமுறைகள்!

கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருந்தால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்!

Published:Updated:
கிரெடிட் ஸ்கோர்
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் ஸ்கோர்
நம்முடைய கிரெடிட் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து அக்கறைப்பட வேண்டிய காலம் இது. காரணம், கோவிட்-19 நம் வருமானத்தைக் கணிசமாகக் குறைத்திருப்பதுடன், நமது கிரெடிட் ஸ்கோரையும் வெகுவாகக் குறைத்துவிட்டது. அது என்ன கிரெடிட் ஸ்கோர்... இது குறையாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் யாரென்று சொல்லும் கிரெடிட் ஸ்கோர்

கடன் கேட்பவர், அவர் கேட்கும் தொகையைப் பெறத் தகுதியானவர்தானா, கடனை வட்டியுடன் சரியான காலத்தில் திருப்பித் தரும் பழக்கம் உள்ளவரா என்பதையெல்லாம் துல்லியமாகச் சொல்வதுதான் கிரெடிட் ஸ்கோர். 2007-தான் இந்த கிரெடிட் ஸ்கோர் என்ற கருத்தாக்கத்தை (concept) டிரான்ஸ் யூனியன் சிபில், எக்ஸ்பீரியன் போன்ற கிரெடிட் பீரோக்கள் அறிமுகம் செய்தன. ஒருவருக்கு கடன் தருவதற்குமுன் அவருடைய கிரெடிட் ரிப்போர்ட்டும் கிரெடிட் ஸ்கோரும் கட்டாயம் பார்க்கப்படும். ஆகவே கடன் தரும் வங்கிகளுக்கும் கிரெடிட் கார்டு கம்பெனிகளுக்கும், பிற கடன் நிறுவனங்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

கடன் வாங்க கைகொடுக்கும் கிரெடிட் ஸ்கோர்! - தக்கவைக்கும் வழிமுறைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடன் விஷயத்தில் நீங்கள் எப்படி..?

பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவரது கடன் வரலாற்றைப் பொறுத்து, 300 முதல் 900 வரையிலான புள்ளிகளாக இருக்கும். 300 முதல் 550 வரையிலான புள்ளிகள், கடன் கேட்பவர் தரத்தை ‘சுமார்’ என்றும், 550 முதல் 700 வரையிலான புள்ளிகள் ‘நன்று’ என்றும், 700 முதல் 900 வரையிலான புள்ளிகள் ‘மிக நன்று’ என்றும் அறிவிக்கின்றன.

இப்போதெல்லாம் வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள் தரக்கூடிய கடன் தொகை, வட்டி விகிதம் எல்லாம் ஒருவரின் கிரெடிட் ஸ்கோரைச் சார்ந்தே அமைகின்றன. உதாரணமாக, எல்.ஐ.சி ஹவுஸிங் நிறுவனம் 800 புள்ளிகளுக்கு அதிகமாக கிரெடிட் ஸ்கோர் இருப்போருக்கு கடன் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கிரெடிட் ஸ்கோர் நல்ல விதத்தில் இருப்பது அவசியம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளதால், வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிக் கட்டும் ஒழுக்கம் அதிகரித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும் வழிகள்

1. கடனை சரியாகத் திருப்பிக் கட்டும் ஒழுக்கம் நமக்கு இருப்பது தெரிந்தால் கிரெடிட் பீரோக்கள் நம் ஸ்கோரை அதிகரிக்கும். இதை நிரூபிப்பதற்கு ஒரே வழி, கடன் இ.எம்.ஐ-களையும் கிரெடிட் கார்டு பில்லையும் சரியான நேரத்தில் முழுவதுமாகக் கட்டுவதே. இதற்கு சில அலர்ட்டுகளை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் ஆட்டோ டெபிட் முறையைக் கையாளலாம்.

கிரெடிட் ஸ்கோர்
கிரெடிட் ஸ்கோர்

2. கடன் பெறும்போதே கடன் கட்டும் காலத்தை நீட்டித்து கடன் பெற்றால், கட்ட வேண்டிய இ.எம்.ஐ தொகை குறையும்; எளிதில் அவற்றைக் கட்டி, ஸ்கோரைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

3. நமது கிரெடிட் கார்டு லிமிட்டில் 30 சத விகிதத்துக்கு அதிகமாக நாம் செலவழித்தால் நம்மிடம் சரியான அளவு பணவரவு இல்லை என்று கிரெடிட் பீரோக்கள் முடிவு செய்து ஸ்கோரைக் குறைக்கும். அதைத் தவிர்க்க நம் கிரெடிட் கார்டில் லிமிட்டை அதிகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளைப் பயன்படுத்தலாம். கூடியவரை பழைய கிரெடிட் கார்டுகளை மாற்றாமல் வைத்துக்கொள்வது ஒரு நீண்ட கடன் வரலாற்றைத் தெளிவாகக் காட்ட உதவும்.

4. குறுகியகாலத்தில் பல கடன்களுக்கு அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும். கடன் நிறுவனங்கள் நம் கிரெடிட் ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டை ஆய்வு செய்யும் ஒவ்வொரு முறையும் நம் கிரெடிட் ஸ்கோர் குறையும். நாம் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய விரும்பினால், நம்பகம் வாய்ந்த சில வலைதளங்களை நாடுவது நல்லது.

கிரெடிட் ஸ்கோரை உயர்த்த குறுக்குவழிகளை நம்புவதைவிட, கடனை சரியாகத் திரும்பக் கட்டினாலே கிரெடிட் ஸ்கோர் தானாக உயரும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. கிரெடிட் ரிப்போர்ட்டை வருடத்துக்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். ஒரு சில தவறுகள் ஏற்படுவது சகஜம். இவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் நம் ஸ்கோர் பாதுகாக்கப்படும். உதாரணமாக, லாக்டெளனில் ஆறு மாத காலம் கடன் சலுகை கால தயவால் கடன் கட்டாதவர் பலர். இதற்கான பதிவை வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள் சரியான முறையில் செய்திரா விட்டால், நம் கிரெடிட் ஸ்கோர் நிச்சயம் பாதிக்கப்படும். இதுபோன்ற சமயங்களில் நாம் கடன் பெற்ற வங்கி, நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அவர்களின் தவற்றைச் சுட்டிக்காட்டி, கிரெடிட் ரிப்போர்ட்டை சரிசெய்யலாம்.

கிரெடிட் ஸ்கோர்
கிரெடிட் ஸ்கோர்

6. கடன் வாங்கும் பழக்கமே இல்லாதிருப்பதும் ஸ்கோரைக் குறைக்கும். குறுகியகாலக் கடன்கள், நீண்டகாலக் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் போன்ற பலதரப்பட்ட கடன்கள் வாங்குவதும், அவற்றை முறையாகத் திருப்பிச் செலுத்துவதும் ஸ்கோரை அதிகரிக்கும்.

7. ஜாயின்ட் அக்கவுன்ட் ஹோல்டராகவோ, கடனுக்கு ஜாமீன்தாரராகவோ கையொப்ப மிட்டிருப்பவர்கள் அடிக்கடி ஸ்கோரை சரிபார்ப்பது நன்று. கடன் பெற்றவர்கள் ஒழுங்காகத் திருப்பிக் கட்டவில்லையெனில் ஜாயின்ட் அக்கவுன்ட் ஹோல்டருக்கும் ஜாமீன்தாரருக்கும்கூட கிரெடிட் ஸ்கோர் பாதிப்படையும்.

கிரெடிட் ஸ்கோரை குறுகியகாலத்தில் அதிகப்படுத்தி, கடன் பெறுவதைத் துரிதப்படுத்த உதவுவதாகச் சில கிரெடிட் ரிப்பேர் கம்பெனிகள் விளம்பரம் செய்கின்றன. இது மாதிரியான குறுக்குவழிகளை நம்புவதை விட, கடனைச் சரியாகத் திரும்பக் கட்டினாலே கிரெடிட் ஸ்கோர் தானாக உயரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism