என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

செம ஈஸி... செம டேஸ்ட்டி - மயோனைஸ் - #HowToMake

மயோனைஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மயோனைஸ்

#Utility

ராஜலட்சுமி

மயோனைஸ்

பொதுவாக மயோனைஸ், முட்டையின் மஞ்சள் கருவில் செய்யப்படுகிறது. அத்துடன் உப்பு, வினிகர், மிளகுத்தூள், சாலட் ஆயில் சேர்த்துச் செய்வார்கள். இதற்குப் பதிலாக ஃப்ரெஷ் க்ரீமில் செய்யலாம். முட்டையைத் தவிர்க்க நினைப்பவர்கள் 100 சதவிகிதம் சைவமாக இதைச் செய்ய முடியும்.

குறிப்பிட்ட அளவு மயோனைஸ் தயாரிக்க, ஆறு முட்டைகளின் மஞ்சள் கரு தேவை என்று வைத்துக் கொள்வோம். இங்கே, ஆறு முட்டைகளின் மஞ்சள் கருவுக்குப் பதிலாக, கால் கிலோ ஃப்ரெஷ் க்ரீமுடன் (கடைகளில் கிடைக்கும்), ஃப்ரிட்ஜில் குளிர வைத்த ஒரு கப் பாலையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.

செம ஈஸி... செம டேஸ்ட்டி - மயோனைஸ் - #HowToMake

பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கடுகுப்பொடி - 2 டீஸ்பூன், வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன், சாலட் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன் ஆகிய வற்றைத் தயாராக வைத்துக் கொள்ளவும்.

பால், க்ரீம் கலவையில் உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துக் கலக்கவும். லேசாக விப்பிங் பிளேடில் சுற்றலாம் அல்லது ஹேண்டு பீட்டரால் அடிக்கலாம். ரொம்பவும் அடித்தால் கலவை திரிந்து விடும். கடுகுப்பொடி, வினிகர், சாலட் ஆயில் என ஒவ்வொன்றாகச் சேர்த்து, மிக மிக மென்மையாக அடித்து எடுத்தால் வெஜி டேரியன் மயோனைஸ் ரெடி.

சாண்ட்விச், பிரெஞ்சு ஃப்ரைஸ் என எல்லா வற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.