Published:Updated:

செலவில்லாத மார்க்கெட்டிங் டிப்ஸ்! #HowToPromoteYourBusiness

செலவில்லாத மார்க்கெட்டிங் 
டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
செலவில்லாத மார்க்கெட்டிங் டிப்ஸ்

- ராஜலட்சுமி

செலவில்லாத மார்க்கெட்டிங் டிப்ஸ்! #HowToPromoteYourBusiness

- ராஜலட்சுமி

Published:Updated:
செலவில்லாத மார்க்கெட்டிங் 
டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
செலவில்லாத மார்க்கெட்டிங் டிப்ஸ்

கொரோனாவின் தாக்கத்தால் உலகம் முழுக்கவே பொருளாதாரநிலை சரிந்து, மக்களின் வாழ்க்கை நிச்சயமற்றுப் போயிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்தென்ன ஆகுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களுக்கு. எல்லோருக்கும் வாழ்வாதாரத்துக்கு ஏதோ ஒரு வழி தேவை. புதிதாக ஏதோ ஒன்றை முயல நினைக்கிறவர்களுக்கு அதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வழி தெரிவதில்லை. செய்கிற விஷயத்தை செலவில்லாமல் விளம்பரப்படுத்தவும் வணிகப்படுத்தவும் வாய்ப்புகள் தெரியாதவர்களுக்கு இந்த இதழில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உதவும்.

நீங்கள் ஏற்கெனவே ஒரு தொழில்முனைவோராக இருக்கலாம். வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் பிசினஸ் முயற்சியிலும் ஈடுபடுபவராக இருக்கலாம். யாராக இருந்தாலும் செய்கிற வேலையில் வெற்றி காண, புதிய யோசனைகளை எந்தத் தயக்கமுமில்லாமல் தெரிந்துகொள்ளத் தயாரா என்பதுதான் முக்கியம். ஆல் தி பெஸ்ட்...

vikatan
vikatan

பிராண்டை பிரபலப்படுத்துங்கள்

உங்களுடைய பிராண்டு எப்போதும் அடுத்தவர் பார்வையில் வலம்வந்து கொண்டே இருக்க வேண்டும். அது எந்த அளவுக்கு மற்றவர்களின் கண்களில் தென்படு கிறதோ அந்த அளவுக்கு அவர்களது நினைவில் நிற்கும். அதுக்கெல்லாம் லட்சக்கணக்குல செலவாகுமே... எங்கே போவது என பயப் படாதீர்கள்.

செலவே இல்லாமல், உங்களது கற்பனையைத் தாண்டி, விற்பனையைப் பல மடங்கு அதிகரிக்க வைக்க முடியும். உதாரணத்துக்கு உங்களிடமிருந்து வெளியே விற்பனைக்குச் செல்லும் எந்தப் பொருளிலும், உங்கள் வணிக முத்திரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அது அந்தப் பொருளை பேக் செய்கிற கவரில் தொடங்கி. அட்டைப்பெட்டி, பை... இப்படி எது வானாலும், அதில் உங்களது வணிக முத்திரை உள்ளதா எனப் பாருங்கள்.

வெற்றிபெற்ற பிரபல பிராண்டுகள் இந்த உத்தியைக் கடைப்பிடித்துப் பலன்பெற்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறைமுக விற்பனைப் பிரதிநிதி போன்று இந்த முயற்சி வாடிக்கையாளர்களின் நினைவில் நீந்திக் கொண்டே இருப்பதால், புதிய விற்பனை வாய்ப்புகள் பெருகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
செலவில்லாத மார்க்கெட்டிங் 
டிப்ஸ்! #HowToPromoteYourBusiness

பரிந்துரை முக்கியம் பாஸ்...

சமூக ஊடகங்களில் எப்போதும் யாரோ ஒரு பிரபலம் ஏதோ ஒரு பிராண்டை புரொமோட் செய்வதைப் பார்க்கலாம். உங்கள் பிசினஸை, உங்கள் தயாரிப்பை பிரபலப்படுத்த நீங்களும் பிரபல முகங்களை நாட வேண்டும் என்றில்லை.

உங்களது பொருள் அல்லது சேவையில் திருப்தியடைந்த வாடிக்கையாளரிடம், தெரிந்தவர்களுக்கு பரிந்துரை செய்யும்படி கேட்கலாம். நிஜமாகவே திருப்தியடைந்த வாடிக்கையாளர், இதை மகிழ்ச்சியாகவே செய்வார். பைசாகூட செலவு செய்ய வேண்டியதில்லை.

பரிந்துரைக்கும் வாடிக்கையாளருக்கு ஓர் அன்பளிப்போ, கிஃப்ட் கூப்பனோ கொடுக்க லாம். இந்தப் பரிந்துரை திட்டங்களை உங்களின் வாடிக்கையாளர்களிடம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. உங்களுக்கு நன்கு அறிமுகமான எல்லாத் தரப்பிலும் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்கள், கடந்த காலங்களில் உடன் பணியாற்றியவர்கள் என எவரிடமும் முயற்சி செய்து பார்க்கலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற வாய்ப்புகள் உள்ளன.

உங்களுக்கு பிரபலங்களின் நட்போ, அறிமுகமோ உண்டு என்றால் அவர்களிடம் உங்கள் பொருள்களைக் கொடுத்துப் பயன் படுத்தச் சொல்லி அவர்களையும் பரிந் துரைக்கச் சொல்லலாம். நட்சத்திர முகங் களுக்கு இன்னும் மவுசு அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செலவில்லாத மார்க்கெட்டிங் 
டிப்ஸ்! #HowToPromoteYourBusiness

விளம்பர வாய்ப்புகளை மிஸ் பண்ணாதீர்கள்!

இணையத்தில் ஏராளமான இலவச விளம்பர வாய்ப்புகள் உள்ளன. யெல்லோ பேஜஸ், ஜஸ்ட் டயல், இண்டஸ்ட்ரியல் பிராடக்ட் ஃபைண்டர் , இந்தியா மார்ட், மேஜிக் பிரிக்ஸ் போன்ற 200-க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் உங்களின் பொருள்கள் அல்லது தேவை பற்றிய பட்டியல்களை இலவசமாகப் பதிவிடலாம். இணையத்தில் உள்ள - கூகுள் போன்ற தேடு பொறியைப் பயன்படுத்தி, ஒரு வாடிக்கையாளர், தனக்குத் தேவையான விற்பனையாளரைத் தேடும்போது, நீங்கள் பதிவிட்ட தகவல்கள் தென்படும். இவற்றில் இலவசம் மற்றும் கட்டணம் செலுத்திச் செய்யும் விளம்பரம் என இரண்டும் உண்டு. உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுக்கலாம்.

சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் உங்களுக் கென தனி வணிகப் பக்கத்தை உருவாக்கி, பராமரிக்கலாம். இதனால், வாடிக்கை யாளர்கள் எளிதாக உங்களை அடையாளம் காண முடியும்.

உள்ளூர் நிறுவனப் பெயர்கள் இடம்பெறும் பட்டியலில் உங்களது பெயர் / பிராண்டு இடம்பெறுவதை முதலில் உறுதி செய்யுங்கள். இதுதான் அருகில் உள்ள உங்களின் வாடிக்கை யாளர்களைத் தவறவிடாமல் இருக்க சிறந்த வழி. இது உங்களுக்கு மிகச் சிறந்த விளம்பரமாக அமையும்.

இணையதளங்களில் தேடும்போது, மற்ற உள்ளூர் நிறுவனங்களைத் தாண்டி, உங்களது நிறுவனப் பெயர் முதலில் இடம்பிடிக்கச் செய்ய, எஸ்.இ.ஓ என்னும் தொழில்நுட்பம் உள்ளது. அதைப் பற்றி தெரிந்துகொண்டு பின்பற்றினால் உங்கள் பிசினஸை விரைவாக வளரும்.

செலவில்லாத மார்க்கெட்டிங் 
டிப்ஸ்! #HowToPromoteYourBusiness

வளர்ச்சிக்கு உதவும் சமூக ஊடகங்கள்

இன்று சமூக ஊடகங்கள்தான் பலருக்கும் விளம்பரக் களம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், லிங்க்டு இன், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பின்டெரஸ்ட் போன்ற சமூக ஊடகங்களில் உங்களுக்கென தனிப் பக்கத்தை நிர்வகிப்பது முதலும் முக்கியமுமான படி.

சமூக ஊடகங்களில் உங்களுக்கென தனிப் பக்கத்தை தொடங்குவதற்கும், அதை நிர்வகிப்பதற்கும் எந்தக் கட்டணமும் கிடை யாது. பைசா செலவில்லாமல் பல்லாயிரம் பேரிடம் தொடர்ந்து உங்களுடைய பொருள் களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.

பதிவிடும் விஷயமானது உங்கள் தொழில் சார்ந்து இருக்கலாம். அது புதிய தொழில் அறிமுகமாகவோ, வாடிக்கையாளரின் அனுபவ பகிர்வாகவோ, உங்களது தொழில் முயற்சியாகவோ, சேவை விரிவாக்கமாகவோ, தள்ளுபடி விற்பனையாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒவ்வொரு சமூக வலைதளத்துக்கும் ஒரு நோக்கம் உண்டு. உதாரணமாக, உங்களது வணிகம் நுகர்வோரை நேரடியாகக் குறி வைப்பது என்றால், ஃபேஸ்புக்தான் சரி. மாறாக, உங்கள் இலக்கு இனனொரு வணிகர் என்றால், லிங்க்டு இன்னை தேர்ந்தெடுக்கலாம். எனவே, உங்கள் தேவை அறிந்து தேர்ந்தெடுங்கள்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்குவதன் மூலம் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதுடன், புதிய வாடிக்கையாளர் களைப் பெறுவதும் எளிமை யாகிறது.

இதற்கு உங்கள் அறிவை யும், நேரத்தையும் மட்டும் பயன்படுத்தினால் போதும்; செலவழிக்கத் தேவையே இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism