மிகப் பெரிய பணக்காரர்களிலிருந்து சாமானிய மனிதர்கள் வரை சொத்தை பாகப்பிரிவினை செய்வது என்று வந்துவிட்டாலே சிக்கல்தான். ‘வானத்தைப்போல’ சகோதரர்கள் மாதிரி விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்கள், சொத்தைப் பிரிக்கும்போது பாண்டவர்-கௌரவர்களாக முரண்டுபிடிப்பதால் அந்தச் சிக்கல் நீதிமன்றத்துக்குப் போய், பல ஆண்டுகள் கழிந்தும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

வீட்டை எப்படி பாகம் பிரிக்க வேண்டும்?

``வீட்டை எப்படி பாகப்பிரிவினை செய்வது?’’ என்று சொத்து ஆலோசகர் த.பார்த்தசாரதியிடம் கேட்டோம். “பாகம் பிரிக்கும்போது பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். பாகப்பிரிவினை செய்ய வேண்டிய வீடு அல்லது நிலம் கிழக்கு - மேற்கு திசை பார்த்ததாக இருந்தால் கிழக்குப் பகுதியைத் தம்பிக்கும், மேற்குப் பகுதியை அண்ணனுக்கும் தர வேண்டும். அது வடக்கு - தெற்கு திசை பார்த்ததாக இருந்தால் வடக்குப் பகுதியை தம்பிக்கும், தெற்குப் பகுதியை அண்ணனுக்கும் பிரித்துத் தர வேண்டும். இந்தத் திசைகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவை.

அண்ணனுக்கும் தம்பிக்கும் எத்தனை அடி நிலம்?

60 x 40 அளவுள்ள இடத்தை அண்ணன், தம்பி இருவருக்குப் பிரிப்பதாக இருந்தால், வீட்டின் முன்பகுதியில் 40 அடி அகலம் அமைந்திருந்தால், அதை 60 x 20 என்ற அளவில் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளலாம். இதில் யாருக்குக் கிழக்குப் பகுதி, யாருக்கு மேற்குப் பகுதி என்பதை விதிமுறைப்படி பிரித்துக்கொள்ள வேண்டும்.

அகலம் குறுகலாக இருப்பதாகக் கருதினால் பின்பக்கம், முன்பக்கம் என்று பிரித்துக்கொண்டு, பின்பக்கத்தில் இடம் கிடைப்பவருக்கு நடைபாதைவிட்டுப் பிரிக்க வேண்டும். நடைபாதையைப் பின்வீட்டில் வசிப்பவருக்குக் கொடுக்க வேண்டும். அந்த இடத்தை மூவருக்குப் பிரிப்பதாக இருந்தால், பொதுப்பாதை விட்டுப் பிரிக்க வேண்டும். பின்னால் இடம் வருபவர்களுக்கு வாகனம் செல்ல, குடிநீர், கழிவுநீர்க்குழாய்கள் செல்ல இந்தப் பாதையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

600 அடி வீடோ, 600 ஏக்கர் சொத்தோ ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்துப் போனால் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

மூன்று தளம், மூன்று சகோதரர்கள்!

தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என இருந்தால் குடும்பத்தில் மூத்தவர் இரண்டாம் தளத்தையும், இரண்டாமவர் முதல் தளத்தையும், இளையவர் தரைத் தளத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று இடங்கள் / வீடுகள் இருந்து, அவற்றுக்கு மூன்று வாரிசுகள் இருந்தால் பெற்றோர் நல்ல நிலையில் இருக்கும்போதே வாரிசுகளில் யாருக்கு எந்த இடம் / வீடு விருப்பம் என்று அவர்களுக்குள் இணக்கமாகப் பிரிப்பதென்றால் பிரித்துக்கொள்ளலாம். பெற்றோர்களின் காலத்துக்குப் பிறகு பிரிப்பதாக இருந்தால் அரசாங்கப் பதிவுபெற்ற மதிப்பாளரை அணுகி, அந்தச் சொத்தின் சந்தை மதிப்பை அறிந்து பிரிக்க வேண்டும். அப்படிப் பிரிக்கும்போது ஒருவருக்குக் கிடைக்கும் சொத்தின் மதிப்பு மட்டும் அதிகமாக இருந்தால், மற்ற இருவருக்கும் பணமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும். பாகப்பிரிவினை செய்யும்போது அனைவருக்கும் சமமாகப் பிரித்தளிக்க வேண்டும் என்பதுதான் விதி.

படிக்காத அண்ணன், படித்த தம்பி!

சில நேரங்களில் வாரிசுகளுக்குள் இணக்கமான போக்கு இருந்தால், பாகப்பிரிவினையில் சில அனுசரிப்புகளைச் செய்யலாம். வாரிசுகளில் ஒருவர் மட்டும் படிக்காதவராகவும் மற்றவர்கள் படித்தவர்களாகவும் இருந்தால், படிக்காதவருக்கு சற்றுக் கூடுதலாகப் பங்கு கொடுக்கலாம்.

ஒருவர் மட்டும் வேலையில்லாமலும் மற்றவர்கள் நல்ல வேலையிலும் இருந்தால், வேலை இல்லாதவருக்குச் சற்றுக் கூடுதல் பங்கு தரலாம். பாகப்பிரிவினை விதிகளின்படி, கிழக்கு பாகத்தைப் பெற வேண்டியவர் மேற்கு பாகத்தைத் தரும்படிக் கேட்டால் மாற்றிக் கொள்ளலாம். இவை அனைத்துக்கும் அனைவரும் ஒப்புக்கொண்டால் சட்டமும் அதை ஏற்றுக்கொள்ளும்.

மதத்தின்படி பாகப்பிரிவினை

பாகப்பிரிவினை செய்யும்போது இந்துக்கள் (சைவர்கள், வைணவர்கள், பெளத்தம், சீக்கியம்) இந்துமதச் சட்டப்படியும், இஸ்லாமியர்கள் முகமதியச் சட்டப்படியும் பிரித்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்கள் மற்றும் மேற்கூறிய மதங்களைச் சாராதவர்கள், இந்தியச் சட்டப்படி பங்கிட்டுக்கொள்ள வேண்டும். இவற்றில் ஒவ்வொரு சட்டமும் வித்தியாசப்படும்” என்றார்.

கிடைத்ததை ஏற்றுக்கொள்!

வழக்கறிஞர் என்ற வகையில் பாகப்பிரிவினை தொடர்பான பல நூறு வழக்குகளை நடத்தியவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமன். “முன்னர் பல நபர்கள்/வாரிசுகளுள்ள ஒரு கூட்டுக் குடும்பத்தில் ‘பாகப் பிரிவினை’ என்பதை ஒரு ‘சுபநிகழ்வாக’ யாரும் கருதியதில்லை. கூட்டுக் குடும்பச் சொத்து, குடும்ப வியாபாரம், காடு, வயல்வெளி போன்ற சொத்துகளை அந்தக் குடும்பத் தலைவர் பரம்பரைச் சந்ததியால் பெற்று அனுபவித்துவரும் நிலையில், நிகழ்காலச் சூழலால் அதை அப்படியே தொடர இயலாத நிலையில் குடும்பநலன், உறவுகளின் நன்மை கருதி செய்யப்படும் ஏற்பாடுதான் ‘பாகப்பிரிவினை.’

சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்துக்குமான ஒரு மில்... அதைத் தாத்தாவுக்குப் பிறகு மகன் சிரத்தையாக நடத்தினார். அந்த உழைப்பின் மகத்துவம் தெரியாத உடன்பிறப்புகள் `பாகப்பிரிவினை வேண்டும்’ என்று கேட்டு, கோர்ட்டுக்குச் சென்றார்கள். இன்றுவரை அந்த வழக்கு தொடர்கிறது. எந்த ஏற்பாடும் செய்யாத அப்பாவின் சொத்தை தங்களுக்குள் பாகம் பிரித்துக்கொண்டார்கள் மகன்களும் மகள்களும். அனைவரும் கூட்டுக்குடும்ப ஏற்பாட்டின்படி (Joint Family Arrangement) அந்தச் சொத்தை அபிவிருத்தி செய்து, அதன் மூலம் கிடைத்த வருவாயில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தைப் பன்மடங்கு உயர்த்துகொண்டார்கள். இப்படிப்பட்ட ஆச்சர்யப்படவைக்கும் நிகழ்வும் உண்டு.

பாகப்பிரிவினையோ, குடும்ப ஏற்பாடோ கிடைத்ததைப் பெற்றுக்கொண்டு அதைக் காப்பதை நோக்கமாகக்கொள்ள வேண்டும். இதனால் பாரம்பர்யக் குடும்ப மரியாதையும், அவர்களின் சொத்துகளும், பெயரும் என்றென்றும் காக்கப்படும்” என்றார் அழகுராமன்.

600 அடி வீடோ, 600 ஏக்கர் சொத்தோ ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்துப் போனால் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நீதிமன்றம் வரை சென்றால் நம் தலைமுறைக்கு அடுத்த தலைமுறைதான் அந்தச் சொத்தை அனுபவிக்க முடியும்!

தொழில் நிறுவனங்களுக்கான பாகப்பிரிவினை!

பாகப்பிரிவினை என்பது ஒரு நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முக்கியத் திருப்புமுனை. அதைச் சரிவரச் செய்துமுடித்தால், அடுத்தகட்ட வெற்றியை நோக்கி நாம் நகர ஆரம்பித்துவிடுவோம். நிறுவனங்களை பாகப்பிரிவினை செய்யும்போது கவனிக்கவேண்டியற்றைப் பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

“ஒரு நிறுவனத்தை பாகம் பிரிக்கும்போது கௌரவம் பார்க்கக் கூடாது. அனைவருக்குள்ளும் இருக்கும் ஈகோவை விட்டுவிட்டு, இணைந்து செயல்பட்டு நிறுவனத்தின் நன்மை கருதி பாகப்பிரிவினையில் முடிவெடுக்க வேண்டும்.

ஒரு குடும்பத்திலிருப்பவர்கள் இணைந்து ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் என்றால், அப்படியே இணைந்து செயல்படுவதுதான் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்லது. இரண்டு சகோதரர்கள் இணைந்து செயல்பட்டால், அவர்களில் ஒருவருக்கு நிர்வாகத்திறமை, ஒருவருக்கு மார்க்கெட்டிங் திறமை இருந்தால், இருவரும் அதே இரண்டு துறைகளில் தொடர்ந்து செயல்பட்டு நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதுதான் சரியான பாகப்பிரிவினையாக இருக்கும். இரண்டு நிறுவனமாகப் பிரித்து தனித்தனியே செயல்பட்டால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி தடைபடவே வாய்ப்பு அதிகம்.

நம் நாட்டில் நிறுவனங்களைப் பெரும்பாலும் தனிநபரின்கீழ் இயங்குபவையாகவோ, பார்ட்னர்ஷிப் நிறுவனமாகவோதான் வைத்திருக்கிறார்கள். அப்படியிருந்தால் பாகப்பிரிவினையின்போது சிக்கலை எதிர்கொள்ள வேண்டிவரும். பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருந்தால், ஷேர் ஹோல்டர்களின் ஷேர் மதிப்பைவைத்துப் பிரிப்பது எளிது. நிறுவனத்துக்கென இருக்கும் நிர்வாகக்குழு பெரிய சிக்கல்கள் எழாமல் பாகப்பிரிவினையை நல்ல முறையில் செயல்படுத்திவிடும். சில நிறுவனங்களில் சகோதரர்களில் ஒருவர் திறமையானவராகவும், இன்னொருவர் திறனற்றவராகவும் இருப்பார்கள். இந்த நிலையில் சமமாகப் பங்கு பிரிப்பதாகக் கருதி, திறனற்றவருக்கும் நிர்வாகத்தில் சம பங்களிப்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பாதகமாக அமையக்கூடும். நிறுவனத்தின் நன்மை கருதி திறமையானவர் நிர்வாகத்தில் ஈடுபட்டு, இன்னொருவர் வெறும் பங்குதாரராக மட்டுமே இருந்து ஆதரவு தெரிவிக்கலாம். அந்தப் பக்குவம் இருக்க வேண்டும். ஒருவேளை அடுத்த தலைமுறையில் திறமையானவர்கள் வரும்போது அவர்களை நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளலாம். எந்த முடிவாக இருந்தாலும் அது, நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பணியாளர்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதால், அவர்களையும் Employee Stock Option மூலமாகப் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும். அதன்மூலம், ‘இது உங்கள் நிறுவனத்தைப் போன்றது’ என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தலாம். அப்படியிருந்தால், பாகப்பிரிவினைக்குப் பின்னரும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்களின் ஒத்துழைப்பு தொடரும். அதேபோல் பாகப்பிரிவினை விவகாரங்களை, நம்பிக்கையான ஆடிட்டரின் மூலமாகத்தான் செயல்படுத்த வேண்டும். பொதுவாக, பாகப்பிரிவினையை நல்ல நிலையில் இருக்கும்போது தந்தையே பிரித்துக்கொடுத்துவிடுவது நல்லது. நிறைய தொழில்கள், நிறைய சகோதரர்கள் இருக்கும் குடும்பத்தில் அனைத்துத் தொழில்களிலும் அனைவருக்கும் பங்கு கொடுப்பதைவிட, எந்தத் தொழிலை யார் சிறப்பாகச் செய்வது என்று பார்க்க வேண்டும். மற்ற தொழில்களில் வெறும் பங்குதாரராக மட்டுமே இருந்துகொள்ளலாம்” என்றார் நாகப்பன்.

பகையைத் தூண்ட இடம் தரக் கூடாது!

நா.கி.பிரசாத்

“என் அக்காவுக்கு திருமணம் ஆன பிறகு ஒருநாள் அவர் மாமனார் ஒரு விடுதலைப் பத்திரத்தை எழுதிக்கொண்டு வந்து தந்தார். என் அக்காவைத் திருமணம் செய்துதர நாங்கள் செலவழித்தது போதும்; அவருக்குச் சொத்தில் எந்தப் பங்கும் வேண்டாம் என்று எழுதியிருந்த பத்திரத்தில் அக்கா கையெழுத்திட்டிருந்தார். அப்பா வீட்டிலிருந்து எதையாவது வாங்கி வரச் சொல்லி குடைச்சல் கொடுக்கும் மனிதர்கள் நிரம்பிய காலத்தில் எங்கள் அக்காவுக்கு இப்படி ஒரு குடும்பம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

அடுத்ததாக அந்த வீட்டை நானும் என் அண்ணனும் பாகப்பிரிவினை செய்யும் நிலை வந்தபோது, அதை அண்ணனே எடுத்துக்கொண்டு எனக்கான பங்கைப் பணமாக வாங்கிக்கொள்வது என்று முடிவெடுத்தோம். இது தெரிந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர், என் அண்ணனிடம் என்னிடமும் தனித்தனியாகப் பேசி எங்களுக்குள் பகையை மூட்டிவிட நினைத்தார்.உடன்பிறந்தவர் களுக்குள் பாகப்பிரிவினை செய்யும்போது இப்படி யாராவது குழப்பம் செய்வார்கள் என்பதை உணர்ந்திருந்ததால், அதற்கு இடம் தராமல் எங்களுக்குள் பேசிப் பிரித்துக்கொண்டோம். தற்போது நாங்கள் வசித்த ஓட்டு வீட்டை என் அண்ணன் பெரிய வீடாக மாற்றிக் கட்டியிருக்கிறார். அதே மகிழ்ச்சியோடு எங்கள் உறவு தொடர்கிறது.”

படம்: சு.குமரேசன்