ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

இதுவும் கடந்து போகும்... #HowToStayPositive

இதுவும் கடந்து போகும்
பிரீமியம் ஸ்டோரி
News
இதுவும் கடந்து போகும்

டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு வீட்டில் இருப்பது என்பது மிகச் சவாலான விஷயம்.

 சரஸ் பாஸ்கர் -  நப்பின்னை சேரன்
சரஸ் பாஸ்கர் - நப்பின்னை சேரன்
கொரோனா பெருந்தொற்றை மனரீதியாக எதிர்கொள்வது சவாலானதாக இருந்தாலும் நிச்சயம் நாம் இதைக் கடந்து வரவே செய்வோம். இரண்டாவது லாக்டௌனில் எல்லா தரப்பினரும் சந்திக்கும் சவால்களான ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன், இழப்பை எதிர் கொள்வது போன்றவற்றை எப்படிக் கடக்கலாம் என ஆலோசனை தருகிறார்கள் உளவியல் ஆலோசகர்கள் சரஸ் பாஸ்கர் மற்றும் நப்பின்னை சேரன்.
இதுவும் கடந்து போகும்...
#HowToStayPositive

குழந்தைகளுக்கு...

கற்றுக்கொள்ளும் ஆர்வம் பள்ளிகளுக்குச் சென்றுகொண்டிருந்ததைவிட இப்போது குழந்தைகளிடம் வெகுவாகக் குறைந்திருக் கிறது. ஆன்லைன் வகுப்புகளை அட்டெண்ட் செய்வதில் கவனம் குறைவாக இருக்கிறது. ஆசிரியர்கள் தரும் புராஜெக்ட்டுகளும் அசைன்மென்ட்டுகளும் தரும் அழுத்தம் மறைமுகமாகப் பெற்றோர்களின் மேல் விழுகிறது.

ஸ்கிரீன் டைம் இல்லாமல் ஆக்டிவிட்டி பேஸ்டு விளையாட்டுகளான புதிர்களைத் தீர்க்க வைப்பது, குவிஸ், வாசிப்பு, வீட்டு வேலைகளை ஷேர் செய்வது போன்றவற்றைக் கொடுத்து அவர்களை பிசி யாக வைத்துக்கொள்ளலாம். இது குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸைக் கட்டுப்படுத் தும்.

டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு வீட்டில் இருப்பது என்பது மிகச் சவாலான விஷயம். இவர்களிடம் ‘யோகா பண்ணு... மெடிட்டேட் பண்ணு’ என்றெல்லாம் சொல்வது வேலைக்கே ஆகாது.

உடலியக்கத்தை அதிகரிக் கும்படி வீட்டிலேயே சில விளையாட்டுகளை விளை யாட ஊக்கப்படுத்தலாம். இதனால் `சைக்காலஜிக்கல் இம்யூனிட்டி' எனப்படும் உளவியல் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். விளையாட்டு களில் ஈடுபடும்போது பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். கோபம், அழுகை போன்றவற்றைக் கட்டுப்படுத்தி, உணர்வுத் தடு மாற்றங்கள் ஏற்படாமலும் காக்கும்.

இதுவும் கடந்து போகும்...
#HowToStayPositive
triloks

வொர்க் ஃப்ரம் ஹோம் தம்பதியர் மற்றும் ஹோம் மேக்கர்களுக்கு...

நான்கு சுவர்களுக்குள்ளேயே இருக்கும் போது ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும். சின்னச் சின்ன விஷயங்கள்கூட பூதாகரமானதாகத் தெரியும். ‘பாத்திரத்தைச் சரியா வெளக்கல... ரூமை சரியா வச்சிக்கல... சிஸ்டமை ஆஃப் பண்ணல...' எனக் கணவன் மனைவிக்கிடையில் தேவை யற்ற குறை கண்டுபிடிப்புகளையும் விவாதங் களையும் உண்டுபண்ணும். கோபத்தில் தடித்த வார்த்தைகளும் வெளிப்படலாம்... அதனால் கூடுமானவரை

இந்தச் சூழ்நிலைகளில் சண்டை நடக்கும் இடத்திலிருந்து விலகிக் கொள்வது நல்லது.

தூக்கமின்மையும் முறையற்ற உணவும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு முக்கியமான காரணங்கள். சரியான தூக்கமும் சரிவிகித சாப்பாடும் மிக அவசியம். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் அவர் களுடைய வேலை நேரம் அதிகரிக்கிறது. இதனால் சுய அக்கறை வெகுவாகக் குறைகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நிறுவனத் தின் எதிர்பார்ப்பு மற்றும் வேலையை இழந்து விடுவோமோ என்ற பயம்.

கோவிட் சூழலில் வேலை கையைவிட்டுப் போய்விடக் கூடாது எனும் பயத்தில் அதிகமாக வேலை செய்கிறார்கள். இந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியையே கெடுத்துவிடும்.

பயம் அதிகரிக்கும்போது வேலை செய்யும் திறன் பாதிக்கும். பணியிடத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும் கடமை களையும் திறம்படக் குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்தாலே இதைச் சமாளிக்கலாம். அப்படிச் செய்தால் முன்பு போலவே உங்களின் வழக்க மான ஃபேமிலி டைமை எடுத்துக்கொள்ள முடியும்.

இதுவும் கடந்து போகும்...
#HowToStayPositive
Deepak Sethi

வேலைதேடும் இளைஞர்கள் / இளம்பெண்களுக்கு...

கொரோனா காலத்தில் வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். பாசிட்டிவ்வான நபர் ‘இதுவும் கடந்து போகும்’ என்பார்.

`எதனால வேலை கிடைக்கல... எந்தெந்த இடத்துல இன்னும் பெட்டரா பெர்ஃபார்ம் பண்ணியிருக் கலாம்...' என நம்முடன் நாமே நடத்தும் உரையாடலில் பதிலும் தானாகக் கிடைக்கும். தன்னை மேம் படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என யோசிக்கலாம்.

இதுவரை செய்த முயற்சிகள் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் அணுகுமுறையை மாற்ற வேண்டும். படித்த படிப்புக்கு வேறெந்தத் துறைகளில் வாய்ப்பிருக்கிறது எனத் தேட வேண்டும். சுயமாக யோசித்து முடிவெடுக்கலாம். அது இயலாத வர்கள் உளவியல் ஆலோசகர்களின் உதவியை நாடலாம்.

இதுவும் கடந்து போகும்...
#HowToStayPositive

பெரியவர்களுக்கு...

கொரோனா தொற்றால் அதிக பாதிப்புகளுக்குள்ளாவது பெரியவர்களே. அதேவேளை போதிய பாதுகாப்புடன் இருந்தால் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் கூட அதிலிருந்து அவர்களால் மீண்டு வரமுடியும். பெரியவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வது பாதுகாப்பை உறுதிசெய்யும்.

கோவிட் டெஸ்ட் எடுப்பதானாலும் சரி, தடுப்பூசி எடுப்பதானாலும் சரி... அது நோய்த் தொற்று ஏற்படும் முன் காப்பதற்காக எடுக்கிறோம் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ‘நீங்க ஜாக்கிரதையா இருந்தீங்கல்ல... அதனால உங்களுக்கு நெகட் டிவ்தான் வரும்’ என்ற தைரியத்தைப் பாய்ச்சிக் கொண்டே இருக்க வேண்டும்.

தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன் பயிற்சிபெற்ற பயிற்றுவிப்பாளர்கள், `தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது' என்று மென்மையான குரலில் பெரியவர்களிடம் பேசி அவர்கள் பயத்தைப் போக்கி மனதை `Progressive Relaxation Therapy' மூலம் சாந்தப்படுத்துவார்கள். தேவையில்லாத எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் மனதை ஒருநிலைப்படுத்த மூச்சுப்பயிற்சி எடுக்கச் செய்வார்கள். இப்படிச் செய்வதால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும் மூச்சும் சீராக இருக்கும்.

பெரியம்மை போன்ற நோய்களுக்கு எப்படி தடுப்பூசி எடுத்துக்கொள்கிறோமோ அதுபோலத்தான் கொரோனா தடுப்பூசியும். ஊசி போடும்போது தசைகளைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். பயத்தில் இறுக்கமாக வைத்திருந்தால் அதிக வலியை ஏற்படுத்தும்.

தடுப்பூசி போடுவதால் சின்னச் சின்ன உபாதைகள் வரலாமே தவிர, கோவிட் தொற்று வராமல் இருப்பதற்குத்தான் ஊசி போடப் படுகிறது என்பதைப் புரியவைக்க வேண்டும். அதைத்தான் `Progressive Relaxation Therapy' மூலமாகப் பயிற்றுவிப்பாளர்கள் பேசுவார்கள். அவர்களின் பயத்தைப் புரிந்துகொண்டு அதற் கேற்றபடி பேசி, பயத்தைப் போக்க வேண்டும்.

அதற்காக, `நீங்க கவலையேபடாதீங்க உங்களுக்கு வரவே வராது' எனப் பொய்யான நம்பிக்கையைக் கொடுக்கக் கூடாது.

இதுவும் கடந்து போகும்...
#HowToStayPositive

இழப்புகளிலிருந்து மீள்வது எப்படி?

``கொரோனா இரண்டாம் அலை பல உயிர்களைப் பறித்துக்கொண்டிருப்பதால், மொத்த நாடுமே இப்போது மன அழுத்தத் துடன்தான் இருக்கிறது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் அறிவுக்கு முதலிடமும் உணர்வுக்கு இரண்டாமிடமும் கொடுப்பதுதான், இழப்பு களிலிருந்து மீண்டு வருவதற்கு முதல் வழி.

காரணமே தெரியாமல் குடும்பத்தில் ஒருவரை இழப்பது தாங்க முடியாத வேதனை. ஆனால், இந்த கொரோனா காலத்தில் `கூட்டம் கூடாதீர்கள்’ என்று அரசும் மருத்துவர்களும் சொல்வதை அலட்சியப்படுத்திவிட்டு, `கண்டிப்பா கல்யாணத்துக்குப் போகணும்’, ‘துக்க வீட்டுக்குப் போகாம இருக்க முடியுமா’ என்பது வைரஸுடன் கைகுலுக்குவது போலத் தான்.

நேசித்தவர்களை இழப்பது மிகப்பெரிய கஷ்டம். அவர்களுடைய நினைவுகள் மனதுக் குள் ஏக்கமாகத்தான் படியும். வாழ்க்கை நிச்சய மில்லாத இந்தத் தருணத்தில், அவர்களால் உங்களுக்குக் கிடைத்த நன்மைகளை நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கலாம் அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்குவது, பெற்றோர்களை இழந்த குழந்தைகளைத் தத்தெடுப்பது என்று ஆறுதல் தேடலாம்.