இப்போ தெல்லாம் மொபைல் போன் இல்லாமல் சில மணி நேரம்கூட இருக்க முடிவதில்லை. எல்லா விஷயங்களிலும் அப்டேட்டாக இருக்க மொபைல் உதவினாலும், இதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் பிரச்னைதான்.

மொபைல் பயன்படுத்தும் போது எவற்றில் எல்லாம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.எவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது ஆகிய தகவல்களைத் தருகிறார். இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்டு செக்யூரிட்டி ஹெட் நிறுவனத்தின் தலைவர் கலசலிங்கம்.

பழைய மொபைலா... பத்திரம்!

உங்களின் பழைய மொபைல்போனை விற்கும்போதும், உபயோகிக்கும் போனின் பழுதுகளை சரிசெய்ய சர்வீஸ் சென்டர்களில் கொடுக்கும்போதும் அதில் உள்ள டேட்டாவை நீக்காமல் அப்படியே மற்றவர்களிடம் கொடுப்பது ஆபத்தானது. இதுபோன்ற சூழலில், போனில் உள்ள தகவலை முதலில் பென் டிரைவ் அல்லது ஹார்டு டிஸ்க்கில் பேக்-அப் எடுத்து வைத்துக்கொண்டு, பின்பு செட்டிங் சென்று ஃபேக்டரி ரீசெட் செய்யுங்கள். இது உங்களின் புகைப்படங்கள், கணக்குகள், ஆப்கள் என அனைத்தையும் போனில் இருந்து நீக்கும்.

டேட்டா `வைப்' செய்வது மிகவும் நல்லது. டேட்டா வைப் செய்வதற்கென்று சில டூல்கள், ஆப்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி டேட்டா வைப் செய்வதன் மூலம், ரெகவரி செய்ய முடியாத அளவுக்கு உங்கள் டேட்டாவைப் பாதுகாக்க முடியும்.

போனில் இருக்கும் தகவலை பிரின்ட் அல்லது நகல் எடுக்க கடைகளில் உள்ள பிரின்ட்டர் அல்லது நகல் இயந்திரத்தில் இணைக்கும்போது போனை நீங்கள் மட்டுமே இயக்குவது நல்லது.

பொது வைஃபையா... ஜாக்கிரதை!

பொது இடங்களில் உங்களின் மொபைல் டேட்டாவை பயன் படுத்துவதே நல்லது. பொது இடங்களில் இருக்கும் வைஃபை மூலம் ஷாப்பிங் கணக்குகள், மின்னஞ்சல், வங்கிக்கணக்குகள் மூலம் நிதி மாற்றுதல் போன்ற பணிகளைச் செய்யும்போது உங்களுடைய தகவல்கள் எளிதாகத் திருடப்படக்கூடிய அபாயம் இருக்கிறது.

இலவசம் என்பதற்காக வைஃபை சேவையை இணைக்காமல் நம்பகமான இடங்களில் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.

முக்கியமான பயன்பாட்டுக்காக மற்றவர்களின் கணினி அல்லது மொபைலில் உள்ள ஏதேனும் ஆப்பில் உங்களுடைய ஐடியை லாக்-இன் செய்கிறீர்கள் எனில், பாஸ்வேர்டுகளை சேமித்து வைக்க வேண்டாம் (லாக் இன் செய்யும்போதே ‘Never’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்துவிடுங்கள்).

போனில் புளூடூத் சேவையைப் பயன்படுத்தும் போதும், அவசியமான சூழல்களில் மட்டும் மற்றவர்களுடன் `Pair' என்கிற இணைப்பைச் செய்வது நல்லது.

கேமரா ஆக்சஸ் வேண்டாமே!

ஓர் ஆப்பை டவுன்லோடு செய்யும்போது, அது எவற்றுக்கெல்லாம் ஆக்சஸ் கேட்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

சில ஆப்களுக்கு (ப்யூட்டி ஆப்ஸ், ஃபேஸ் ஆப்ஸ்) போன்றவற்றுக்கு கேமரா தேவைப்படலாம். இதுபோன்ற அவசியத் தேவைகளுக்கு மட்டும் கேமரா ஆக்சஸ் கொடுக்கலாம்.

கேமரா ஆக்சஸ் கொடுக்கிறோம் எனில், நம்முடைய செயல்பாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும் என்பதால், எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கேமரா சேவையே தேவையில்லாத ஆப்கள் (உணவு டெலிவரி ஆப், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஆப்) கேமரா ஆக்சஸ் கேட்கின்றன எனில், அந்த ஆப்களை டவுன்லோடு செய்வதைத் தவிர்க்கலாம்.

வாட்ஸ் அப் பாதுகாப்பு

வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் உங்களுடைய எண் நிறைய பேருக்கு சென்றடைய வாய்ப்புகள் அதிகம். அதனால், செட்டிங்கில் உள்ள `குரூப் பிரைவசி'யில் `No Body' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்துகொள்ளவும். இதன்பின் எப்போது யார் உங்களை குழுவில் சேர்க்க விரும்பினாலாலும் முதலில் உங்களுக்கு இன்வைட் மெசேஜ் வரும். நீங்கள் விரும்பினால் மட்டுமே அந்தக் குழுவில் இணைந்துகொள்ளலாம்.

வாட்ஸ்அப்பின் புரோஃபைல் போட்டோவை யார் வேண்டுமானாலும் டவுன்லோடு செய்ய முடியும் என்பதால் உங்களுடைய கான்டாக்ஸில் உள்ளவர்கள் மட்டும் உங்களின் புரோஃபைல் படத்தை பார்ப்பதுபோன்று செட் செய்வது நல்ல செயல்பாடு.

தெரியாத நபர்களிடம் இருந்து அடிக்கடி தேவையில்லாத மெசேஜ்கள் வருகின்றன எனில், எதைப்பற்றியும் யோசிக்காமல் அவர் களை ப்ளாக் செய்து விடுங்கள்.

தேவையில்லாத ஃபார்வேர்டு லிங்குகள் எதையும் க்ளிக் செய்யாதீர்கள். அதன் மூலம் உங்களின் மொபைல் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

யாரோ அனுப்பிய APK ஃபைலை நீங்கள் டவுன்லோடு செய்யும்பட்சத்தில் உங்கள் போனை அவர்களால் கண்காணிக்க முடியும். ஆகவே, APK ஃபைல்களை டவுன்லோடு செய்யாதீர்கள்.

வலிமையான பாஸ்வேர்டு வேண்டும்!

ஒரு பாஸ்வேர்டையே அனைத்துக் கணக்குகளுக்கும் வைப்பது நல்லதல்ல.

உங்களின் ஒரு கணக்கு ஹேக் செய்யப் பட்டாலும், மற்ற கணக்குகளுக்கும் ஆபத்து என்பதால், மெயில் ஐ.டி, ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம், நெட் பேக்கிங் என எல்லா வற்றுக்கும் தனித்தனி பாஸ்வேர்டுகளை வையுங்கள்.

எண், குறியீடு, எழுத்துகள் என அனைத்து கேரக்டர்களையும் ஒருங்கிணைத்து பாஸ்வேர்டுகளை உருவாக்குங்கள்.

பேட்டர்ன்லாக் வைப்பதைவிட ஃபிங்கர் பிரிண்ட், சென்சார், பயோமெட்ரிக்போன்ற வசதிகளை பாஸ்வேர்டு செட் செய்வதற்குப் பயன்படுத்தலாம்.

பாஸ்வேர்டை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.

மொபைலில் `நோட்ஸ்' பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது எனில் ஏ.டி.எம் பின் நம்பர், உங்களின் ஆதார் எண் போன்றவற்றை குறித்துவைப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

ஹெல்த் ஆப்களின் நம்பகத்தன்மை

பீரியட்ஸ் ஆப், டெலிவரி ஆப் என ஏதாவது ஒரு ஹெல்த் ஆப்பினைப் பெண்கள் பலரும் பயன்படுத்துவார்கள். இதுபோன்ற ஹெல்த் ஆப்கள் நம்மிடமிருந்து தகவலைத் திரட்டி மூன்றாம் நபர்களுக்கும் விற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், ஹெல்த் ஆப்கள் டவுன்லோடு செய்யும்போது அதன் நம்பகத்தன்மையை செக் செய்து, ரிவியூக்களைப் படித்து அதன்பின் டவுன்லோடு செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ஆப் டவுன்லோடு செய்யும் போது உங்களைப்பற்றிய தகவல்களை அதிகமாகப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது.

மொபைல் நம்பர் கொடுப்பதில் கவனம்

உங்களின் மொபைல் நம்பரை எல்லா இடங்களில் பதிவிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத சூழலில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் வங்கிக் கணக்கில் தொடர்பு இல்லாத மாற்று எண்ணைத் தருவதே நல்லது.

பல இடங்களில் போட்டிகள் நடத்தப்படுவதே வாடிக்கையாளர்கள் பற்றிய டேட்டாக்களைச் சேகரிப்பதற்காகத்தான். அதனால் பரிசு மழை என்றவுடன் உடனே அவர்களைத் தொடர்பு கொள்வதையோ, மொபைல் எண்ணைப் பதிவிடுவதையோ தவிர்க்கவேண்டும். போட்டி நடத்தும் நிறுவனம் உங்களின் மொபைல் எண்ணைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்குமானால் தரலாம்.

உங்கள் மொபைல் மூலமாகவே ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். அதனால், ரீசார்ஜ் செய்ய கடைகளை அணுகுவதைத் தவிர்க்கலாம்.

பயண முன்பதிவு, ஹோட்டல் அறை முன்பதிவு போன்றவற்றுக்கு உடன் பயணம் செய்யும் ஆண்களின் எண்ணைப் பகிர்வது நல்லது.

முன்பின் அறியாதவர் உங்கள் மொபைல் மூலம் அவர்களின் வீட்டில் உள்ளவர்களைத் தொடர்புகொள்ள உதவி கேட்கிறார்கள் எனில், அவர்கள் பேசி முடித்ததும் அந்த எண்ணை ப்ளாக் செய்வதன் மூலம் தேவையில்லாத தொல்லைகளைத் தவிர்க்கலாம்.

பொது இடங்களில் குறிப்பிடுவதற்கு எனத் தனியாக ஒரு எண் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அந்த எண்ணைக் கொடுப்பதன் மூலம் உங்களின் தனிப்பட்ட எண் வேறெங்கும் பரவாமல் தடுக்கலாம்.

நீங்கள் சமூகவலைதளங்களை எவ்வளவு கவனமாகக் கையாள்பவராக இருந்தாலும், உங்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம்.

OTP எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம்.

இனி தேவை அதிக கவனம்... மொபைலிலும்.