சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிலருடைய உயிரைக் காவு வாங்கிவிட்டது கொரோனா என்னும் கொடிய நோய். இந்த மரணங்கள் ஐம்பது வயதைத் தாண்டிய அனைவரிடமும் ஒருவிதமான பயத்தை உருவாக்கியிருக்கின்றன.

விளைவு, தங்களின் மறைவுக்குப் பிறகு, தங்களின் பெயரிலுள்ள சொத்துகள் எந்தச் சிக்கலுமில்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கும், வாழ்க்கைத்துணைக்கும் சேர வேண்டும் என்று அவர்களை நினைக்கவைத்திருக்கிறது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் உயில் எழுதுவது இந்த கொரோனா காலத்தில் ஏகத்துக்கும் அதிகரித்திருக்கிறது.

உயில் என்பது என்ன, யாரெல்லாம் உயில் எழுதலாம், அதற்கான நடைமுறைகள் என்னென்ன ஆகியவை குறித்து வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தியிடம் கேட்டோம்.

அல்டிமேட் விருப்பம்தான் உயில்!

“தமிழில் மிகப் பொருத்தமாக அமைந்த சொற்கள் `உயிர்’ மற்றும் `உயில்’ ஆகியவை. உயில் என்பது நம் உயிர் பிரிந்த பிறகு உயிர்பெறும் நம் சொற்களின் சாசனம். அதாவது, ஒரு மனிதனின் இறுதி வாக்குமூலம்.

பொதுவாக, உயில் என்பது ஏதோ சொத்து சார்ந்தது என்னும் எண்ணம் நம் மக்களிடையே உள்ளது. அது சொத்து சார்ந்ததுதான் என்றாலும், அதுமட்டுமே அல்ல. ஒரு மனிதன், தன் வாழ்வில் தன்னைச் சார்ந்தவர்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களையும் உயிலாக எழுதிவைக்கலாம். ஒருவர், தனக்கு இறுதிச் சடங்கு யார் செய்ய வேண்டுமென்றும், தன் மரணச் சடங்குகளில் யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் அல்லது கலந்துகொள்ளக் கூடாது என்றுகூட உயில் எழுதிவைக்கலாம்.

பெரிய பணக்காரர் ஒருவர், வாரிசுகள் இருந்தபோதும் தன் சொத்துகளின் பெரும்பகுதியை விலங்குகள் நல அமைப்புக்கு எழுதிவைத்தார். மற்றொருவர் தன் சொத்துகள் குறித்து உயில் எழுதியபோது, சொத்துகளைத் தன் வாரிசுகளுக்கும், தான் சேர்த்துவைத்த ஸ்டாம்ப் கலெக்ஷனையும் நாணய சேகரிப்பையும் அந்தத் துறையில் ஆர்வமுள்ள இளைஞர் ஒருவருக்கும் எழுதிவைத்தார்.

உண்மையில் அவை மிகவும் மதிப்புள்ளவை. அவை இலவசமாக மூன்றாம் நபருக்குப் போய்ச் சேருவதை வாரிசுகள் விரும்ப மாட்டார்கள். ஆனால், வேறு வழியில்லை, அவர் உயில் எழுதிவிட்டார். இதன் மூலம் நாம் ஒன்றை அறிந்துகொள்ள முடியும். உயில் என்பது ஒரு மனிதனின் அல்டிமேட் விருப்பம் என்பதுதான்.

பிரச்னை வரும் என்றால்..!

உயில் எழுதுவது அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கிறது என்பதைவிட உயில் எழுத வேண்டியது குறித்த சிந்தனை பலருக்கும் தோன்றியிருக்கிறது. குறிப்பாக, இளைஞர்களும் நடுவயதுக்காரர்களும் இது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கிறார்கள். கொரோனா காலத்தில் நிகழும் மரணங்கள் அந்த முடிவுக்கு அவர்களைத் தள்ளுகின்றன.

பொதுவாக, நம் நாட்டில் பொது சிவில் சட்டம் இல்லை. எனவே, அவரவர் சார்ந்த மதத்தின் அடிப்படையிலுள்ள சொத்துரிமைச் சட்டங்களே பேணப்பட்டு வருகின்றன.

சொத்து, `பரம்பரைச் சொத்து’ என்றும் `தனிமனிதச் சொத்து’ என்றும் இரு வகைப்படும். பரம்பரைச் சொத்து என்பது வழிவழியாகச் செல்வது. இது குறித்த தெளிவான சட்டங்கள் உள்ளன. எனவே, பரம்பரைச் சொத்துகளுக்கு உயில் எழுத வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவர் உழைத்துச் சேர்த்த சொத்துகளுக்கு உயில் எழுதலாம் அல்லது எழுத வேண்டும். சொத்துகள் தன் வாரிசுகளுக்கும், வாழ்க்கைத்துணைக்கும் சேர்வதை வேறு யாரும் உரிமை கோர மாட்டார்கள் என்பவர்கள் உயில் எழுதவில்லையென்றாலும் அது பெரிய பிரச்னை இல்லை. ஆனால், அந்தச் சொத்துகளுக்கு உரிமை கோருவதில் வேறு பிரச்னைகளோ அல்லது வேறு துணையின் வாயிலாகப் பிறந்த வாரிசுகளோ இருப்பார் களென்றால் கட்டாயம் உயில் எழுத வேண்டியது அவசியம்.

ஒரு காகிதம், இரு சாட்சியம்..!

`ஒருவர் உயில் எழுதத் தேவை, ஒரு காகிதமும் இரண்டு சாட்சியங்களும் மட்டுமே. முத்திரைத் தாள்கள்கூடத் தேவையில்லை’ என்கிறது சட்டம். வெறும் வெள்ளைப் பேப்பரில் தன் விருப்பத்தை எழுதி, அதில் எழுதியவர் கையெழுத்திட வேண்டும். அவரின் நம்பிக்கைக்குரிய இருவரின் சாட்சிக் கையொப்பங்களையும் பெற வேண்டும். உண்மையில், உயிலிலிருக்கும் செய்திகளை சாட்சிகள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், உயில் எழுதுகிறபோது எழுதியவர் நல்ல மனநிலையில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்துவதே சாட்சியங்களின் பணி.

பொதுவாக, உயில் எழுதுபவர்களைவிட சாட்சிகள் வயது குறைந்தவர்களாகவும் ஏதேனும் சட்டச் சிக்கல் எழும்போது நீதிமன்றம் வந்து, உயிலின் உண்மைத்தன்மை குறித்த சாட்சி சொல்பவர்களாகவும் இருக்க வேண்டும். நம் சட்டப்படி இதைப் பதிவு செய்ய வேண்டும் என்றுகூட அவசியமில்லை. ஆனால், சட்டப்படி முற்றிலும் பாதுகாப்பான ஓர் ஆவணத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சட்ட வல்லுநர் ஆலோசனை தேவை!

சட்டப்படி செல்லுபடியாகும் ஓர் உயிலைத் தயார் செய்வதற்கு சொத்துப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் குறித்தும், அவற்றில் வெளியாகும் தீர்ப்புகள் குறித்தும் அறிவும் அனுபவமும் மிக்க சட்ட வல்லுநரை அணுக வேண்டியது அவசியம். சட்ட வல்லுநரை அணுகுவதற்கு முன்னர், விடுபடல்களற்ற முழுமையான உங்களின் சொத்துகளின் பட்டியலைத் தயார் செய்துகொள்ள வேண்டும். சட்ட வல்லுநரிடம் உங்களின் விருப்பத்தைச் சொன்னால் அவர் அதற்கேற்ப உயில் எழுதி, அதைப் பதிவும் செய்து தருவார். இதற்காகக் குறைவான ஒரு கட்டணம் வசூலிப்பார் என்றாலும் அது உரிய காலத்தில், நம் வாரிசுகளுக்கு எந்தச் சட்டப் பிரச்னையும் எழாதபடிக்கு சொத்துகள் சேர்வதை உறுதிப்படுத்தும்.

கொரோனா காலத்தில் யார் பாதிக்கப் படுவார்கள் என்று சொல்வதற்கில்லை. திடீரென பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சை கட்டத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். குடும்பத் தலைவர் போய்ச் சேர்ந்த சில நாள்களுக்கு அந்த சோகம் இருக்கும். பிறகு, சொத்துப் பிரச்னை எழுந்து, குடும்பத்தில் நிம்மதி குலையும். இதைத் தடுக்க ஒரே வழி, உயில் எழுதுவதுதான்” என்கிறார் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.

நல்ல யோசனைதான்!