தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களில் `டி.டி.கே’-வுக்குத் தனியிடம் உண்டு. 91 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் `ஆல்போலத் தழைத்து அறுகுபோல் வேரோடி’ இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது.

இந்த நிறுவனம் கடந்துவந்த பாதையைப் பற்றி வெளிவந்திருக்கும் புத்தகம்தான், `டிஸ்ரப்ட் அண்ட் கான்குயர் (Disrupt & Conquer – How TTK Prestige Became a Billion Dollar Company)’. டி.டி.ஜெகநாதனும் சந்த்யா மெண்டோன்காவும் இணைந்து எழுதிய இந்தப் புத்தகத்தை பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. டி.டி.கே நிறுவனத்தின் வரலாற்றைத் துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்துச்சொல்கிறது இந்தப் புத்தகம்.

கிருஷ்ணமாச்சாரி என்னும் பிசினஸ்மேன்!

டி.டி.ஜெகநாதனின் பாட்டனார் (அதாவது, ஜெகநாதனின் தாத்தா, கிருஷ்ணமாச்சாரியின் அப்பா) டி.டி.ரங்காச்சாரி. அவர், தன்னைப்போலவே தன் மகன் கிருஷ்ணமாச்சாரியும் வக்கீலாக வர வேண்டும் என நினைத்தார். ஆனால், கிருஷ்ணமாச்சாரியோ சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் படித்துவிட்டு, ஏ.ஆர்.துரைசாமி ஐயங்கார் நடத்திவந்த வர்த்தகத் தொழிலில் சேர்ந்தார்.

1926-ம் ஆண்டுவாக்கில் ஐயங்காருக்கு உடல்நிலையில் நலிவு ஏற்பட, அவர் தன் தொழிலை கிருஷ்ணமாச்சாரி யிடம் ஒப்படைத்துவிட்டு, 1928-ம் ஆண்டு கண்மூடினார். கிருஷ்ண மாச்சாரியின் திறமையைக் கண்டு வியந்த லீவர் நிறுவனம், அதன் பொருள்களுக்கான தென்னிந்திய விநியோக உரிமையை அவருக்குக் கொடுக்க, டி.டி.கிருஷ்ணமாச்சாரி & கோ (டி.டி.கே & கோ) நிறுவனம் உதயமானது.

அவர், தன் வணிகத்தில் `மறுவிநியோக முறை’ (Redistribution) என்ற ஒரு புதுமையான யோசனையை அறிமுகப்படுத்தி, தென்னிந்தியா முழுவதும் விநியோகஸ்தர்களை நியமித்தார். டி.டி.கே நிறுவனம் இறக்குமதி செய்து சந்தைப்படுத்திவந்த லீவர், பீசாம் (Beecham) ஆகிய நிறுவனங்களின் சோப், எண்ணெய் போன்ற பொருள்களை தென்னிந்தியா வின் மூலைமுடுக்கெல்லாம் கிடைக்கும்படிச் செய்தார். 1928-ம் ஆண்டிலிருந்து 1940-ம் ஆண்டு வரை டி.டி.கே & கோ பல பொருள்களை (சன்லைட், லைஃப்பாய் சோப், பீசாம் அண்ட் காட்பரி சாக்லேட்டுகள், க்ராஃப்ட் சீஸ், கெல்லாக்ஸ் கார்ன்ஃப்ளேக்ஸ், ஷெஃப்ஃபர் பேனா, அக்குவா வெல்வா ஆஃப்டர் ஷேவ் லோஷன், ஹார்லிக்ஸ், மேக்லீன், எனாஸ் (Enos) போன்றவை) வெற்றிகரமாக விநியோகம் செய்துவந்தது.

பிசினஸ் டு அரசியல்

1930-களின் பிற்பகுதியில் கிருஷ்ணமாச் சாரிக்கு அரசியல்மீது ஈடுபாடு ஏற்பட்டது. 1939-ம் ஆண்டிலிருந்து அரசியலில் அவர் அதிகமாக ஈடுபட ஆரம்பிக்க, அவரின் நான்கு மகன்களில் (நரசிம்மன், ரங்க சுவாமி, வாசு, ராகவன்) மூத்தவரான 17 வயதே நிரம்பிய நரசிம்மனின் தோளில் வணிகச்சுமை இறங்கியது. இதனால் நரசிம்மனின் படிப்பு இன்டர்மீடியட் வகுப்புடன் நின்றுபோனது.

டி.டி.கே & கோ லீவர், பல பொருள்களைத் திறம்பட சந்தைப்படுத்திவந்தா லும், ஒருகட்டத்தில் லீவர் நிறுவனம் தனது தயாரிப்புகளை விற்க, இடைத்தரகர்கள் யாரும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தது. இதனால் டி.டி.கே நிறுவனம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அந்தக் காலகட்டத்தில் லீவர், பொருள்கள் விற்பனை மூலம் ரூ.75 லட்சம் வரை டி.டி.கே & கோ வருமானம் ஈட்டிவந்தது. இது போதாதென்று இரண்டாம் உலகப்போர் வேறு ஆரம்பிக்க, இங்கிலாந்திலிருந்து பொருள்கள் எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இறக்குமதியாகும் பொருள்களை மட்டுமே நம்பி வணிகம் செய்துவந்த டி.டி.கே நிறுவனத்துக்கு கெட்ட காலம் ஆரம்பித்தது.

1945-ம் ஆண்டு வரை நிறுவனம் மோசமான நிலையில் இருந்துவந்தது. வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கடன் வாங்கும் நிலை உருவாக, கடன் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. 1946-ம் ஆண்டிலிருந்து நிலைமை கொஞ்சம் சீரடைய ஆரம்பித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஷெமூர் அண்ட் வி.ஏ.டாட்ஜ் நிறுவனம், அதன் ஏஜென்ட் நிறுவனமாக டி.டி.கே&கோ-வை நியமித்தது. இதன் மூலம் சுமார் 150 பொருள்களை இந்த நிறுவனம் விநியோகம் செய்ய ஆரம்பித்தது.

`தேவைதான் புதுமையின் தாய்’ என்பதற்கேற்ப டி.டி.கே குழுமம் பொருள்களை உற்பத்தி செய்து விற்க நினைத்தது.

லாபி செய்ய டெல்லி வராதே!

ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்தபோது, டி.டி.கிருஷ்ணமாச்சாரி ரூபத்தில் மீண்டும் ஒரு சரிவு வந்தது. நேரு மந்திரி சபையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக டி.டி.கே நியமிக்கப்பட்டார். 1952-ம் ஆண்டு அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை காரணமாக, சில நுகர்வோர் பொருள்கள், `அத்தியாவசியமற்றவை’ என அறிவிக்கப்பட்டு இறக்குமதி செய்யத் தடை செய்யப்பட்டன. இதனால் டி.டி.கே & கோ விநியோகம் செய்துவந்த பொருள்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டது. ‘இது தொடர்பாக வர்த்தக அமைச்சகத் துறையில் `லாபி’ செய்ய டெல்லி வரக் கூடாது’ என அப்பாவுக்கு (நரசிம்மனுக்கு) தாத்தா கிருஷ்ண மாச்சாரி தடை போட்டுவிட்டார்.

அமுல் கான்ட்ராக்ட் கிடையாது!

இதேபோல, இன்னொரு சிக்கலும் தாத்தா கிருஷ்ணமாச்சாரி மூலம் ஏற்பட்டது. கைரா மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமுல் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைப் பாதுகாக்க கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில் `பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்வதில் 25% குறைக்கப்பட வேண்டும்’ என ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. அப்போது அமுல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர் டாக்டர் குரியன். அமுல் நிறுவனம் தனது பொருள்களை விநியோகிக்க விநியோகஸ்தர்கள் தேவை என விளம்பரம் செய்ய, அதற்கு டி.டி.கே நிறுவனம் விண்ணப்பித்தது. டி.டி.கே நிறுவனத்துக்கு அமுல் அதன் விநியோக உரிமையைத் தர முடிவு செய்தது. இதை மந்திரி கிருஷ்ணமாச்சாரி கடுமையாக எதிர்த்தார். ‘‘குடும்ப நிறுவனத்துக்கு அமுலின் விநியோக உரிமையைத் தரவே 25% இறக்குமதி குறைப்பு சட்டத்தைக் கொண்டுவந்திருப் பதாகப் பலரும் சொல்வார்கள். எனவே, டி.டி.கே & கோ-வுக்கு உரிமம் தரக் கூடாது; அப்படித் தந்தால், அந்த உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்’’ என்று நாடாளு மன்றத்திலேயே அறிவித்தார் கிருஷ்ணமாச்சாரி. இதனால் அமுல் விநியோக உரிமையும் கிடைக்கவில்லை!

சொந்தமாகப் பொருள்கள் தயாரிப்பு!

`தேவைதான் புதுமையாக்கத்தின் தாய்’ என்பதற்கேற்ப டி.டி.கே & கோ-வே நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்து விற்க நினைத்து, அதற்கான செயலில் இறங்கியது. அதன்படி வாட்டர்மேன் இங்க், பாண்ட்ஸ் பவுடர், வுட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர், ப்ரஸ்டீஜ் பிரஷர் குக்கர் ஆகிய நான்கு பொருள்களையும் இந்தியாவில் தயாரிப்பதற்கான அனுமதியை, குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றது. இதற்கு அதிக முதலீடு தேவைப்பட்டது, கடன் சுமை அதிகமாகிக்கொண்டே போனது. ஆனால், நரசிம்மன் சற்றும் மனம் தளராமல் தன் விரிவாக்க நடவடிக்கைகளில் முழுமூச்சுடன் இறங்கினார்.

1958-ம் ஆண்டு `ஓரியன்ட் ஃபார்மா பிரைவேட் லிமிடெட்’ (இப்போது டி.டி.கே ஹெல்த்கேர்) நிறுவனத்தை ஆரம்பித்து, அதுவரை இறக்குமதி செய்து விற்பனைப்படுத்தப்பட்டுவந்த குழந்தைகளுக்கான `வுட்வர்ட்ஸ் கிரைப் வாட்டரை’ இங்கே தயாரிக்க ஆரம்பித்தார். ஜெர்மன் நாட்டு நிறுவன ஆதரவுடன் மேப்ஸ், அட்லாஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 1969-ம் ஆண்டு தஞ்சாவூரில் `டிடி இன்வெஸ்ட்மென்ட்ஸ் & டிரேட்ஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் `டான்டெக்ஸ்’ உள்ளாடைகள் தயாரிக்கப்பட்டன.

டி.டி.கே ப்ரஸ்டீஜ் சொந்தமாக ஐந்து தொழிற்சாலைகள், 23 கிடங்குகள், புதுமையாக்க மையங்கள், 50,000 வணிகர்கள் எனப் பரந்துவிரிந்து செயல்பட்டு வருகிறது.

பால்பாயின்ட் பேனா, மேப், அட்லாஸ், ப்ரஷர் குக்கர், ஆணுறை போன்ற பொருள்களின் தேவை குறித்து மக்கள் அவ்வளவாக அறியாத காலத்திலேயே அவற்றைத் தயாரித்து விற்பனை செய்து முன்னோடியாகத் திகழ்ந்தது டி.டி.கே.

திவால் டு பில்லியன் டாலர்

இன்றைக்கு டி.டி.கே குழுமத்தின் சேர்மனாக இருக்கும் டி.டி.ஜெகநாதன் (டி.டி.ஜெ), அமெரிக்கா வில் கார்னல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந் தார். ‘‘நமது நிறுவனம் சிக்கலிலிருந்தால், அதை மூடிவிட்டு இங்கு வந்து என்னோடு நிம்மதியாக இருங்கள்’’ என்று டி.டி.ஜெ தன் பெற்றோர்களிடம் சொன்னார். ஆனால், நரசிம்மனோ, ‘‘நிறுவனத்துக்காக நாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் வரை நான் இந்தியாவை விட்டு வர மாட்டேன்’’ என உறுதியாகச் சொல்லிவிட, உடனே சென்னைக்கு வந்து டி.டி.கே நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பித்தார் டி.டி.ஜெ. ஏறக்குறைய திவால் நிலையிலிருந்த அந்த நிறுவனத்தை பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழச் செய்து, அதை பில்லியன் டாலர் கம்பெனியாக உயர்த்தினார் டி.டி.ஜெ.

மனைவியை நேசிப்பவர்கள்

இல்லத் தலைவிகள் சமையலறையில் படும்பாட்டைத் தெரிந்துகொண்டு சமையலை எளிதாக்கும் வகையில் 1959-ம் ஆண்டு `ப்ரஸ்டீஜ் ப்ரஷர் குக்கரை’ அறிமுகப்படுத்தினார் டி.டி.ஜெ. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 15 மில்லியன் குக்கர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் டி.டி.கே நிறுவனத்தின் பங்கு சுமார் 5 மில்லியன். குழும வருமானத்தில் டி.டி.கே ப்ரஸ்டீஜ் நிறுவனத்தின் பங்களிப்பு சுமார் 35% ஆகும். இன்றைக்கு இந்த நிறுவனம் வீட்டுக்கும், சமையல்கட்டுக்கும் தேவைப்படும் வகையில் சுமார் 600 பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தக் குழுமத்தின் பிரதான நிறுவனமாக இருக்கும் டி.டி.கே ப்ரஸ்டீஜ் சொந்தமாக ஐந்து தொழிற்சாலை கள், 23 கிடங்குகள், பல இடங்களில் புதுமை யாக்க மையங்கள், இந்தியாவெங்கும் 50,000 வணிகர்கள், சர்வதேச அளவில் பிரதிநிதித்துவம் எனப் பரந்துவிரிந்து செயல்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டு இதன் வருமானம் ரூ.100 கோடி, 2013-ம் ஆண்டு இதன் வருமானம் ரூ.1,300 கோடி. பங்குச் சந்தையிலும் இந்த நிறுவனப் பங்கு 4,000 ரூபாயில் ஆரம்பித்து, 2017-ம் ஆண்டு 6,500 ரூபாயைத் தொட்டு, இன்றைக்கு சுமார் ரூ.8,000 வரை பரிவர்த்தனையாகி வருகிறது. இதன் சந்தை மூலதனம் ரூ.10,000 கோடிக்குமேல்.

இந்தப் புத்தகம் மூன்று தலைமுறைகள் சம்பந்தப்பட்ட வணிகக் கதை. நூறு ஆண்டுகளில் இந்த நிறுவனம் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்பதை விவரிப்பது. பிசினஸில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் படிக்கலாம்!

ஓவியம்: பாரதிராஜா

டி.டி.கே.வின் கட்டளைகள்...

நஷ்டத்துக்கு வணிகம் செய்யக் கூடாது.

வணிகத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்.

தயாரிப்புகள் குறித்து உண்மையான கருத்துகளை அறிய முகவர்களை, நுகர்வோர்களைச் சந்திப்பது அவசியம்.

தொழில் செய்யும் வழிமுறையைப் புதுமையாக மாற்றுங்கள்.

இலக்குகள் மாறலாம்; ஆனால், மாற்றத்துக்கான செயல்பாடுகள் மாறாது.

வியாபாரம் வளர உங்கள் `ஈகோ’வை மூட்டைகட்டி வையுங்கள்.

உங்கள் பிராண்ட்மீது யாரும், மறக்க முடியாத ஒரு `கதை’யை உருவாக்குங்கள்.

வெற்றி பெறும்வரை அடுத்தடுத்த யோசனைகளை முயன்று பாருங்கள்.