Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோமுக்கு ஏற்ற வீடுகள், பழைய கார்களுக்கு கூடும் மவுசு!

கார் - வீடுகள்
கார் - வீடுகள்

பொருளாதார பாதிப்பு, நிறுவனங்களின் வருவாய் இழப்பு, ஊழியர்களுக்கு ஊதியம் குறைப்பு, பணிநீக்கம் போன்றவை மக்களின் கவனத்தைப் புது கார்களிலிருந்து பழைய கார் பக்கம் திருப்பியிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த முன்னணி டி.எம்.டி கம்பிகள் உற்பத்தி நிறுவனமான ஜி.பி.ஆர் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் ரதி பேசும்போது, ''கட்டுமானத்துறை என்பது 200 துறைகளின் தாய்த்துறையாக இருக்கிறது. இதில் சப்ளையர்களின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் ஸ்டீல் விநியோகம் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றிவருகிறது.

தற்போது, `வீட்டிலிருந்து வேலை' என்பது புதிய இயல்பாக மாறியிருக்கிறது. வீட்டிலேயே ஓர் அலுவலக அறை உருவாக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், வீடுகள் பற்றிய அபிப்ராயம் மாறியிருக்கிறது.

பில்டர்கள் அலுவலக அறையுடன் வீடு கட்டி விற்பனை செய்யும் காலம் விரைவிலேயே வரும். நீண்டகாலத்தில், சென்னை தவிர்த்த தமிழகத்தின் இதர நகரங்களில் ரியல் எஸ்டேட் தேவை அதிகமாக இருக்கும். புதிய இயல்பு நிலையால் டயர் 2, டயர் 3 நகரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும். அதுவும் வாங்கக்கூடிய வீடுகளுக்குத் தேவை உயரும்.

கட்டுமானத்தில் செலவு குறைப்பு மற்றும் விரைந்து முடிப்பது மிக முக்கியம். ஸ்டீல் கம்பிகள் இப்போது ரெடிமேடாகக் கிடைக்கின்றன. நாங்களும் ரெடிமேட் ஸ்டீல் கம்பிகளை விற்பனை செய்கிறோம். இதனால் செலவு குறைவதோடு, விரைவாகவும் வீடுகளைக் கட்டி முடிக்க முடியும்" என்றார்.

கட்டுமானத்துறை
கட்டுமானத்துறை

இன்றைக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாகி யிருக்கும் துறைகளில் முக்கியமானது கட்டுமானத்துறை. காரணம், விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவது கட்டுமானத்துறை.

இந்தத் துறை தற்போது சந்தித்துவரும் சவால்களையும், இனிவரும் காலத்திலுள்ள எக்கச்சக்கமான வாய்ப்புகளையும் பற்றி அலசி ஆராய நாணயம் விகடனும், ஜி.பி.ஆர் டி.எம்.டி (GBR TMT) நிறுவனமும் இணைந்து 'கட்டுமானத் தொழில்-சவால்களும் வாய்ப்புகளும்' என்ற தலைப்பில் (Builders Meet) ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் நிபுணர்களால் பகிரப்பட்ட தகவல்களை நாணயம் விகடன் இதழில் வாசிக்க https://bit.ly/31zrO41> கட்டுமானத்துறை... வாய்ப்புகளும் சவால்களும்..! - நிபுணர்கள் அளித்த டிப்ஸ்... படிக்க க்ளிக் செய்க... https://bit.ly/31zrO41

பட்டையைக் கிளப்பும் பழைய கார்கள்..!

கொரோனா தொற்றுநோயால் கார்களின் விற்பனை கொஞ்சம் சுணங்கி யிருந்தாலும், செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை தற்போது படுவேகமாக இருக்கிறது.

பொருளாதார பாதிப்பு, நிறுவனங்களின் வருவாய் இழப்பு, ஊழியர்களுக்கு ஊதியம் குறைப்பு, பணிநீக்கம் போன்றவை மக்களின் கவனத்தைப் புது கார்களிலிருந்து பழைய கார் பக்கம் திருப்பியிருக்கிறது.

தொழில் நகரமான கோவை, தமிழகத்தின் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு முக்கியமான ஒரு கேந்திரம். சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து கோவைக்கு வந்து கார்களை வாங்கும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள் கோவை கார் டீலர்கள்.

கார்
கார்

செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை குறித்து விளக்கமாகத் தெரிந்துகொள்ள நவ இந்தியா பகுதியிலுள்ள மாருதி ட்ரூ வேல்யூ ஷோ ரூமில், அம்பாள் ஆட்டோ உரிமையாளர் அசோகனிடம் பேசும்போது, "நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோமொபைல் துறையில் இருக்கிறோம். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக செகண்ட் ஹேண்ட் கார்களையும் விற்றுவருகிறோம். செகண்ட் ஹேண்ட் கார்களைப் பொறுத்தவரை, ஊரடங்குக்கு முன்பிருந்த வரவேற்பைவிட தற்போது சீராக அதிகரித்துவருகிறது.

செகண்ட் ஹேண்ட் கார் வேண்டும் என்று முன்பு ஒரு நாளைக்கு எட்டுப் பேர் வரை நேரடியாக வருவார்கள். இப்போது 10 முதல் 12 பேர் வரை நேரடியாக வருகிறார்கள். செகண்ட் ஹேண்ட் கார் வேண்டும் என்று விசாரிப்பவர்களின் எண்ணிக்கை 30% வரை அதிகரித்துள்ளது"

என்றார்.

- இதுதொடர்பான முழுமையான செய்திக் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2PFSdaY> செகண்ட் ஹேண்ட் காருக்குத்தான் இப்போது மவுசு! - பட்டையைக் கிளப்பும் பழைய கார்கள்..! https://bit.ly/2PFSdaY

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு