Published:Updated:

எச்.ஐ.வி பாதிப்பு மாணவருக்கு அரசுப் பள்ளியில் அனுமதி மறுப்பு!- களமிறங்கியது மனித உரிமை ஆணையம்

சி.ய.ஆனந்தகுமார்
எம்.திலீபன்

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசுப் பள்ளியில் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுள்ள மாணவருக்கு அனுமதி மறுப்பு
எச்.ஐ.வி தொற்றுள்ள மாணவருக்கு அனுமதி மறுப்பு

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் (பெயர் மாற்றம்), அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த 2016- 2017ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன் ராமநாதனின் தாய் உடல் நலக்குறைவால் இறந்துபோனார்.

எச்.ஐ.வி தொற்றுள்ள மாணவருக்கு அனுமதி மறுப்பு
எச்.ஐ.வி தொற்றுள்ள மாணவருக்கு அனுமதி மறுப்பு

பெரம்பலுார் அரசு மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்துவந்த ராமநாதனை கவனித்துக்கொள்ள ஆள் இல்லை. இதைத்தொடர்ந்து, கிராமத்திலேயே பத்தாம் வகுப்பு படிக்க ஆசைப்பட்ட ராமநாதன் தன் அத்தை மற்றும் உறவினர்களுடன் பள்ளிக்குச் சென்று, தனக்கு அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்க சேர்க்கை வழங்குமாறு கேட்டுள்ளார்.

ராமநாதனுக்கு ஹெச்.ஐ.வி தொற்று நோய் பாதிப்பு உள்ளதால், சேர்க்கை வழங்க பள்ளித் தலைமையாசிரியர் மறுத்திருக்கிறார். இந்த நிலையில், தனக்குச் சேர்க்கை வழங்காத பள்ளி தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தனக்கு அப்பள்ளியிலேயே சேர்க்கை வழங்கி படிப்பைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என பெரம்பலுார் கலெக்டர் சாந்தாவிடம், மாணவன் ராமநாதன் தனது உறவினர்களுடன் சென்று கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட, கலெக்டர் சாந்தா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மனித உரிமை ஆணைய நோட்டீஸ்
மனித உரிமை ஆணைய நோட்டீஸ்

இந்த நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர் காமராஜ், `சம்பந்தப்பட்ட மாணவருக்கு கற்றல் திறன் குறைவாக இருப்பதாகவும் அதனாலேயே அவர் ஏற்கெனவே பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்குப் படிக்கச் சென்றார் என்றும் இந்தவருடம் யாரும் அந்த மாணவரை பள்ளியில் சேர்ப்பதற்கு தன்னை அணுகவில்லை என்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், இன்று தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டதுடன், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் நான்கு வாரத்துக்குள் முறையான அறிக்கை வழங்கிட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.