Published:Updated:

“இப்பவும் அவனுக்கு மனுஷங்களைப் பிடிக்குது!”

காசி - சுதா
பிரீமியம் ஸ்டோரி
காசி - சுதா

அனைத்து உயிர்களிடமும் அன்பை விதைப்போம்.

“இப்பவும் அவனுக்கு மனுஷங்களைப் பிடிக்குது!”

அனைத்து உயிர்களிடமும் அன்பை விதைப்போம்.

Published:Updated:
காசி - சுதா
பிரீமியம் ஸ்டோரி
காசி - சுதா
ரண்டு கால்களின் பாதங்களும் யாராலோ வெட்டப்பட்ட நிலையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தப் பொமரேனியன் நாய்க்குட்டி. மனித உயிரே மலிவாக நினைக்கப்படும் இந்தக் காலத்தில், அந்த நாய்க்குட்டியின் வேதனையை யோசித்துப் பார்க்கவெல்லாம் நம்மில் பலருக்கும் நேரம் கிடையாது. ஆனால், ‘Humane animal society’ என்ற அமைப்பினர், அந்த நாய்க்குட்டியை மீட்டு சிகிச்சை கொடுத்தனர். ‘வீரா’ என்று பெயரிட்டு அதற்கு மறுவாழ்வு கொடுத்தனர். தற்போது கோவை சாய்பாபா காலனியில் காசி என்பவரின் குடும்பத்தில் வீராவும் ஓர் அங்கம். அதை மீண்டும் நடக்க வைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
“இப்பவும் அவனுக்கு மனுஷங்களைப் பிடிக்குது!”

வீராவைப் பார்க்கப் போன நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார் காசி. “நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். என் மகள் காயத்ரி சென்னைல ஒரு ஐ.டி கம்பெனில வேலை பார்த்துட்டு இருக்காங்க. லாக்டெளன் காரணமா, இப்ப வொர்க் ப்ரம் ஹோம்தான். அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே, நாய்க்குட்டிங்க மேல ஆர்வம் அதிகம். கால்ல காயங்களோட இருக்கிற ஒரு நாய்க்குட்டியைக் கொண்டு வரேன்னு சொன்னாங்க. சரி, சும்மா அழகுக்கும், பாதுகாப்புக்கும் வளத்த மாதிரி இல்லாம, ஒரு உயிருக்கு உதவி செஞ்சு ஆறுதல் கிடைக்கும்னு யோசிச்சோம். வீரா எங்க வீட்டுக்கு வந்தப்பறம்தான், இது மனுஷங்க செஞ்ச கொடுமைன்னு தெரிஞ்சுது. அதைப் பார்த்தோனயே எனக்கு அது மேல பாசம் வந்துருச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காசி - சுதா
காசி - சுதா

இங்க வந்த புதுசுல வீராவுக்கு அதிக மன அழுத்தம் இருந்துச்சு. முன்னங்கால்களைக் கடிச்சுக் காயம் பண்ணி வச்சிருந்தான். அதைச் சரி பண்ணினோம். ஆனாலும் எங்களோட நெருங்காம இருந்தான். ஒருமுறை, வீராவையும் கூட்டிட்டு ஊட்டி போயிருந்தோம். அங்க புல்தரைல வீரா நல்லாவே ஓடினான். அப்பதான், வீராவுக்கு நடக்க ஆசையா இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டோம். ஏதாவது பண்ணலாம்னு இணையதளங்களில் பார்த்தப்ப, வீல் சேர் மாதிரி ஒரு கருவி இருந்துச்சு. ஆனா, அது ரொம்ப காஸ்ட்லி. அதை நாமளே செஞ்சு பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன். குழந்தைங்க சைக்கிள்ல இருக்கற டயர்ஸ், பி.வி.சி பைப், ஜாய்ண்டு, போல்ட் நட் வெச்சு ட்ரை பண்ணினேன். ஓரளவுக்கு வெற்றி கிடைச்சிருக்கு. இதுல வீரா நடக்க முயற்சி பண்றான். நாய்களைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க, ‘அதுக்கு இந்தக் கருவி புடிச்சிருக்கு, அதனாலதான் அதுல அமைதியா இருக்கு’ன்னு சொன்னாங்க. அதேநேரத்துல அவனுக்கு இன்னும் கால்ல வலி இருக்குன்னு நினைக்கிறேன். அந்த வலி தெரியாம இருக்கற மாதிரி ஒரு கருவி செய்யணும்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காசியின் மகள் காயத்ரி, “நான் HAS அமைப்போட இடத்துக்குப் போனப்ப, அங்க நிறைய நாய்ங்க இருந்துச்சு. அதுல பார்க்க க்யூட்டா, சுட்டித்தனம் பண்ணிக்கிட்டு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்தான் வீரா. வீராவுக்கு நடந்த கொடுமை எங்களை ரொம்ப பாதிச்சுது. வீட்டுக்கு வந்து இப்ப என்கூட நல்லா செட் ஆகிட்டான். அவனுக்கு என்ன தேவைன்னாலும் கேட்பான். மாடில ஜாலியா சுத்துவான். பால்கனில வேடிக்கை பார்ப்பான். சிக்கன், மட்டன், முட்டைன்னா ரொம்பப் பிடிக்கும். வெளிய வாக்கிங் போறப்ப, பெரிய நாய்களைப் பார்த்தா பயப்படறான். அவன் மனசுல இன்னும் அந்தச் சம்பவத்தோட பாதிப்பு இருக்குன்னு நினைக்கறேன். இவ்வளவு நடந்தும் மனுஷங்கள ரொம்பப் பிடிக்குது. அவனைச் சுத்தி ஆளுங்க இருந்துட்டே இருக்கணும். இல்லாட்டி கடுப்பாகிடுவான். அதேமாதிரி நான் அவன்கூட இருக்கறப்ப, வேற எதுவும் பண்ணக் கூடாது. நான் போன் பேசினா அவனுக்குப் பிடிக்காது. வந்து தட்டி விடுவான். என்கூட ஹைட் அண்ட் சீக் விளையாடுவான்” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, உள்ளே இருந்து வீரா சத்தம் போட்டது.

“இப்பவும் அவனுக்கு மனுஷங்களைப் பிடிக்குது!”

“அவனை விட்டுட்டு பேசிட்டு இருக்கோம்ல... அதான் கத்தறான்” என்று உள்ளே சென்று வீராவைத் தூக்கிவந்து, தனது மடியில் படுக்க வைத்தார் காயத்திரி. தாயின் மடியில் கண் உறங்கும் குழந்தையைப் போல, சிறிது நேரத்தில் வீரா உறங்கியது.

காசியின் மனைவி சுதா, “குழந்தைங்க கையை நீட்டித் தூக்கச் சொல்ற மாதிரி, இவன் முன்னங்கால்களை நீட்டித் தூக்கச் சொல்வான். எங்ககிட்ட மட்டுமல்லாம, எங்களோட உறவினர்கள் கிட்டயும் வீரா செல்லமாகிட்டான். எங்க வீட்டுக் குழந்தைகளுக்கு இப்போ வீராதான் பெஸ்ட் பிரெண்ட்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

காசி, “மனிதர்களை நம்பி, நம்மளோட வாழ நாய்கள் பழகிடுச்சு. இங்க எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ உரிமை இருக்கு. எந்த உயிர் மேலயும் வன்முறை செலுத்தற உரிமை நமக்குக் கிடையாது’’ என்றார் அழுத்தமாக.

அனைத்து உயிர்களிடமும் அன்பை விதைப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism