Published:Updated:

`தெலங்கானாவில் மாயமான இளம்பெண்; துப்புதுலங்காமல் தவிக்கும் தனிப்படை!’- 9 நாள்களாக கலங்கும் உறவுகள்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமாகி 9 நாள்கள் ஆகிய நிலையில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

மாயம்
மாயம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ரோஹிதா (வயது 34) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். டிசம்பர் மாதம் 26-ம் தேதி முதல் ரோஹிதாவை காணவில்லை என அவரின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரோஹிதா மாயமாகி இன்றுடன் 9 நாள்கள் ஆகிவிடன. ஆனால், இந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

 மாயம்
மாயம்

காவல்துறையினர் மீது நம்பிக்கை இல்லை என அவர்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சமூகவலைதளங்கள் மூலம் தங்கள் மகளைக் கண்டுபிடித்து தரக்கோரி பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தப்பெண் குறித்த தகவல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு உதவி கோரியுள்ளனர். `வுமன் விஷன்’ என்ற முகநூல் பதிவில் ஒரு பெண் மாயமாகி 9 நாள்கள் ஆகிவிட்டன. இதுவரை இந்த வழக்கில் ஒரு துப்புகூட கிடைக்கவில்லை. அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோஹிதா தன் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்தப் பெண்ணை டிசம்பர் 26-ம் தேதி முதலே காணவில்லை. அவர்ன் குடும்பத்தினர் மூன்று நாள்களந்த் தேடி வந்துள்ளனர். அதன் பின்னரே டிசம்பர் 29-ம் தேதி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் பணியாற்றி வந்த தனியார் நிறுவனம் மற்றும் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

`தெலங்கானாவில் மாயமான இளம்பெண்; துப்புதுலங்காமல் தவிக்கும் தனிப்படை!’- 9 நாள்களாக கலங்கும் உறவுகள்

முதலில் அவரது மொபைல்போனை கொண்டு ட்ரேஸ் செய்து கண்டுபிடித்துவிடலாம் எனக் காவல்துறையினர் நினைத்துள்ளனர். ஆனால், அவர் தன்னுடைய போனை அப்பார்ட்மென்டிலே வைத்துள்ளார். இதையடுத்து அவர் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட் மற்றும் அவர் பணியாற்றி வந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தன்னுடைய அப்பார்ட்மென்டில் இருந்து ஆட்டோவில் ஏறியவர் காச்சிபவுலி பகுதியில் இறங்கியுள்ளார். அங்கிருந்து சாலையைக் கடந்து சென்றுள்ளார். சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என போலீஸார் கூறுவதாக அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டு தனிப்படை அமைத்து சைபராபாத் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.