Published:Updated:

iஅக்கா

iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
iஅக்கா

வேணும் விஷன்! எவ்வளவு பெரிய பயணம்னாலும் முதலடிதானே தொடங்கும்?

iஅக்கா

வேணும் விஷன்! எவ்வளவு பெரிய பயணம்னாலும் முதலடிதானே தொடங்கும்?

Published:Updated:
iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
iஅக்கா

ன் பேரு iஅக்கா. அவள் வாசகிகளுக்கு ஒரு பெரிய ஹைஃபை. கொரோனா காலம். அதனால உள்ளங்கைய மடக்கி ஹைஃபை கொடுப்போம். உங்களுக்கு நிறைய பேரு, நிறைய விஷயங்கள பத்தி டிப்ஸ் தந்திருப்பாங்க. நீங்களும் நிறைய டிப்ஸ் மத்தவங்களுக்குத் தந்திருப்பீங்க. ஆனா, நான் சொல்லப்போறது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். இது ஸ்மார்ட் உலகம் இல்லையா? அதுக்கேத்த விஷயங்களைக் கொஞ்சம் கலந்து சொல்வேன். அவ்ளோதான். அதான் என் பேரு iஅக்கா. `i'ன்னா அது இணையத்தைக் குறிக்கும்னு தெரியும்ல? சரி பேச்சைக் குறைப்போம். விஷயத்துக்கு வருவோம். இந்த இதழ்ல ஹோம் மேக்கிங்ன்ற விஷயத்தைச் சிறப்பா செய்ய சில விஷயங்களைச் சொல்றேன்.

வேணும் விஷன்! எவ்வளவு பெரிய பயணம்னாலும் முதலடிதானே தொடங்கும்?

அந்த மாதிரி கனவு வீடுன்றது நம்ம கனவுலாம் தொடங்கணும். ஆனா, அந்தக் கனவுக்கு பேரு விஷன். உங்க வீடு எப்படி இருக்கணும்னு முதல்ல மனசுக்குள்ள ஒரு விஷன் வேணும். அப்பதான் அத நோக்கி நகர முடியும். அஞ்சு வருஷம் கழிச்சு உங்க வீடு எப்படி இருக்கணும்? யோசிங்க. ‘என் வீடு உறவுகளாலும் நண்பர்களாலும் சூழ்ந்து இருக்கணும்’, ‘என் வீடு குழந்தைகளின் உலகமா இருக்கணும்’, ‘என் வீடு இந்தப் பூமிக்கு பாரமாக்குற எந்த விஷயத்தையும் செய்யாது’ இப்படி எதுவா வேணும்னாலும் அது இருக்கணும். ஆனா, அந்த விஷன் முக்கியம். சரியா?

பிளான் பண்ணி பண்ணுவோம்:

`நடப்பது நடக்கட்டும்'னு நாம நினைச்சா அவ்ளோதாங்க. உலகத்துலயே சந்தோஷமா இருக்க வேண்டிய இடம் வீடுதான். கஷ்டமான இடமும் வீடுதான். அதனால, நாம ஹாயா இருந்தா, ஹேப்பியா இருக்க முடியாது. நம்ம விஷனுக்கேத்த பிளான் போடுவோம். அதுல ஏகப்பட்ட இடைஞ்சல் வரலாம். பிளானே இல்லாம இருந்தா வேலை நடக்காது. ஒரு ரொட்டீனுக்குள்ள வர ஒரு திட்டம் தீட்டுங்க தோழி. மத்தது எல்லாம் உங்க பின்னால தானா வரலைன்னா என்னைக் கேளுங்க.

எங்கே அந்த அலாரம்?

இப்ப நான் சொல்லப் போற விஷயம் பல பேருக்குப் பிடிக்காதுதான். காலையில சீக்கிரம் எழுந்தா நம்ம அன்றாட வேலைகள் ஈஸியா முடியும். எவ்ளோ ஆய்வு பண்ணிப் பார்த்துட்டாங்க. இதான் சுலபமான வழியாம். அதனால உங்க பிளானை பக்காவா செயல்படுத்தி, உங்க விஷனை சீக்கிரம் அடையணும்னா, காலையில சீக்கிரம் எழுந்து தான் ஆகணுமாம். நீங்க ஐ.பி.எல் பார்ப்பீங்களா? அதுல ஃப்ரீஹிட் கிடைக்கும்ல. அந்த மாதிரிதான் இந்த விஷயம். யூஸ் பண்ணா உங்களுக்குத்தான் நல்லது.

சாப்பிடுங்க ஃப்ரெண்டு!

ரொம்ப ரொம்ப முக்கியம். வீட்டுல மத்தவங்க சாப்பிடுறது இல்ல. நாம சாப்பிடுறது. அதுவும் நேரத்துக்கு சாப்பிடுறது. சரியான உணவை, சரியான அளவு சாப்பிடறது. பசங்க மீதம் வைக்கிறதை சாப்பிடுறதால வீட்டுக்கு நல்லது செய்றதா நினைக்கறீங்களா? இல்லைவே இல்லை. நாம என்ன நடமாடும் ஃப்ரிட்ஜா? மீந்து போறத ஸ்டோர் பண்ணி வைக்க. நம்ம ஆரோக்கியம் தான் நம்ம வீட்டோட ஆரோக்கியம். நாம அடுத்த அஞ்சு வருஷத்துக்கு ஒரு விஷன் வெச்சு, வடிவேலு கணக்கா அதை நோக்கி வேகமா போயிட்டு இருக்கோம். குறுக்குல மண்ணு லாரி (அதாங்க உடம்பு சரியில்லாம போறது) வந்துடக் கூடாதில்லை... அதனால ஒழுங்கா சாப்பிடுங்க.

பொருள்களை அடைக்காதீங்க?

எப்பவோ நடக்கப் போற மகளோட கல்யாணத்துக்கு இப்பவே பொருளைச் சேர்த்து வைக்கிறது நம்ம முன்னோர்கள் செஞ்ச விஷயம் தான். ஆனா, அப்பல்லாம் வீடுன்னா பெருசா இருக்கும். இப்ப அப்படியா... சிங்கிள் பெட்ரூம் வீட்டுல நாலு பேரு வாழறப்ப வாங்குற பொருளை கவனமா வாங்குங்க. ஆன்லைன்ல ஆர்டர் பண்ணா அடுத்த நாளே வீட்டுக்கு வந்துடும். அதனால இப்ப தேவையில்லாத பொருளை வாங்கிக் குவிக்காதீங்க.

ஸ்மார்ட்டா இருங்க...

இணையமும் கேட்ஜெட்களும் இனியும் ஆடம்பரம்னு சொல்ல முடியாது. அவை தேவையானதா மாறியாச்சு. தண்ணி டேங்க் நிரம்பிட்டா தானா ஆஃப் ஆகுற மோட்டார் வந்தாச்சுல்ல... அதுவே ஸ்மார்ட் தான். அந்த மாதிரி நம்ம வீட்டுக்குத் தேவையான பொருள் என்னன்னு பாருங்க. ஆனா, அதை எப்படிப் பயன்படுத்தணும், அதுல இருக்கிற ரிஸ்க் என்னன்னுல் லாம்னு தெரிஞ்சுக்கிட்டுப் பயன்படுத்துங்க. அதைக் கத்துக்காம, ஸ்மார்ட் பொருள் களைத் தவிர்த்தா கொஞ்ச காலம் கழிச்சு நாம மத்தவங்களவிட பின் தங்கியவங்களா ஆகிடுவோம். அப்புறம் எப்படி நம்ம விஷனை நோக்கி முன்னேறுவது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism