Published:Updated:

`போட்டோஷாப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா! - வைரல் போட்டாவும்... இவாங்கா ட்ரம்ப்பும்!

போட்டோஷாப்
போட்டோஷாப்

இவாங்கா ட்ரம்ப் தாஜ்மகால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய வருகையின்போது அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தன் கணவர் ஜாரெட்டுடன் வந்திருந்தார். உலக அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் காதல் சின்னமான தாஜ்மகால் முன்பு நின்று, இவாங்கா தன் கணவருடனும் தனியாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

`போட்டோஷாப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா! - வைரல் போட்டாவும்... இவாங்கா ட்ரம்ப்பும்!

இவாங்காவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் என்ற ஒற்றை வாக்கியத்தில் அடக்கிவிட முடியாது. தொழிலதிபர், தொழில் முனைவோர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். இவாங்காவின் இந்திய வருகையின்போது அவர் அணிந்திருந்த ஆடைகள் குறித்தும் பேசப்பட்டது. ஃபேஷன் துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

இவாங்கா ட்ரம்ப் தாஜ்மகாலில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இந்தப் புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளியது. இதையடுத்து இவாங்காவுடன் இருப்பது போன்று புகைப்படங்களை போட்டோஷாப் செய்து வெளியிட்டு வருகின்றனர் நம்மூர் இளைஞர்கள். இந்த போட்டோஷாப் புகைப்படங்கள் இவாங்கா கண்ணில் தென்பட உற்சாகமாகிவிட்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இவாங்கா, ``இந்தியர்களின் அன்பை வரவேற்று மகிழ்கிறேன். எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாபி நடிகரும் பாடகருமான தில்ஜித், தனது ட்விட்டர் பக்கத்தில் இவாங்காவுடன் தாஜ்மகாலில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். போட்டோ கேப்ஷனில் `என் வாழ்க்கையில் இவாங்கா வந்தவுடன் அவரைநான் தாஜ்மகாலுக்கு அழைத்துச் சென்றேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவுக்கு நகைச்சுவையாகப் பதிலளித்துள்ள இவாங்கா, ``என்னை தாஜ்மகாலுக்கு அழைத்துச் சென்றதுக்கு நன்றி. இது ஒரு மறக்க முடியாத தருணம்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு