Published:Updated:

’தூக்கத்தை தொலைத்தேன்; அந்த கண்களில் பயத்தைக் கண்டேன்!’-அமெரிக்கா நிலையை விளக்கும் செவிலியரின் பதிவு

வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா விவகாரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகத்தையே முடக்கியுள்ளது கொரோனா வைரஸ். வெறிச்சோடிய வீதிகள், முகமூடி அணிந்த முகங்கள், வடுக்களுடன் காணப்படும் மருத்துவர்கள், செவிலியர்களின் முகங்கள் எனக் கடந்த சில நாள்களாக நாம் சமூகவலைதளத்தில் பார்த்த கேள்விப்பட்ட விஷயங்கள் தற்போது இங்கும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள் என்ற செய்திகள் வரத் தொடங்கிவிட்டன.

கொரோனா
கொரோனா

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்கிறது அரசு. அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். தனி மனித சுகாதாரம் அவசியம். சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளது. மக்கள் வெளியில் வரவேண்டாம் அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அதிக பாதிப்புக்கு உள்ளான நாடு... சீனாவை விஞ்சிய அமெரிக்கா! -அச்சத்தில் மக்கள் #Corona

தமிழகத்தில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அரசு இவ்வளவு எச்சரித்தும் மக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை என்றுதான் கூறவேண்டும். சாலைகளில் ஆங்காங்கே மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா விவகாரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 83,836 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 35 பேர் மட்டுமே இதுவரை குணமடைந்துள்ளனர். 1,209 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Representation image
Representation image

நியூயார்கில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கண்டு மனமுடைந்த ஒரு செவிலியரின் முகநூல் பதிவை சிஎன்என் வெளியிட்டுள்ளது. “என்னால் உறங்க முடியவில்லை. என் மனம் ஒருநிலையில் இல்லை. எனக்கு இடைவெளி கிடைக்கும்போதெல்லாம் நான் ஓய்வறைக்குச் சென்று கண்ணீர் வடிக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியர்வையைத் துடைப்பதற்காக மாஸ்கை அகற்றும்போது என் முகத்தில் இருக்கும் வடுக்களை நான் உணர்கிறேன். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்வரையிலான எனது பயணம் கண்ணீரோடுதான் இருக்கிறது. நோயாளிகள் இடைவிடாமல் இருமிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்க்கிறது. காய்ச்சல் இருக்கிறது. அவர்களின் கண்களில் பயத்தைப் பார்க்க முடிகிறது.

மாஸ்க்
மாஸ்க்

உயிரிழந்தவர்களுக்காக நான் கண்ணீர் வடிக்கிறேன். 10 நிமிடங்களுக்குள்ளாக 5 நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம். நான் பயந்துவிட்டேன் அவர்களுக்காவும் அழுதேன். இது மோசமானது என எங்களுக்கு தெரியும். எங்களால் முடிந்தவற்றை நாங்கள் செய்துவிட்டோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட யாருக்கும் அனுமதி கிடையாது. உங்களுக்கு நெருக்கமானவர்கள் அவர்களின் இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கும் போதும் உங்களால் அவர்களுக்கு அருகில் இருக்க முடியாது” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு